இலங்கை கிரிக்கெட் சபை (SLC) பிரிவு A உள்ளூர் கிரிக்கெட் கழகங்களுக்கு இடையே ஒழுங்கு செய்து நடாத்தும் மூன்று நாட்கள் கொண்ட மேஜர் பிரீமியர் லீக் முதல் தர கிரிக்கெட் தொடரின் ஐந்து போட்டிகளின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று (05) நிறைவடைந்தன.
SSC எதிர் BRC
BRC அணிக்கு எதிராக முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்ற SSC அணி வலுவான வெற்றி இலக்கொன்றை நிர்ணயிக்கும் நோக்கில் தனது இரண்டாவது இன்னிங்சுக்காக துடுப்பாடி வருகிறது
Photos: BRC v SSC | Major League Tier A Tournament 2018/19
தனது சொந்த மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் BRC அணி ருமேஷ் புத்திக்க ஆட்டமிழக்காது பெற்ற 105 ஓட்டங்கள் மூலம் முதல் இன்னிங்ஸில் 267 ஓட்டங்களை பெற்றது. எனினும் இரண்டாவது இன்னிங்ஸை ஆடும் SSC அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவின்போதும் இரண்டாவது இன்னிங்ஸில் 146 ஓட்டங்களால் முன்னிலை பெற்றிருந்தது.
போட்டியின் சுருக்கம்
SSC (முதல் இன்னிங்ஸ்) – 289 (66.4) – சம்மு அஷான் 125, சச்சித்ர சேனநாயக்க 32, துவிந்து திலகரத்ன 5/65, நிரஞ்சன வன்னியாரச்சி 2/36
BRC (முதல் இன்னிங்ஸ்) – 267 (79) – ருமேஷ் புத்திக்க 105*, பானுக்க ராஜபக்ஷ 44*, தரிந்து ரத்னாயக்க 5/83, கசுன் மதுஷங்க 2/50, சச்சித்ர சேனநாயக்க 2/47
SSC (இரண்டாவது இன்னிங்ஸ்) – 127/6 (32) – கௌஷால் சில்வா 57*, கிரிஷான் ஆரச்சிகே 33, துவிந்து திலகரத்ன 3/21, லசித் லக்ஷான் 2/25
CCC எதிர் செரசன்ஸ் விளையாட்டுக் கழகம்
தனது சொந்த மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவின் போது CCC அணி இரண்டாவது இன்னிங்ஸில் 255 ஓட்டங்களால் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.
Photos: Saracens SC v CCC – Major League Tier A Tournament 2018/19
அனுபவ சுழல் பந்துவீச்சாளர் மலிந்த புஷ்பகுமார ஆறு விக்கெட்டுகளை வீழ்த்த செரசன்ஸ் தனது முதல் இன்னிங்ஸில் 169 ஓட்டங்களுக்கு சுருண்டது. தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த CCC இரண்டு விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 186 ஓட்டங்களை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
போட்டியின் சுருக்கம்
CCC (முதல் இன்னிங்ஸ்) – 238 (62) – மாதவ வர்ணபுர 63, வனிந்து ஹசரங்க 32, ரொன் சந்திரகுப்தா 30, சாமிக்கர எதிரிசிங்க 9/87
செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 169 (64.4) – சாமிக்கர எதிரிசிங்க 53, மலிந்த புஷ்பகுமார 6/73, லஹிரு கமகே 2/34, வனிந்து ஹசரங்க 2/27
CCC (இரண்டாவது இன்னிங்ஸ்) – 186/2 (51) – ரொன் சந்திரகுப்தா 75*, மாதவ வர்ணபுர 46, மினோத் பானுக்க 37
இலங்கை துறைமுக அதிகாரசபை கி.க. எதிர் சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம்
கட்டுநாயக்கவில் தனது சொந்த மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியில் முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்ற சிலாபம் மேரியன்ஸ் அணி துறைமுக அதிகரைசபைக்கு பந்துவீச்சில் நெருக்கடி கொடுத்து வருகிறது.
>>இன்னிங்ஸில் 9 விக்கெட்களை வீழ்த்திய சாமிக்க
இதன்படி முதல் இன்னிங்ஸில் 70 ஓட்டங்களால் பின்தங்கிய நிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த துறைமுக அதிகாரசபை அணி இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவின்போது 112 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்துள்ளது.
