இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் நடைபெற்றுவரும் முதல்தர கழகங்களுக்கிடையிலான மூன்று நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது வாரத்துக்கான 12 போட்டிகள் நேற்று (16) ஆரம்பமாகின.
இதில், பொலிஸ் விளையாட்டுக் கழகத்துக்கு எதிரான போட்டியில் ராகம கிரிக்கெட் கழகத்தின் விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரரான நிஷான் மதுஷ்க சதமடித்தார். இம்முறை மேஜர் பிரீமியர் லீக்கில் அவரது 5ஆவது சதம் இதுவாகும்.
அத்துடன், இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள நிஷான், 5 சதங்கள் மற்றும் ஒரு அரைச் சதத்துடன் 844 ஓட்டங்களை எடுத்து அதிக ஓட்டங்களைக் குவித்த வீர்ர்களில் முதலிடத்தில் உள்ளார்.
இந்த நிலையில், நேற்று நடைபெற்ற 12 போட்டிகளில் ஏழு சதங்களும், 15 அரைச் சதங்களும் பதிவாகியமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, அண்மையில் நிறைவடைந்த ஆசியக் கிண்ணத்தில் மோசமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை T20 அணியின் உப தலைவரான சரித் அசலங்க, SSC கழகத்துக்காக களமிறங்கியிருந்தார். BRC கழகத்துக்கு எதிரான இப்போட்டியில் 44 ஓட்டங்களை அவர் பெற்றுக் கொண்டார்.
- பிறந்த நாளன்று சதமடித்து அசத்திய நிஷான் மதுஷ்க
- SSC கழகத்துக்காக தொடர்ச்சியாக 4ஆவது சதமடித்த நுவனிது பெர்னாண்டோ
- தீஷன் விதுசனின் 10 விக்கெட்; முவர்ஸ் கழகத்துக்கு ஹெட்ரிக் வெற்றி
மறுபுறத்தில் முவர்ஸ் கழகத்துக்காக களமிறங்கிய பிரவீன் ஜயவிக்ரம, கொழும்பு கிரிக்கெட் கழகத்துக்கு எதிரான போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.
பந்துவீச்சைப் பொறுத்தமட்டில் குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகத்துக்கு எதிரான போட்டியில் செபஸ்டியன்ஸ் கிரிக்கெட் கழக வீரர் தரிந்து ரத்நாயக, ஐந்து விக்கெட் குவியலைப் பதிவு செய்தார். இம்முறை போட்டித் தொடரில் அவரது 3ஆவது ஐந்து விக்கெட் குவியல் இதுவென்பது மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
அதேபோன்று, காலி கிரிக்கெட் கழகத்தின் ரகு சர்மா, நுகேகொட விளையாட்டுக் கழகத்தின் சுவத் மெண்டிஸ் ஆகிய இருவரும் 5 விக்கெட் குவியலைப் பதிவு செய்தனர்.
அனைத்துப் போட்டிகளினதும் இரண்டாவது நாள் ஆட்டங்கள் இன்று (17) நடைபெறவுள்ளன.
