இலங்கை கிரிக்கெட் சபையின் (SLC) ஆளுகையோடு யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்ட சிறி பாஸ்காரன் கிரிக்கெட் மைதானம், இலங்கை கிரிக்கெட் சபையின் பிரதித் தலைவர் ரவீன் விக்ரமரட்ன மூலம் திறந்து வைக்கப்பட்டிருக்கின்றது.
>> 25 வருடங்களின் பின் இலங்கை வீரர்களுக்கு கிடைத்த உலகக் கிண்ண பதக்கம்
இலங்கை கிரிக்கெட் சபையின் கிராம கிரிக்கெட் வளர்ச்சி நிகழ்ச்சித்திட்டத்திற்கு அமைய நிர்மாணிக்கப்பட்டிருக்கும் இந்த கிரிக்கெட் மைதானத்திற்காக, மறைந்த திரு. P. சிறி பாஸ்காரன் அவர்கள் தனது சொந்தக் காணியினை அன்பளிப்புச் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
எதிர்காலத்தில் பாரிய அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படும் என கருதப்படுகின்ற இந்த மைதானத்திற்கு, தற்போது இலங்கை கிரிக்கெட் சபையின் மூலம் ஆரம்ப கட்டமாக இரண்டு பயிற்சி வலைத்தொகுதிகள், ஒரு மெட்டின் ஆடுகளம், உடை மாற்றும் அறை மற்றும் ஒரு அலுவலகம் என்பன அமைத்துக் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
>> பங்களாதேஷுக்கு எதிரான முதல் போட்டியிலிருந்து டெய்லர் நீக்கம்
அதன்படி மூன்று கட்டங்களாக மேம்படுத்தப்பட எதிர்பார்க்கப்படும் இந்த கிரிக்கெட் மைதானத்தின் அபிவிருத்திப் பணிகள் 2022ஆம் ஆண்டளவில் நிறைவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதேநேரம், தேசிய கிரிக்கெட் மைதானங்களில் ஒன்றாக மாற்ற எதிர்பார்க்கப்படுகின்ற இந்த மைதானத்தின் அபிவிருத்திப் பணிகள் நிறைவுக்கு வரும் போது இங்கே புற்தரை ஆடுகளம், பார்வையாளர் அரங்கு, விருத்தி செய்யப்பட்ட உடை மாற்றும் அறைகள், ஜிம்னாஸியம் போன்ற பல வசதிகள் காணப்படும் எனவும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளுக்கு <<