இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றுவரும் முதல்தர கழகங்களுக்கிடையிலான மேஜர் T-20 லீக் தொடரின் அரையிறுதிப் போட்டிகள் (25) இன்று நடைபெற்றன.
இராணுவ விளையாட்டுக் கழகத்தை முதலாவது அரையிறுதியில் வெற்றிகொண்டு சோனகர் விளையாட்டுக் கழகம் இறுதிப் போட்டிக்குத் தெரிவாகிய அதேநேரம், நடப்புச் சம்பியனான NCC கழகம் ஒரு ஓட்டத்தினால் CCC கழகத்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியது.
தோல்வியில் முடிந்த சானக மற்றும் சீகுகேவின் அதிரடி
இலங்கையில் உள்ள முன்னணி 24 கிரிக்கெட் கழகங்களுக்கு இடையிலான மேஜர் T20 லீக்கின் 12 போட்டிகள் இன்று நடைபெறவுள்ளன. இதில், இன்று காலை (21) ஆரம்பமான ஆறு
சோனகர் விளையாட்டுக் கழகம் எதிர் இராணுவ விளையாட்டுக் கழகம்
துடுப்பாட்ட வீரர்களின் அதிரடியுடன் இராணுவ விளையாட்டுக் கழகத்துக்கு எதிரான முதலாவது அரையிறுதிப் போட்டியில் 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் சோனகர் விளையாட்டுக் கழகம் வெற்றியீட்டியது.
பி. சரா ஓவல் மைதானத்தில் இன்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இரோஷ் சமரசூரிய தலைமையிலான இலங்கை இராணுவ கழகம் முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.
அதன்படி துடுப்பெடுத்தாட களமிறங்கிய இராணுவ கழகம் அணியின் ஆரம்ப வீரர் அஷான் ரந்திக எதிரணியின் பந்துவீச்சுக்களை துவம்சம் செய்து அதிரடியாக சதமடித்தார். 59 பந்துகளுக்கு முகம்கெடுத்த அவர், 14 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 100 ஓட்டங்களை விளாசினார்.
Photos: Moors SC vs Army SC | Semi-Final | Major T20 Tournament 2018/19
இதன் மூலம் இராணுவ விளையாட்டுக் கழகம் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 186 ஓட்டங்களைப் பெற்றது.
இந்த நிலையில் சவாலான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய சோனகர் விளையாட்டுக் கழகம், துடுப்பாட்ட வீரர்களின் பொறுப்பான ஆட்டத்தினால் 17.1 ஓவர்களில் 190 ஓட்டங்ளைப் பெற்று வெற்றயீட்டியது.
அந்த அணி சார்பில் மத்திய வரிசையில் களமிறங்கிய சாமர சில்வா 23 பந்துகளில் 46 ஓட்டங்களையும், நிமந்த மதுஷங்க 17 பந்துகளில் 46 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காது பெற்று வலுச்சேர்த்தனர்.
போட்டியின் சுருக்கம்
இராணுவ விளையாட்டுக் கழகம் – 186/6 (20) – அஷான் ரந்திக 117, அசேல குணரத்ன 17, அயன சிறிவர்தன 1/14, தரிந்து கௌஷால் 1/29
சோனகர் விளையாட்டுக் கழகம் – 190/4 (17.1) – சாமர சில்வா 46, நிமந்த மதுஷங்க 46*, சரித்த குமாரசிங்க 41, அதீஷ திலன்சன 33, எஸ்.ரித்ம 1/6, அசேல குணரத்ன 1/24
முடிவு – சோனகர் விளையாட்டுக் கழகம் 6 விக்கெட்டுக்களால் வெற்றி
NCC எதிர் கொழும்பு கிரிக்கெட் கழகம்
பி. சரா ஓவல் மைதானத்தில் நடைபெற்ற கொழும்பு கிரிக்கெட் கழகத்துடனான இரண்டாவது அரையிறுதியில் ஒரு ஓட்டத்தினால் த்ரில் வெற்றி பெற்ற NCC கழகம், சோனகர் கழகத்துடனான இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்த NCC கழகம், 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 142 ஓட்டங்களை பெற்றது. அணித்தலைவர் மஹேல உடவத்த மாத்திரம் 48 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றார்.
இந்த நிலையில் 143 ஓட்டங்கள் வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய கொழும்பு கழகம் சீரான இடைவெளியில் விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது.
எனினும், மத்திய வரிசையில் களமிறங்கிய வனிந்து ஹசரங்க பொறுமையுடன் விளையாடி அவ்வணிக்கு நம்பிக்கை கொடுத்தாலும், அவர் 27 பந்துகளில் 38 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார்.
மேஜர் டி-20 லீக்கில் அதிரடி காட்டிய ஷெஹான் ஜயசூரிய
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றுவரும்
தொடரந்து பின்வரிசையில் வந்த வீரர்களும் எதிரணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாற, 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை 141 ஓட்டங்களை மாத்திரமே அவ்வணிக்கு பெற்றுக் கொள்ள முடிந்தது.
இறுதியில் ஒரு ஓட்டத்தினால் நடப்புச் சம்பியன் NCC கழகம் வெற்றயீட்டி இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியது.
பந்துவீச்சில் சாரங்க ராஜகுரு 3 விக்கெட்டுக்களையும், டிலேஷ் குணரத்ன, சச்சின்த பீரிஸ் மற்றும் சச்சின்த கொலம்பகே ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதமும் கைப்பற்றியிருந்தனர்.
போட்டியின் சுருக்கம்
NCC – 142/9 (20) – மஹேல உடவத்த 48, தினேஷ் சந்திமால் 31, பெதும் நிஸ்ஸங்க 19, அஷான் பிரியன்ஜன் 2/18, வனிந்து ஹசரங்க 2/19
கொழும்பு கிரிக்கெட் கழகம் – 141/9 (20) – வனிந்து ஹசரங்க 38, டில்ஷான் முனவீர 25, அஷான் பிரியன்ஜன் 19, சாரங்க ராஜகுரு 3/24, டிலேஷ் குணரத்ன 2/24, சச்சின்த பீரிஸ் 2/27, சச்சின்த கொலம்பகே 2/28
முடிவு – NCC அணி ஒரு ஓட்டத்தால் வெற்றி
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க