மேஜர் டி-20 லீக்கில் அதிரடி காட்டிய ஷெஹான் ஜயசூரிய

323

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றுவரும் முதல்தர கழகங்களுக்கு இடையிலான மேஜர் T-20 லீக் தொடரின் மேலும் ஆறு போட்டிகள் இன்று (19) மாலை நடைபெற்றிருந்தன.

நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் எதிர் பொலிஸ் விளையாட்டுக் கழகம்

பொலிஸ் விளையாட்டு கழகத்துக்கு எதிரான போட்டியில் ஷெஹான் ஜயசூரியவின் அதிரடி மூலமாக நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம், ஒரு ஓட்டத்தினால் த்ரில் வெற்றி பெற்றது.

உள்ளூர் டி20 தொடரில் அதிரடி சதம் விளாசிய சந்திமால்

இலங்கை முதல்தர கிரிக்கெட்…

போட்டியின் சுருக்கம்

நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் – 165/7 (20) – ஷெஹான் ஜயசூரிய 71, சஹன் ஆரச்சிகே 37, பிரசன்ன ஜயமான்ன 22, சனத் ரன்ஜன் 2/25, மஹேஷ் பிரியதர்ஷன 2/38

பொலிஸ் விளையாட்டுக் கழகம் – 164/9 (20) – மாலிங்க மலிகஸ்பே 54, பவன் டயஸ் 35, மஞ்சுள ஜயவர்தன 31, உபுல் இந்திரசிறி 3/29, நிலங்க சந்தகன் 2/22

முடிவு –  நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் ஒரு ஓட்டத்தினால் வெற்றி


சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் கொழும்பு கிரிக்கெட் கழகம்

குழு B இல் தோல்வியைத் தழுவாத ஒரே அணியாக வலம் வந்த கொழும்பு கிரிக்கெட் கழகம், இன்று நடைபெற்ற போட்டியில் 16 ஓட்டங்களால் சிலாபம் மேரியன்ஸ் கழகத்திடம் தோல்வியைத் தழுவியது.

போட்டியின் சுருக்கம்

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் – 168/8 (20) – ஹர்ஷ குரே 59, யசோத லங்கா 34, நிமேஷ் பெரேரா 30, மாலிந்த புஷ்பகுமார 4/13, லஹிரு மதுஷங்க 2/39

கொழும்பு கிரிக்கெட் கழகம் – 152 (19.2) – டில்ஷான் முனவீர 29, அஷான் பிரியன்ஜன் 26, மாதவ வர்ணபுர 24, நிமசர அதரகல்ல 2/12, புலின தரங்க 2/22

முடிவு – சிலாபம் மேரியன்ஸ் கழகம் 16 ஓட்டங்களால் வெற்றி


லங்கன் கிரிக்கெட் கழகம் எதிர் காலி கிரிக்கெட் கழகம்

அனுபவ வீரர் நிசல் ரந்திகவின் அரைச்சதத்தின் உதவியுடன் காலி கிரிக்கெட் கழகம் 6 விக்கெட்டுகளால் லங்கன் கிரிக்கெட் கழகத்தை வீழ்த்தியது.

Photos: Galle CC vs Lankan CC – Major T20 Tournament 2018/19

போட்டியின் சுருக்கம்

லங்கன் கிரிக்கெட் கழகம் – 164/6 (20) – சானக்க ருவன்சிறி 63, எஸ். கங்கானங்கே 42

காலி கிரிக்கெட் கழகம் – 165/4 (18.3) – நிசல் ரந்திக 54, லக்‌ஷான் ரொட்ரிகோ 38, சமீன் கந்தனாரச்சி 35, பூர்ண சாருக்க 2/17

முடிவு – காலி கிரிக்கெட் கழகம் 6 விக்கெட்டுக்களால் வெற்றி

கொழும்பு கழகத்துக்காக ஐந்து விக்கெட்டுக்களை வீழ்த்திய வனிந்து ஹசரங்க

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின்…

பாணந்துறை விளையாட்டுக் கழகம் எதிர் சோனகர் விளையாட்டுக் கழகம்

பாணந்துறை விளையாட்டுக் கழகத்துக்கு எதிரான போட்டியில் சகலதுறையிலும் பிரகாசித்த சோனகர் விளையாட்டுக் கழகம் 3 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியது.

Photos: Moors SC vs Panadura SC – Major T20 Tournament 2018/19

போட்டியின் சுருக்கம்

பாணந்துறை விளையாட்டுக் கழகம் – 164/8 (20) – அகித் குமார பஸ்நாயக்க 37, இம்ரானுல்லாஹ் அஸ்லம் 26, சானுக் டில்ஷான் 3/29, தரிந்து கௌஷால் 2/18

சோனகர் விளையாட்டுக் கழகம் – 167/7 (19.3) – பபசர வதுகே 43, ரமேஷ் மெண்டிஸ் 29, சரண நாணயக்கார 3/20, வினோத் பெரேரா 2/29

முடிவு – சோனகர் விளையாட்டுக் கழகம் 3 விக்கெட்டுக்களால் வெற்றி


ராகம கிரிக்கெட் கழகம் எதிர் குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகம்

குருநாகல் கிரிக்கெட் கழகத்துக்கு எதிரான போட்டியை, சஹன் நாணயக்காரவின் அபார பந்துவீச்சின் மூலமாக ராகம கிரிக்கெட் கழகம் வெற்றிக்கொண்டது.

Photos: Ragama CC v Kurunegala Youth CC | Major T20 Tournament 2018/19

போட்டியின் முதலில் துடுப்பெடுத்தாடிய ராகம கிரிக்கெட் கழகம் 184 ஓட்டங்களைப் பெற்றதுடன், பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய குருநாகல் கிரிக்கெட் கழகம் 111 ஓட்டங்களுக்கு சுருண்டது.

போட்டியின் சுருக்கம்

ராகம கிரிக்கெட் கழகம் – 184/8 (20) – ஷெஹான் பெர்னாண்டோ 90, இஷான் ஜயரத்ன 48*, சந்திம விஜயபண்டார 3/21

குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகம் – 111/10 (14.3) – சமீர சந்தமால் 60, சஹன் நாணயக்கார 5/24, இஷான் ஜயரத்ன 3/13

முடிவு – ராகம கிரிக்கெட் கழகம் 73 ஓட்டங்களால் வெற்றி


BRC கழகம் எதிர் தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம்

இளம் துடுப்பாட்ட வீரர் மனோஜ் சரத்சந்திர மற்றும் ரமித் ரம்புக்வெல்ல ஆகியோரின் அபார துடுப்பாட்டத்தின் உதவியுடன் தமிழ் யூனியன் கழகம் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று குழு D இல் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டது.

Photos: Tamil Union C & AC vs BRC | Major T20 Tournament 2018/19

போட்டியின் சுருக்கம்

BRC கழகம் – 187/5 (20) – ருமேஷ் புத்திக 93, ஹஷேன் ராமநாயக்க 30, லக்‌ஷான் 25, சச்சித்ர சேரசிங்க 2/23, பிரமோத் மதுஷான் 2/46

தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் – 191/5 (18.5) – மனோஜ் சரத்சந்திர 70*, ரமித் ரம்புக்வெல்ல 57, ருமேஷ் புத்திக 2/14

முடிவு – தமிழ் யூனியன் கழகம் 5 விக்கெட்டுக்களால் வெற்றி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<