போட்டியின் சுருக்கம்
ராகமகிரிக்கெட்கழகம்எதிர்பொலிஸ்விளையாட்டுக்கழகம்
ராகம கிரிக்கெட் கழகம் – 307/4 (90) – நிஷான் மதுஷ்க 125, ஜனித் லியனகே 71, சமிந்த பெர்னாண்டோ 44, சுபுன் மதுஷங்க 2/49
SSC கழகம்எதிர்BRC கழகம்
SSC கழகம் – 354/9 (96.3) – நுவனிது பெர்னாண்டோ 72, நிபுன் தனன்ஜய 54, சரித் அசலங்க 44, ரொஷேன் சில்வா 25, துவிந்து திலகரட்ன 3/69, துஷான் ஹேமன்த 3/97, உமெஷ்க மொரைஸ் 2/33
குருநாகல்இளையோர்கிரிக்கெட்கழகம்எதிர்செபஸ்டியன்ஸ்கிரிக்கெட்கழகம்
குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகம் – 239 (83.3) – அசந்த பஸ்நாயக்க 61, ரன்தீர ரணசிங்க 48, கயான் மனீஷன் 40, தரிந்து ரத்நாயக 5/93
செபஸ்டியன்ஸ் கிரிக்கெட் கழகம் – 13/0
Ace Capital கிரிக்கெட்கழகம்எதிர்சிலாபம்மேரியன்ஸ்கிரிக்கெட்கழகம்
Ace Capital கிரிக்கெட் கழகம் – 282/9 (92) – ரொஷான் ஜயதிஸ்ஸ 77, ஸ்வப்னில் அனில் 63, தனுக தாபரே 62, லசித் லக்ஷான் 4/65, ரஜிந்த புன்சிஹேவா 2/20
லங்கன்கிரிக்கெட்கழகம்எதிர்கோல்ட்ஸ்கிரிக்கெட்கழகம்
கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் – 228/8 (90) – கசுன் அபேரட்ன 65*, தேஷான் டயஸ் 61, ஷெஹான் பெர்னாண்டோ 36, துனித் வெல்லாலகே 3/39
களுத்துறைநகரகழகம்எதிர்காலிகிரிக்கெட்கழகம்
களுத்துறை நகர கழகம் – 190 (51.2) – சவன் கன்கானம்கே 37, யெசித் ரூபசிங்க 17, ரகு சர்மா 5/52
காலி கிரிக்கெட் கழகம் – 158/3 (25) – சமீன் கந்தனராச்சி 68, விநுர துல்சர 45*, யசோதா லங்கா 22, தரிந்து சிறிவர்தன 2/27
கொழும்புகிரிக்கெட்கழகம்எதிர்முவர்ஸ்கிரிக்கெட்கழகம்
கொழும்பு கிரிக்கெட் கழகம் – 249 (76.4) – லசித் அபேரட்ன 73, கமிந்து மெண்டிஸ் 59, மினோத் பானுக 41, பிரவீன் ஜயவிக்ம 3/71, மிலான் ரத்நாயக்க 2/24, திலங்க உதேஷன 2/29, தீசன் விதுஷன் 2/52
முவர்ஸ் விளையாட்டுக் கழகம் – 35/0 (11) – பபசர வதுகே 27*
நீர்கொழும்புகிரிக்கெட்கழகம்எதிர்NCC கழகம்
நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் 340/9 (90) – அஞ்சலோ ஜயசிங்க 113, ஜடின் சக்சேனா 111*, அஷேன் சில்வா 25, லசித் எம்புல்தெனிய 4/126, அஷேன் டேனியல் 2/62
இராணுவவிளையாட்டுக்கழகம்எதிர்பதுரெலியவிளையாட்டுக்கழகம்
இராணுவ விளையாட்டுக் கழகம் – 263/5 (73) – ஷெஹான் பெர்னாண்டோ 116*, துலின டில்ஷான் 111, மஹேஷ் குமார 22, சலன டி சில்வா 2/67
கடற்படைவிளையாட்டுக்கழகம்எதிர்நுகேகொடவிளையாட்டுக்கழகம்
கடற்படை விளையாட்டுக் கழகம் – 180 (48.5) – அதீஷ நாணயக்கார 93, மாலிங்க மாலிகஸ்பே 30, சுபுன் லீலாரத்ன 28, சுவத் மெண்டிஸ் 5/49, சஹன் நாணயக்கார 4/66
நுகேகொட விளையாட்டுக் கழகம் – 112/2 (41) – அபிஷேக் லியனாரச்சி 60, நயன பெர்னாண்டோ 46*
விமானப்படைவிளையாட்டுக்கழகம்எதிர்பாணந்துறைவிளையாட்டுக்கழகம்
விமானப்படை விளையாட்டுக் கழகம் – 438/9 (84.1) – உதயவன்ச பராக்ரம 119, மொவின் சுபசிங்க 114, மதுஷான் ரவிசந்தர்குமார் 58*, கலன விஜேசிறி 37, இவன்க சன்ஜுல 3/87, நிமேஷ் விமுக்தி 3/151
சரசென்ஸ்விளையாட்டுக்கழகம்எதிர்தமிழ்யூனியன்கிரிக்கெட்கழகம்
சரசென்ஸ் விளையாட்டுக் கழகம் – 253 (87) – சிதார கிம்ஹான் 89, நவிந்து விதானகே 66, மொஹமட் வகாஸ் 32, ஷிரான் பெர்னாண்டோ 4/33, ரவீன் டி சில்வா 4/53
தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் – 10/0 (1)
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<