ராகம அணியை சுழலால் துவம்சம் செய்த ஷெஹான் ஜயசூரிய

211

இலங்கை கிரிக்கெட் சபை நடத்தும் 2017/18 ஆம் ஆண்டின் உள்ளூர் பருவத்திற்கான பிரீமியர் லீக் A நிலை தொடரின் நான்கு சுப்பர் 8 சுற்று போட்டிகள் செவ்வாய்கிழமை (06) ஆரம்பமாகின.

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் ராகம கிரிக்கெட் கழகம்

ஷெஹான் ஜயசூரியவின் சுழலுக்கு முகம்கொடுக்க முடியாமல் சிலாபம் மேரியன்ஸ் அணிக்கு எதிராக ராகம கிரிக்கெட் கழகம் முதல் இன்னிங்சில் 57 ஓட்டங்களுக்கே சுருண்டது.

கொழும்பு பி சரா ஓவல் மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய ராகம வீரர்கள் வந்த வேகத்திலேயே ஓய்வறை திரும்பினர். சிலாபம் மேரியன்ஸ் அணி சார்பாக ஷெஹான் ஜயசூரிய 7 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

இலங்கை – மேற்கிந்திய தீவுகள் இடையில் நடைபெறவுள்ள முதல் பகலிரவு டெஸ்ட்

பந்துவீச்சில் சோபித்த ஷெஹான் ஜயசூரிய துடுப்பாட்டத்தில் 80 ஓட்டங்களை குவிக்க சிலாபம் மேரியன்ஸ் அணி தனது முதல் இன்னிங்சுக்காக சகல விக்கெட்டுகளையும் இழந்து 211 ஓட்டங்களை பெற்றது. இந்நிலையில் ராகம கிரிக்கெட் கழகம் இன்னிங்ஸ் தோல்வி ஒன்றை தவிர்க்க போராட வேண்டி உள்ளது.

போட்டியின் சுருக்கம்

ராகம கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 57 (29.2) – அக்சு பெர்னாண்டோ 20, ஷெஹான் ஜயசூரிய 7/22, மலிந்த புஷ்பகுமார 2/08

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் (முதல் இன்னிங்ஸ்) – 211 (52.3) – ஷெஹான் ஜயசூரிய 80, சச்சித்ர சேரசிங்க 24, கசுன் விதுர 23, ரோஹித் தமோதரன் 21, நிஷான் பீரிஸ் 4/79, அக்சு பெர்னாண்டோ 3/24, சஹன் நாணயக்கார 2/64

ராகம கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 7/0 (4)


கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் இலங்கை துறைமுக அதிகாரசபை கிரிக்கெட் கழகம்

கொழும்பு SSC மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியில் இலங்கை துறைமுக அதிகாரசபை சுழல் பந்து வீச்சாளர்களுக்கு முகம்கொடுக்க முடியாமல் கோல்ட்ஸ் அணி முதல் இன்னிங்சில் 92 ஓட்டங்களுக்கே சுருண்டது.

மூன்று பந்துவீச்சாளர்களை மாத்திரம் பயன்படுத்திய துறைமுக அதிகாரசபை அணி சார்பில் சானக்க கோமசாரு 5 விக்கெட்டுகளையும் மதுக லியனபதிரனகே 4 விக்கெட்டுகளையும் பதம்பார்த்தனர்.

பின்னர் தமது முதல் இன்னிங்சை ஆரம்பித்த துறைமுக அதிகாரசபை அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவின் போது 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 180 ஓட்டங்களுடன் வலுவான நிலையில் உள்ளது.

போட்டியின் சுருக்கம்

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 92 (26.3) – சானக்க கோமசாரு 5/38, மதுக லியனபதிரனகே 4/44

இலங்கை துறைமுக அதிகாரசபை கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 180/2 (50) – நிக் கொம்ப்டன் 50, நிசல் ரந்திக்க 42, யொஹான் டி சில்வா 40, இஷான் ரங்கன 33*,


செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் எதிர் NCC

தரிந்து கௌஷால் பெற்ற சதத்தின் உதவியோடு செரசன்ஸ் விளையாட்டுக் கழகத்திற்கு எதிரான போட்டியில் NCC அணி முதல் இன்னிங்சில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 284 ஓட்டங்களை பெற்றது.

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய NCC அணியின் முதல் 5 விக்கெட்டுகளும் 34 ஓட்டங்களுக்கு பறிபோன நிலையில் பின் வரிசையில் வந்த தரிந்து கௌஷால் அபாரமாக துடுப்பெடுத்தாடி 131 ஓட்டங்களை பெற்றார்.

போட்டியின் சுருக்கம்   

​NCC (முதல் இன்னிங்ஸ்) – 284 (83) – தரிந்து கௌஷால் 131, சதுரங்க டி சில்வா 59, லசித் அம்புல்தெனிய 24*, மொஹமட் டில்ஷாட் 3/38, ரனித்த லியனாரச்சி 2/45, சச்சித்ர பெரேரா 3/72

செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 9/1 (3)  


SSC எதிர் BRC

BRC அணியை 200 ஓட்டங்களுக்கு மட்டுப்படுத்திய SSC அணி முதல் இன்னிங்சில் வலுவான முன்னிலை ஒன்றைப் பெறும் நோக்கில் துடுப்பெடுத்தாடி வருகிறது.

காலி சர்வதேச மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியின் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய BRC அணிக்கு ஹர்ஷ விதானகே (77) மாத்திரம் அரைச் சதம் ஒன்றை பெற்றார்.

தமது அணிகளை மீட்ட லக்ஷித மற்றும் ப்ரபாஷ்

பந்துவீச்சில் SSC அணி சார்பாக ஆகாஷ் சேனாரத்ன 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்நிலையில் தனது முதல் இன்னிங்சை ஆரம்பித்த SSC அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவின்போது 4 விக்கெட்டுகளை இழந்து 114 ஓட்டங்களை பெற்றுள்ளது.

போட்டியின் சுருக்கம்

BRC (முதல் இன்னிங்ஸ்) – 200 (63.4) – ஹர்ஷ விதான 77, திலகரத்ன சம்பத் 42, ருமேஷ் புத்திக்க 25, ஆகாஷ் சேனாரத்ன 5/52, சச்சித்ர சேனநாயக்க 2/49

SSC (முதல் இன்னிங்ஸ்) – 114/4 (28) – கௌஷால் சில்வா 42, மினோத் பானுக்க 35, மிலிந்த சிறிவர்தன 23, சாமிக்கர எதிரிசிங்க 2/15, திலகரத்ன சம்பத் 2/27

நான்கு போட்டிகளினதும் இரண்டாம் நாள் ஆட்டம் நாளை தொடரும்