திசர பெரேராவின் அதிரடி ஆட்டத்தால் முதல் வெற்றியை சுவைத்த SSC

1310

இலங்கை கிரிக்கெட் சபை (SLC) நடாத்தும் 2017/18 ஆம் ஆண்டின் உள்ளூர் பருவத்திற்கான T20 தொடரின் 11 போட்டிகள் இன்று (27) நடைபெற்றன.

இதில் திசர பெரேராவின் அதிரடி ஆட்டத்தின் மூலம் SSC அணி தனது முதல் வெற்றியை பெற்றதோடு NCC அணிக்கு விளையாடும் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க தொடர்ந்து சோபித்து வருகிறார். குசல் மெண்டிஸ், குசல் ஜனித் பெரேராவும் தமது அதிரடி துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தினர்.

உள்ளூர் போட்டிகளில் திறமையை நிரூபித்து வரும் லசித் மாலிங்க

உள்ளூர் T20 தொடரின் D குழுவில் விளையாடும் SSC அணி மூன்றாவது போட்டியில் இலங்கை கடற்படை விளையாட்டுக் கழகத்தை எதிர்கொண்டது. கொழும்பு BRC மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் மத்திய வரிசையில் வந்த திசர பெரேரா அதிரடியாக துடுப்பெடுத்தாடி 30 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 10 சிக்ஸர்களுடன் 84 ஓட்டங்களை விளாசினார்.

இதன்மூலம் 20 ஓவர்களுக்கு 203 ஓட்டங்களை குவித்த SSC அணி எதிரணியை 96 ஓட்டங்களுக்கு சுருட்டி 107 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

இதேவேளை BRC அணியை எதிர்கொண்ட NCC அணிக்காக லசித் மாலிங்க 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதுவரை நடந்த மூன்று போட்டிகளிலும் மாலிங்க மொத்தம் 8 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட இந்த போட்டியில் NCC அணி டக்வத் லூவிஸ் முறையில் 29 ஓட்டங்களால் வென்றது. NCC அணி இதுவரை நடந்த மூன்று போட்டிகளிலும் வெற்றியீட்டி C குழுவில் முதலிடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பு CCC மைதானத்தில் இலங்கை துறைமுக அதிகாரசபை கிரிக்கெட் கழகத்தை எதிர்கொண்ட கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகத்திற்கு அதன் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் குசல் ஜனித் பெரேரா 38 பந்துகளில் 64 ஓட்டங்களை விளாசினார். இந்த போட்டியில் வெற்றி பெற்ற கோல்ட்ஸ் அணி தொடரில் இதுவரையான மூன்று ஆட்டங்களிலும் வென்று B குழுவில் முதலிடத்தில் உள்ளது.

அதேபோன்று கொழும்பு கிரிக்கெட் கழகத்தின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் குசல் மெண்டிசும் உள்ளுர் T20 போட்டியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இலங்கை இராணுவப்படை விளையாட்டுக் கழகத்திற்கு எதிரான போட்டியில் அவர் 52 பந்துகளில் 64 ஓட்டங்களை விளாசினார்.

எனினும் கொழும்பு NCC மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் இரு அணிகளும் சரியாக 142 ஓட்டங்களை பெற்றதால் போட்டி சமநிலையில் (Tied) முடிந்தது.

அதேபோன்று கட்டுநாயக்கவில் நடந்த காலி கிரிக்கெட் கழகம் மற்றும் தமிழ் யூனியன் அணிகளுக்கு இடையிலான போட்டியும் இரு அணிகளும் சமமான ஓட்டங்களை பெற்று போட்டி சமநிலையில் (Tied) முடிந்தது.  

போட்டிகளின் சுருக்கம்

SSC எதிர் கடற்படை விளையாட்டுக் கழகம்

SSC – 203/5 (20) – திசர பெரேரா 84, திமுத் கருணாரத்ன 57*, தசுன் ஷானக்க 34, ஷதிக் நிமல்ஷ 3/25

கடற்படை விளையாட்டுக் கழகம் – 96 (18.3) – சுபுன் லீலரத்ன 35, ஆகாஷ் சேனாரத்ன 4/22, ஜெப்ரி வன்டர்சே 2/30

முடிவு – SSC அணி 107 ஓட்டங்களால் வெற்றி


NCC எதிர் BRC

BRC – 143/9 (20) – திலகரத்ன சம்பத் 44, ருமேஷ் புத்திக்க 33, லசித் மாலிங்க 3/24, பர்வீஸ் மஹ்ரூப் 2/22  

NCC – 93/1 (10.3) – நிரோஷன் திக்வெல்ல 38*, உபுல் தரங்க 35

முடிவு – NCC அணி 29 ஓட்டங்களால் வெற்றி (டக்வத் லூவிஸ் முறை)


கொழும்பு கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் இலங்கை துறைமுக அதிகாரசபை கிரிக்கெட் கழகம்

இலங்கை துறைமுக அதிகாரசபை கிரிக்கெட் கழகம் – 147 (19.1) – யொஹான் டி சில்வா 53, யஷோத லங்கா 24, பிரஷான் விக்ரமசிங்க 21, கவிஷ்க அஞ்சுல 2/14, அகில தனஞ்சய 2/25, பிரபாத் ஜயசூரிய 2/31

கொழும்பு கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் – 150/4 (18.5) – குசல் பெரேரா 64, சதீர சமரவிக்ரம 56*, ரனேஷ் பெரேரா 2/20

முடிவு – கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் 6 விக்கெட்டுகளால் வெற்றி

