ரமேஷ் சதமடிக்க; 1000 ஓட்டங்கள் மைல்கல்லை எட்டினார் பசிந்து

988

இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் முதல்தர கழகங்களுக்கு இடையில் நடைபெற்று வரும் மூன்று நாட்கள் கொண்ட மேஜர் பிரீமியர் லீக் முதல்தர கிரிக்கெட் தொடரின் 13ஆவது வாரத்துக்கான 12 போட்டிகளின் இரண்டாவது நாள் ஆட்டங்கள் இன்று (11) நிறைவுக்கு வந்தன.

இதில் பெரும்பாலான போட்டிகள் மழை காரணமாக பாதிக்கப்ட்டாலும் ஒருசில வீரர்கள் முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் புதிய மைல்கல்லை எட்டியிருந்தனர்.

குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகத்துக்கு எதிரான போட்டியில் முவர்ஸ் விளையாட்டுக் கழகத்தின் அணித் தலைவர் ரமேஷ் மெண்டிஸ் சதமடித்து அசத்தினார். இம்முறை மேஜர் லீக் போட்டியில் அவரது 3ஆவது சதம் இதுவாகும்.

அத்துடன், இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 3 சதங்கள் மற்றும் 4 அரைச் சதங்களுடன் 809 ஓட்டங்களைக் குவித்துள்ளார். அதேபோல, பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட்டு வருகின்ற ரமேஷ் மெண்டிஸ் இதுவரை 41 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இதனிடையே, அதே அணியைச் சேர்ந்த 23 வயது இளம் வலது கை துடுப்பாட்ட வீரரான பசிந்து சூரியபண்டார, இம்முறை மேஜர் பிரீமியர் லீக்கில் 1000 ஓட்டங்களைக் கடந்த 2ஆவது வீரர் என்ற பெருமையைப் பெற்றுக் கொண்டதுடன், அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர்களில் 2ஆவது இடத்தையும் பிடித்தார்.

இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 81.00 என்ற துடுப்பாட்ட சராசரியுடன் 1064 ஓட்டங்களைக் குவித்துள்ளார். இதில் 4 சதங்களும், 4 அரைச் சதங்களும் அடங்கும்.

பந்துவீச்சைப் பொறுத்தமட்டில் பதுரெலிய கிரிக்கெட் கழகத்துக்கு எதிரான போட்டியில் பாணந்துறை விளையாட்டுக் கழத்தின் 23 வயது இடது கை சுழல் பந்துவீச்சாளரான நிமேஷ் விமுக்தி 98 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்திளார். இதன்மூலம் இம்முறை மேஜர் பிரீமியர் லீக்கில் 8ஆவது 5 விக்கெட் குவியலை அவர் பெற்றுக் கொண்டார்.

கடற்படை விளையாட்டுக் கழகத்துக்கு எதிரான போட்டியில் நீர்கொழும்பு கிரிக்கெட் கழகத்தின் தனுஷ்க சந்தருவன் (6/56) 5 விக்கெட் குவியலைப் பெற்றுக் கொண்டார்.

அனைத்துப் போட்டிகளினதும் மூன்றாவது நாள் ஆட்டம் நாளை (13) நடைபெறவுள்ளது.

போட்டியின் சுருக்கம்

முவர்ஸ் விளையாட்டுக் கழகம் எதிர் குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகம்

முவர்ஸ் விளையாட்டுக் கழகம் – 464/3 (125) – பசிந்து சூரியபண்டார 168*, ரமேஷ் மெண்டிஸ் 121*, சொஹான் டி லிவேரா 88, தினுக டில்ஷான் 77

தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் எதிர் நுகேகொட விளையாட்டுக் கழகம்

தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் – 427/5 (93) – சதீர சமரவிக்ரம 151, நவோத் பரணவிதான 147, சந்தூஷ் குணதிலக 48*, கரன் கைலா 3/122

ப்ளும்பீல்ட் கிரிக்கெட் கழகம் எதிர் Ace Capitals விளையாட்டுக் கழகம்

ப்ளும்பீல்ட் கிரிக்கெட் கழகம் – 190/6 (61.3) – ஹஸ்னைன் பொக்ஹாரி 41, லஹிரு மதுஷங்க 38, ஹர்ஷ விதான 38*, மலித் டி சில்வா 2/64

