மேஜர் பிரீமியர் லீக் முதல் சுற்று கடைசி நாளில் 5 சதங்கள் குவிப்பு

SLC Major League Tournament 2022

265

இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் முதல்தர கழகங்களுக்கு இடையில் நடைபெற்று வரும் மூன்று நாட்கள் கொண்ட மேஜர் பிரீமியர் லீக் முதல்தர கிரிக்கெட் தொடரின் 13ஆவது வாரத்துக்கான 12 போட்டிகள் நேற்று (13) நிறைவுக்கு வந்தன.

இதில் 11 போட்டிகள் சமநிலையில் நிறைவடைந்த போதிலும், கடற்படை விளையாட்டுக் கழகத்துக்கு எதிரான போட்டியில் நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் 6 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.

துடுப்பாட்டத்தைப் பொறுத்தமட்டில் பதுரெலிய கழகத்துடனான போட்டியில் பாணந்துறை விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த நிமேஷ் விமுக்தி (109 ஓட்டங்கள்) மற்றும் சானக ருவன்சிறி (105 ஓட்டங்கள்) சதமடித்து அசத்தினர். முதல்தர கிரிக்கெட்டில் நிமேஷின் 3ஆவது சதமாகவும், சானகவின் 7ஆவது சதமாகவும் பதிவாகியது.

அதுமாத்திரமின்றி, பாணந்துறை கழகத்துக்கான பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட்ட நிமேஷ் விமுக்தி, முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளையும். 2ஆவது இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளையும் வீத்தினார். இதன்மூலம் முதல்தர கிரிக்கெட்டில் 200 விக்கெட் மைல்கல்லை எட்டினார்.

அத்துடன். SSC கழகத்துக்கு எதிரான போட்டியில் செபஸ்டியனைட்ஸ் கழகத்தின் சச்சித ஜயதிலக (158 ஓட்டங்கள்) மற்றும் முவர்ஸ் விளையாட்டுக் கழகத்துக்கு எதிரான போட்டியில் குருநாகர் இளையோர் கிரிக்கெட் கழக வீரர்களான கயான் சிறிசோம (156 ஓட்டங்கள்), தமித் பெரேரா (104 ஓட்டங்கள்) போட்டியின் கடைசி நாளன்று சதங்களைக் குவித்தனர்.

பந்துவீச்சைப் பொறுத்தமட்டில் லங்கன் கிரிக்கெட் கழகத்தின் தமித சில்வா (5/60), ராகம கிரிக்கெட் கழகத்தின் சஷிக துலான் (6/69), சரசென்ஸ் விளையாட்டுக் கழகத்தின் சஷித பல்லியகுரு (6/104), நுகேகொட விளையாட்டுக் கழகத்தின் கரன் கைலா (5/151), நீர்கொழும்பு கிரிக்கெட் கழகத்தின் தனுஷ்க சந்தருவன் (6/29) மற்றும் கடற்படை விளையாட்டுக் கழகத்தின் டிலன்க அவுவார்ட் (7/49) ஆகிய வீரர்கள் ஐந்து விக்கெட் குவியலைப் பதிவு செய்தனர்.

இதேவேளை, மேஜர் பிரீமியர் லீக் தொடரின் 13ஆவது வாரத்துக்கான போட்டிகளுடன் முதல் சுற்று லீக் போட்டிகள் அனைத்து நிறைவுக்கு வந்தன.

போட்டியின் சுருக்கம்

முவர்ஸ் விளையாட்டுக் கழகம் – 526/9d (142.4) – பசிந்து சூரியபண்டார 195, ரமேஷ் மெண்டிஸ் 134, சொஹான் டி லிவேரா 88, தினுக டில்ஷான் 77, சமீர சந்தமால் 4/74, மதுரங்க நவீன் 2/183

குருநாகர் இளையோர் கிரிக்கெட் கழகம் – 306/3 (50) – கயான் சிறிசோம 156, தமித் பெரேரா 104*, அசித வன்னிநாயக 36, ரமேஷ் மெண்டிஸ் 2/94

முடிவு – போட்டி சமநிலையில் நிறைவு


தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் எதிர் நுகேகொட விளையாட்டுக் கழகம்

தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் – 522 (118.2) – சதீர சமரவிக்ரம 151, நவோத் பரணவிதான 147, சந்தூஷ் குணதிலக 87, கரன் கைலா 5/151, அரவிந்த ப்ரேமரத்ன 2/46, சுவத் மெண்டிஸ் 2/95