சுதந்திர கிண்ணத்திற்கான உத்தேச இலங்கை குழாம் அறிவிப்பு

கொழும்பு கிரிக்கெட் கழகம் (CCC) எதிர் இராணுவப்படை விளையாட்டுக் கழகம்

கொழும்பு கிரிக்கெட் கழகம் – 142/7 (20) – குசல் மெண்டிஸ் 64, டில்ஷான் முனவீர 26, சீகுகே பிரசன்ன 4/25

இராணுவப்படை விளையாட்டுக் கழகம் – 142/9 (20) – லக்ஷான் எதிரிசிங்க 63*, துஷான் விமுக்தி 24, நுவன் துஷார 3/25, லஹிரு மதுஷங்க 2/26

முடிவு – போட்டி சமநிலையில் (Tied) முடிவுற்றது


லங்கன் கிரிக்கெட் கழகம் எதிர் விமானப்படை விளையாட்டுக் கழகம்

லங்கன் கிரிக்கெட் கழகம் – 145 (18.3) – மதுரங்க சொய்சா 38, சானக்க ருவன்சிறி 30, யஷான் சமரசிங்க 25, மிலான் ரத்னாயக்க 3/21, புத்திக்க சந்தருவன் 3/30

விமானப்படை விளையாட்டுக் கழகம் – 61/1 (9) – உதயவன்ஷ பராக்ரம 36*

முடிவு – விமானப்படை விளையாட்டுக் கழகம் 5 ஓட்டங்களால் வெற்றி (டக்வத் லூவிஸ் முறை)


ப்ளூம்பீல்ட் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம் எதிர் செரசன்ஸ் விளையாட்டுக் கழகம்

ப்ளூம்பீல்ட் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம் – 187/7 (20) – லஹிரு ஜயகொடி 81, நிபுன் கருணாரத்ன 35, பிரமூத் ஹெட்டிவத்த 20, ருவின்து குணசேகர 3/28

செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் – 74/1 (8) – தனுக்க தபரே 42*, ருவிந்து குணசேகர 24*

முடிவு – செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் 7 ஓட்டங்களால் வெற்றி (டக்வத் லூவிஸ் முறை)  


நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் எதிர் பாணந்துறை விளையாட்டுக் கழகம்

நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் – 145/8 (20) – சந்துன் டயஸ் 32, டிலாசிறி லொகுபண்டார 29, செஹான் வீரசிங்க 24, சச்சின் டல்பதடோ 22, தரிந்து மதுரங்க 3/22, வினோத் பெரேரா 2/47

பாணந்துறை விளையாட்டுக் கழகம் – 115 (18.3) – விஷ்வ சதுரங்க 47, ஜரோம் சினிய 20, லசித் குரூஸ்புள்ளே 3/20, தரிந்து வீரசிங்க 2/20, செஹான் வீரசிங்க 2/24

முடிவு – நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் 30 ஓட்டங்களால் வெற்றி


சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் ராகம கிரிக்கெட் கழகம்

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் – 146/8 (20) – ரோஹித் தாமோதரன் 42, தசுன் செனவிரத்ன 20*, மலிந்த புஷ்பகுமார 20, குஷான் வீரக்கொடி 4/31, இஷான் ஜயரத்ன 2/29

ராகம கிரிக்கெட் கழகம் – 131/8 (20) – ஷெஹான் பெர்னாண்டோ 33, லஹிரு திரிமான்ன 23, இசுரு உதான 2/13, அசித்த பெர்னாண்டோ 2/23, மலிந்த புஷ்குமார 2/25

முடிவு – சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் 15 ஓட்டங்களால் வெற்றி


குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகம் எதிர் பதுரெலிய விளையாட்டுக் கழகம்  

குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகம் – 125/9 (20) – ருவந்த ஏகனாயக்க 41, கேஷான் விஜேரத்ன 27, டிலேஷ் குணரத்ன 3/12, அசங்க சில்வா 3/31, சவித் பிரியான் 2/16

பதுரெலிய விளையாட்டுக் கழகம் – 129/4 (19.3) – டில்ஹான் குரே 53*, பதும் நிஸ்ஸங்க 29, நதீர நாவல 21, மலித் குரே 2/25   

முடிவு – பதுரெலிய விளையாட்டுக் கழகம் 6 விக்கெட்டுகளால் வெற்றி

சர்வதேச கிரிக்கெட் அரங்கிலிருந்து ஓய்வுபெறும் தென்னாபிரிக்க புயல்

பொலிஸ் விளையாட்டுக் கழகம் எதிர் களுத்துறை நகர கழகம்

பொலிஸ் விளையாட்டுக் கழகம் – 161/9 (16) – சமித் துஷாந்த 44, சச்சித்த ஜயதிலக்க 40, சிறிமந்த விஜேரத்ன 29, எரங்க ரத்னாயக்க 2/28, நிபுன் காரியவசம் 2/38

களுத்துறை நகர கழகம் – 119/6 (16) – மதீஷ பெரேரா 23, நிமேஷ் விமுக்தி 3/14, மஞ்ஜுல ஜயவர்தன 2/19

முடிவு – பொலிஸ் விளையாட்டுக் கழகம் 42 ஓட்டங்களால் வெற்றி


காலி கிரிக்கெட் கழகம் எதிர் தமிழ் யூனியன் கிரக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம்

காலி கிரிக்கெட் கழகம் – 138/5 (20) – டில்ஷான் காஞ்சன 50, ஹர்ஷ ராஜபக்ஷ 43, சானக்க விஜேசிங்க 23*, பிரமோத் மதுஷங்க 2/27

தமிழ் யூனியன் கிரக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம் – 138/9 (20) – தனஞ்சய டி சில்வா 55, ஜீவன் மெண்டிஸ் 29, ரஜித் பிரியான் 4/18, உதார ரணசிங்க 3/19

முடிவு – போட்டி சமநிலையில் (Tied) முடிவுற்றது