போட்டியின் சுருக்கம்
இலங்கை துறைமுக அதிகாரசபை கி.க. (முதல் இன்னிங்ஸ்) – 233 (68.5) – யுகான் டி சில்வா 64, பிரமோஷ் பெரேரா 51, பிரகாஷ் விக்ரமசிங்க 46*, சாகர் பரேஷ் 6/70, காரிமுற்றத்து ராகேஷ் 2/41
சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 303 (60.2) – ரிசித் உபமால் 54, ஓஷத பெர்னாண்டோ 50, அனுக் டி அல்விஸ் 4/53, சமிந்த பண்டார 3/54, சானக்க கோமசரு 2/79
இலங்கை துறைமுக அதிகாரசகை கி.க. (இரண்டாவது இன்னிங்ஸ்) – 112/6 (46) – அதீஷ நாணயக்கார 64, ரொஷான் ஜயதிஸ்ஸ 2/16, நிமேஷ் விமுக்தி 2/51
ராகம கிரிக்கெட் கழகம் எதிர் தமிழ் யூனியன் கழகம்
கொழும்பு, NCC மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் ராகம் கிரிக்கெட் கழகம் முதல் இன்னிங்ஸில் பெற்ற 433 ஓட்டங்களுக்கு தமிழ் யூனியன் சிறப்பாக துடுப்பெடுத்தாடி வருகிறது. இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவின்போது தனது முதல் இன்னிங்சுக்காக துடுப்பாடும் தமிழ் யூனியன் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 223 ஓட்டங்களை பெற்றுள்ளது.
>மைதானத்தை சிக்ஸர்களால் அலங்கரித்த திசர பெரேரா ; போராட்டம் வீண்
வலதுகை துடுப்பாட்ட வீரர் சச்சித்ர சேரசிங்க ஆட்டமிழக்காது 107 ஓட்டங்களுடன் களத்தில் உள்ளார். 31 வயதான சேரசிங்க முதல்தர போட்டிகளில் சகலதுறைகளிலும் தொடர்ந்து சோபித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
போட்டியின் சுருக்கம்
ராகம கிரக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 433 (118.2) – சுபேஷல ஜயதிலக்க 100, ஜனித் லியனகே 52, இஷான் ஜயரத்ன 50, தினெத் தொமோத்ய 49, ஷெஹான் பெர்னாண்டோ 41, ஜீவன் மெண்டிஸ் 4/125, தினுக் விக்ரமனாயக்க 3/44
தமிழ் யூனியன் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 223/2 (58) – சச்சித்ர சேரசிங்க 107*, தரங்க பரணவிதான 76*, சத்துர பீரிஸ் 2/38
சோனகர் விளையாட்டுக் கழகம் எதிர் இராணுவப்படை கிரிக்கெட் கழகம்
முதல் இன்னிங்ஸில் தடுமாற்றம் கண்ட சோனகர் விளையாட்டுக் கழகம் இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாக துடுப்பெடுத்தாடி ஸ்திரமான நிலையை பெற்றுள்ளது.
>>அவுஸ்திரேலிய மண்ணில் சதம் குவித்த முதல் இந்திய விக்கெட் காப்பாளராக ரிஷாப் பண்ட்
தனது சொந்த மைதானத்தில் நடைபெற்றுவரும் இப்போட்டியில் சோனகர் அணி முதல் இன்னிங்ஸில் 111 ஓட்டங்களால் பின்தங்கிய நிலையிலேயே தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்தது. எனினும் இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவின்போது அந்த அணி 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 193 ஓட்டங்களை பெற்றுள்ளது.
போட்டியின் சுருக்கம்
சோனகர் விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 110 (44.4) – அதீஷ திலஞ்சன 35, துஷான் விமுக்தி 5/35, தனுசிக்க பண்டார 2/16, நுவன் லியனபத்திரண 2/30
இராணுவப்படை கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 221 (80.1) – துஷான் விமுக்தி 35, அஷான் ரன்திக்க 32, டில்ஷான் டி சொய்சா 32, கோஷான் விஜேரத்ன 3/40, ரமேஷ் மெண்டிஸ் 2/25, தரிந்து கௌஷால் 2/31
சோனகர் விளையாட்டுக் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 193/3 (50) – இரோஷ் சமரசூரிய 82*, பபசர வாதுகே 52, சாமர சில்வா 52, துஷான் விமுக்தி 2/64
அனைத்து போட்டிகளினதும் மூன்றாவது மற்றும் இறுதி நாள் ஆட்டம் நாளை (06) தொடரும்
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<