நுகேகொட விளையாட்டுக் கழகம் – 212/9d (36.5) – முர்தசா ட்ரன்க்வாலா 66, அபிஷேக் லியனாரச்சி 44, கரன் கைலா 33, துலாஜ் சமுதித்த 3/55, கவிந்து பத்திரத்னே 2/37

முடிவு – போட்டி சமநிலையில் நிறைவு


ப்ளும்பீல்ட் கிரிக்கெட் கழகம் எதிர் Ace Capitals விளையாட்டுக் கழகம்

ப்ளும்பீல்ட் கிரிக்கெட் கழகம் – 233 (79.3) – ஹர்ஷ விதான 64, ஹஸ்னைன் பொக்ஹாரி 41, லஹிரு மதுசங்க 38, ரொஷான் ஜயதிஸ்ஸ 4/30, மலித் டி சில்வா 2/64

Ace Capitals கிரிக்கெட் கழகம் – 113/3 (26) – லசித் க்ரூஸ்புள்ளே 42, வனுஜ சஹன் 33*, மாதவ வர்ணபுர 2/20

முடிவு – போட்டி சமநிலையில் நிறைவு


பதுரெலிய கிரிக்கெட் கழகம் எதிர் பாணந்துறை விளையாட்டுக் கழகம்

பதுரெலிய கிரிக்கெட் கழகம் – 265 (87.4) – துனித் ஜயதுங்க 77, ரனேஷ் சில்வா 58, அனுக் பெர்னாண்டோ 48, நிமேஷ் விமுக்தி 5/98, கோஷான் தனுஷ்க 3/43

பாணந்துறை விளையாட்டுக் கழகம் – 333/8d (62) – நிமேஷ் விமுக்தி 109, சானக ருவன்சிறி 105, ரமின்த விஜேசூரிய 34, துனித் ஜயதுங்க 2/23, லஹிரு கமகே 2/40

பதுரெலிய கிரிக்கெட் கழகம் – 28/3 (6.1) – அனுக் பெர்னாண்டோ 20, நிமேஷ் விமுக்தி 3/06

முடிசு – போட்டி சமநிலையில் நிறைவு


BRC கழகம் எதிர் களுத்துறை நகர கழகம்

BRC கழகம் – 237 (54) – துஷான் ஹேமன்த 53, லஹிரு சமரகோன் 46, திலகரடன் சம்பத் 42, தேமால் பண்டார 4/68, சாரங்க ராஜகுரு 2/44, இஷான் அபேசேகர 2/51

களுத்துறை நகர கழகம் – 239 (81.4) – சாரங்க ராஜகுரு 53, சதுர பீரிஸ் 41, சவன் கன்கானம்கே 32, திலகரட்ன சம்பத் 4/67, சச்சின்த பீரிஸ் 3/67, துஷான் ஹேமன்த 2/46

BRC கழகம் – 280/7d (67.1) – லியோ ப்ரான்சிஸ்கோ 94, சச்சின் தல்பதாடு 82, மோதித ரணதுங்க 31, அபிஷேக் ஆனந்தகுமார 4/74

களுத்துறை நகர கழகம் – 139/5 (41) – சவன் கன்கானம்கே 65*, யொஹான் மெண்டிஸ் 34, திலகரட்ன சம்பத் 2/24

முடிவு – போட்டி சமநிலையில் நிறைவு


லங்கன் கிரிக்கெட் கழகம் எதிர் காலி கிரிக்கெட் கழகம்

லங்கன் கிரிக்கெட் கழகம் – 173 (93) – இசிவர திஸாநாயக 53, கீத் குமார 31, ரகு சர்மா 4/53, சதுர லக்ஷான் 3/46, மிஹிரங்க சில்வா 2/22

காலி கிரிக்;கெட் கழகம் – 232/7d (49) – யசோதா லங்கா 65, வினுர துல்ஷர 52, சாலித் பெர்னாண்டோ 22, தமித சில்வா 5/60

லங்கன் கிரிக்கெட் கழகம் – 30/0 (7)

முடிவு – போட்டி சமநிலையில் நிறைவு


கடற்படை விளையாட்டுக் கழகம் எதிர் நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம்

கடற்படை விளையாட்டுக் கழகம் – 162 (47.3) – அதீஷ நாணயக்கார 64, ரஷ்மிக மெவான் 45, தனுஷ்க சந்தருவன் 6/56, டில்ஷான் முனவீர 2/8

நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் – 152 (53.2) – அஷேன் சில்வா 36, ஜீவக சஷின் 32, டில்ஷான் முனவீர 23, டிலன்க அவுவார்ட் 7/49, நவின் கவிகார 2/66

