இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கழகங்களுக்கு இடையிலான 23 வயதுக்கு உட்பட்ட அணிகளுக்கு இடையிலான 50 ஓவர்கள் கிரிக்கெட் போட்டியின் ஐந்தாவது கட்டப் போட்டிகளின் கீழ் மற்றுமொரு போட்டி இன்று (28) நிறைவுக்கு வந்தது.
குழு D இற்காக நடைபெற்ற போட்டியில் கொழும்பு கிரிக்கெட் கழகம் மற்றும் கண்டி சுங்க விளையாட்டுக் கழகம் மோதின.
கொழும்பு கிரிக்கெட் கழகத்தின் சொந்த மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற கொழும்பு கிரிக்கெட் கழகம் முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.
இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய கண்டி சுங்க விளையாட்டுக் கழகம், எதிரணியின் பந்துவீச்சுக்கு முகங்கொடுக்க முடியாமல் 116 ஓட்டங்களுக்கு சுருண்டது.
பவன், கல்ப சேத்தியவின் அரைச்சதத்தால் காலி கழகத்துக்கு வெற்றி
கண்டி சுங்க விளையாட்டுக் கழக அணிக்காக ரஷ்மிக மதுஷங்க 41 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றுக்கொடுக்க, பந்துவீச்சில் கொழும்பு கிரிக்கெட் கழக வீரர் சுவத் மெண்டிஸ் 37 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை எடுத்தார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கொழும்பு கிரிக்கெட் கழகம், 14.4 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 117 ஓட்டங்களை எடுத்து 7 விக்கெட்டுக்களால் வெற்றயீட்டியது.
கொழும்பு அணிக்காக மலிந்து மதுரங்க ஆட்டமிழக்காது 73 ஓட்டங்களை எடுத்தார்.
இதன்படி., இம்முறை போட்டித் தொடரில் கொழும்பு கிரிக்கெட் கழகம் தமது 3 ஆவது வெற்றியைப் பதிவுசெய்து புள்ளிகள் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பெற்றுக்கொண்டது.
போட்டியின் சுருக்கம்
கண்டி சுங்க விளையாட்டுக் கழகம் – 116 (44.3) – ரஷ்மிக மதுஷங்க 41, திமிர மல்ஷான் 31, சுவத் மெண்டிஸ் 4/37
கொழும்பு கிரிக்கெட் கழகம் – 117/3 (14.4) – மலிந்து மதுரங்க 73*, ஒமேஷ் மெண்டிஸ் 21, மெதுஷன் திலின 2/28
முடிவு – கொழும்பு கிரிக்கெட் கழகம் 7 விக்கெட்டுக்களால் வெற்றி
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<