இலங்கை பிரதான உள்ளூர் கழகங்களுக்கு இடையிலான ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டிக்கு SSC மற்றும் CCC அணிகள் தகுதி பெற்றன. இலங்கை கிரிக்கெட் சபை (SLC) நடாத்தும் இந்த தொடரின் அரையிறுதிப் போட்டிகள் இன்று (17) நடைபெற்றன.
SSC எதிர் சரசென்ஸ் விளையாட்டுக் கழகம்
இலங்கை டெஸ்ட் அணியின் சிறப்பு வீரரான திமுத் கருணாரத்னவின் சதத்தின் மூலம் சரசென்ஸ் விளையாட்டுக் கழகத்திற்கு எதிரான போட்டியில் டக்வர்த் லுவிஸ் முறைப்படி 36 ஓட்டங்களால் வெற்றி பெற்ற SSC அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
சச்சித்ர சேனநாயக்கவின் சகலதுறை ஆட்டத்தால் அரையிறுதிக்கு தெரிவாகிய SSC
இலங்கையின் பிரதான உள்ளூர் கழகங்களுக்கு இடையிலான ஒருநாள் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு SSC…
கொழும்பு, NCC மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய SSC அணி 35 ஓட்டங்களுக்கு ஆரம்ப விக்கெட்டுகளை பறிகொடுத்தபோதும் முதல் வரிசையில் களமிறங்கிய திமுத், கௌஷால் சில்வாவுடன் இணைந்து 3ஆவது விக்கெட்டுக்கு 157 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டார்.
இதன்போது பொறுப்பாக ஆடி சதம் பெற்ற திமுத் கருணாரத்ன 115 பந்துகளில் 12 பௌண்டரிகளுடன் 109 ஓட்டங்களை பெற்றார். அதேபோன்று கௌஷால் சில்வா 62 ஓட்டங்களை பெற்றார்.
இதன் மூலம் SSC அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 296 ஓட்டங்களை பெற்றது. பந்துவீச்சில் சாலிய சமன் 3 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.
Photos: SSC vs Saracens SC | Major Limited Overs Tournament 2018/19 – Semi-Final
இந்நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய சரசென்ஸ் அணி முதல் 4 விக்கெட்டுகளையும் 23 ஓட்டங்களுக்கு பறிகொடுத்தது. எனினும் மத்திய வரிசையில் கமிந்து கனிஷ்க (58) மற்றும் நிபுன் கருணாநாயக்க (81) சிறப்பாக செயற்பட்டு அணியின் ஓட்டங்களை அதிகரிக்க முயன்றனர்.
எனினும் சரசென்ஸ் அணி 39 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 190 ஓட்டங்களை பெற்ற நிலையில் மழை குறுக்கிட்டதை அடுத்து போட்டியின் முடிவு டக்வர்த் லுவிஸ் முறையில் தீர்மானிக்கப்பட்டது.
போட்டியின் சுருக்கம்
SSC – 296/9 (50) – திமுத் கருணாரத்ன 109, கௌஷால் சில்வா 62, சச்சித்ர சேனநாயக்க 36, சாலிய சமன் 3/60, அண்டி சொலமன்ஸ் 2/57
சரசென்ஸ் விளையாட்டுக் கழகம் – 190/6 (39) – நிபுன் கருணாநாயக்க 81, கமிந்து கனிஷ்க 58, அஷேன் பண்டார 23*, தம்மிக்க பிரஸாத் 2/40
முடிவு – SSC 36 ஓட்டங்களால் வெற்றி (டக்வர்த் லுவிஸ் முறை)
சோனகர் விளையாட்டுக் கழகம் எதிர் CCC
வனிந்து ஹசரங்கவின் அபார பந்துவீச்சு மூலம் சோனகர் விளையாட்டுக் கழகத்தை 138 ஓட்டங்களில் சுருட்டிய CCC அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலகு வெற்றியீட்டி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
தொடர்ந்து நான்காவது முறை ஒருநாள் சமரில் வென்ற யாழ். சென் ஜோன்ஸ்
யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிகள் இடையில் 17ஆவது முறையாக …
கொழும்பு கோல்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட சோனகர் அணி முக்கிய இடைவெளியில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. குறிப்பாக சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க ஆரம்ப வரிசை விக்கெட்டுகளை சாய்த்தார்.
இதனால் சோனகர் அணி 43 ஓவர்களில் தனது சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. இதன்போது விக்கெட் காப்பாளர் லஹிரு அத்தனாயக்க அதிகபட்சமாக 51 ஓட்டங்களை பெற்றார். வனிந்து ஹசரங்க 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
Photos: CCC vs Moors SC | Major Limited Overs Tournament 2018/19 – Semi-Final
இந்நிலையில் இலகுவான இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய CCC அணி 26.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 143 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ரொன் சந்திரகுப்தா 55 ஓட்டங்களை பெற்றார்.
போட்டியின் சுருக்கம்
சோனகர் விளையாட்டுக் கழகம் – 138 (43) – லஹிரு அத்தநாயக்க 51, இரோஷ் சமரசூரிய 24, வனிந்து ஹசரங்க 4/43, லஹிரு மதுஷங்க 2/25, லஹிரு கமகே 2/20
CCC – 143/5 (26.2) – ரொன் சந்திரகுப்தா 55, மாதவ வர்ணபுர 35, மலித் டி சில்வா 2/39, ரமேஷ் மெண்டிஸ் 2/29
முடிவு – CCC கழகம் 5 விக்கெட்டுகளால் வெற்றி
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க