கடற்படை விளையாட்டுக் கழகம் – 80 (29.4) – அதீஷ நாணயக்கார 21, கவிந்து ரணசிங்க 20, தனுஷ்க சந்தருவன் 6/29, உபுல் இந்திரிசிறி 4/12

நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் – 93/4 (15.4) – அஷேன் சில்வா 38*, புத்திக மதுசான் 2/27

முடிவு – நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் 6 விக்கெட்டுகளால் வெற்றி


NCC கழகம் எதிர் சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட்

NCC கழகம் – 304 (64.5) – ஜொஹான்னே டி சில்வா 60, சந்துன் வீரக்கொடி 51, லசித் எம்புல்தெனிய 46, அஹான் விக்ரமசிங்க 31, லசித் லக்ஷான் 4/135, ரஜிந்த புன்சிஹேவா 3/23, புலின தரங்க 2/45

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் – 159 (41) – கசுன் விதுர 81, புலின தரங்க 19, லசித் எம்புல்தெனிய 4/49, நிபுன் ரன்சிக 2/11, அஷைன் டேனியல் 2/55

NCC கழகம் – 276/7 (64) – வினுக ரூபசிங்க 50, லஹிரு உதார 46, சந்துன் வீரக்கொடி 46, அவிந்து தீக்ஷன 4/65

முடிவு – போட்டி சமநிலையில் நிறைவு


சரசென்ஸ் விளையாட்டுக் கழகம் எதிர் விமானப்படை விளையாட்டுக் கழகம்

சரசென்ஸ் விளையாட்டுக் கழகம் – 201/8d (66) – ப்ரமோத் மதுவன்த 73*, நிபுன் கருணாநாயக 50, கயான் சிறிசோம 3/40, துலான்ஜல மெண்டிஸ் 2/19

விமானப்படை விளையாட்டுக் கழகம் – 202/8d (58.2) – மதுசான் அவிச்சந்த்ரகுமார் 61, மிஷேன் சில்வா 36, சஷித பல்லியகுரு 6/104, துஷான் விமுக்தி 2/60

முடிவு – போட்டி சமநிலையில் நிறைவு


கண்டி சுங்க விளையாட்டுக் கழகம் எதிர் பொலிஸ் விளையாட்டுக் கழகம்

கண்டி சுங்க விளையாட்டுக் கழகம் – 425/8d (137) – இரோஷ் சமரசூரிய 103, சானக விஜேசிங்க 90, ஹர்ஷ ராஜபக்ஷ 79, சச்சித்ர பெரேரா 82, சுபுன் மதுசங்க 2/57, சதுர ரன்துனு 2/89, நளின் ப்ரியதர்ஷன 2/105

பொலிஸ் விளையாட்டுக் கழகம் – 162/3 (53.3) – ஹேஷான் தனுஷ்க 56, மதுரங்க சொய்சா 53

முடிவு – போட்டி சமநிலையில் நிறைவு

ராகம கிரிக்கெட் கழகம் எதிர் கொழும்பு கிரிக்கெட் கழகம்

ராகம கிரிக்கெட் கழகம் – 112 (37.4) – தெவிந்து டிக்வெல்ல 26, ஜனித் லியனகே 21, டெல்லோன் பீரிஸ் 18, சொனால் தினூஷ 4/44, அசித பெர்னாண்டோ 3/16

கொழும்பு கிரிக்கெட் கழகம் – 166 (70.5) – லசித் அபேரட்ன 82, சமிந்து விஜேசிங்க 41, சஷிக துலான் 6/69, டெலோன் பீரிஸ் 2/52

ராகம கிரிக்கெட் கழகம் – 114/3 (28) – நிஷான் மதுசங்க 61, சமிந்த பெர்னாண்டோ 36, சொனால் தினூஷ 2/52

முடிவு – போட்டி சமநிலையில் நிறைவு


செபஸ்டியன்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் SSC கழகம்

செபஸ்டியனைட்ஸ் கிரிக்கெட் கழகம் – 455 (117.5) – சச்சித ஜயதிலக 158, இஷான் ரங்கன 79, தரிந்து ரத்நாயக 61*, நிசல தாரக 3/107, கலன பெரேரா 2/74, பிரபாத் ஜயசூரிய 2/146

SSC கழகம் – 52/2 (13) – நிபுன் தனன்ஜய 24*, ரொஷேன் சில்வா 22, தரிந்து ரத்நாயக 2/21

முடிவு – போட்டி சமநிலையில் நிறைவு

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<