தென்னாபிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி அங்கே மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் என்பவற்றில் ஆடவிருக்கின்றது.
>>உயர் செயற்திறன் மையத்துக்கான புதிய பயிற்றுவிப்பாளர்கள் நியமனம்<<
அந்தவகையில் இந்த கிரிக்கெட் சுற்றுத் தொடர்களுக்காக இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி நாளை (23) தென்னாபிரிக்கா பயணமாகவிருக்கும் நிலையில் இந்த சுற்றுத்தொடரில் பங்கெடுக்கும் 17 பேர் அடங்கிய இலங்கை மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகள் குழாம் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
தென்னாபிரிக்க சுற்றுப்பயணத்தில் முதல் கட்டமாக இரு அணிகளும் மோதும் T20I தொடர் நடைபெறவுள்ளதோடு குறித்த தொடர் மார்ச் 27ஆம் திகதி பெனோனியில் ஆரம்பமாகுகின்றது. அதன் பின்னர் இரு அணிகளும் பங்கெடுக்கும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஏப்ரல் 09ஆம் திகதி ஈஸ்ட் லன்டண் அரங்கில் இடம்பெறுகின்றது. இந்த ஒருநாள் தொடர் ஐ.சி.சி. இன் மகளிர் ஒருநாள் சம்பியன்ஷிப்பிற்குள் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இலங்கை குழாம்
சமரி அத்தபத்து (தலைவி), விஷ்மி குணரட்ன, நிலக்ஷி டி சில்வா, ஹர்சிதா சமரவிக்ரம, கவிஷா டில்ஹாரி, ஹாசினி பெரேரா, அனுஷ்கா சஞ்சீவனி, ஒசதி ரணசிங்க, உதேசிகா ப்ரபோதினி, இனோக்கா ரணவீர, அச்சினி குலசூரிய, ஹன்சிமா கருணாரட்ன, இமேஷா டிலானி, கவ்யா கவிந்தி, இனோசி பெர்னாண்டோ, சுகந்திகா குமாரி, பிரசாதினி வீரக்கொடி
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<