பதுரெலிய கிரிக்கெட் கழகம் எதிர் பாணந்துறை விளையாட்டுக் கழகம்

பதுரெலிய கிரிக்கெட் கழகம் – 265 (87.4) – துனித் ஜயதுங்க 77, ரனேஷ் சில்வா 58, அனுக் பெர்னாண்டோ 48, நிமேஷ் விமுக்தி 5/98, கோஷான் தனுஷ்க 3/43

பாணந்துறை விளையாட்டுக் கழகம் – 56/2 (14)

BRC கழகம் எதிர் களுத்துறை நகர கழகம்

BRC கழகம் – 237 (54) – துஷான் ஹேமன்த 53, லஹிரு சமரகோன் 46, திலகரடன் சம்பத் 42, தேமால் பண்டார 4/68, சாரங்க ராஜகுரு 2/44, இஷான் அபேசேகர 2/51

களுத்துறை நகர கழகம் – 239 (81.4) – சாரங்க ராஜகுரு 53, சதுர பீரிஸ் 41, சவன் கன்கானம்கே 32, திலகரட்ன சம்பத் 4/67, சச்சின்த பீரிஸ் 3/67, துஷான் ஹேமன்த 2/46

BRC கழகம் – 54/1 (18)

லங்கன் கிரிக்கெட் கழகம் எதிர் காலி கிரிக்கெட் கழகம்

லங்கன் கிரிக்கெட் கழகம் – 167/9 (90) – இசிவர திஸாநாயக 48*, கீத் குமார 31, ரகு சர்மா 4/53, சதுர லக்ஷான் 3/46

கடற்படை விளையாட்டுக் கழகம் எதிர் நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம்

கடற்படை விளையாட்டுக் கழகம் – 162 (47.3) – அதீஷ நாணயக்கார 64, ரஷ்மிக மெவான் 45, தனுஷ்க சந்தருவன் 6/56, டில்ஷான் முனவீர 2/8

நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் – 111/6 (33) – அஷேன் சில்வா 36, டில்ஷான் முனவீர 23, டிலன்க அவுவார்ட் 3/31, நவின் கவிகார 2/44

NCC கழகம் எதிர் சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம்

NCC கழகம் – 304 (64.5) – ஜொஹான்னே டி சில்வா 60, சந்துன் வீரக்கொடி 51, லசித் எம்புல்தெனிய 46, அஹான் விக்ரமசிங்க 31, லசித் லக்ஷான் 4/135, ரஜிந்த புன்சிஹேவா 3/23, புலின தரங்க 2/45

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் – 159 (41) – கசுன் விதுர 81, புலின தரங்க 19, லசித் எம்புல்தெனிய 4/49, நிபுன் ரன்சிக 2/11, அஷைன் டேனியல் 2/55

NCC கழகம் – 17/0 (3)

சரசென்ஸ் விளையாட்டுக் கழகம் எதிர் விமானப்படை விளையாட்டுக் கழகம்

சரசென்ஸ் விளையாட்டுக் கழகம் – 117/6 (48) – ப்ரமோத் மதுவன்த 35*, நிபுன் கருணாநாயக 22*, கயான் சிறிசோம 3/40

கண்டி சுங்க விளையாட்டுக் கழகம் எதிர் பொலிஸ் விளையாட்டுக் கழகம்

கண்டி சுங்க விளையாட்டுக் கழகம் – 405/6 (124) – இரோஷ் சமரசூரிய 103, சானக விஜேசிங்க 80*, ஹர்ஷ ராஜபக்ஷ 79, சுபுன் மதுசங்க 2/57

ராகம கிரிக்கெட் கழகம் எதிர் கொழும்பு கிரிக்கெட் கழகம்

ராகம கிரிக்கெட் கழகம் – 112 (37.4) – தெவிந்து டிக்வெல்ல 26, ஜனித் லியனகே 21, டெல்லோன் பீரிஸ் 18, சொனால் தினூஷ 4/44, அசித பெர்னாண்டோ 3/16

கொழும்பு கிரிக்கெட் கழகம் – 119/4 (42.2) – லசித் அபேரட்ன 53, சமிந்து விஜேசிங்க 41, சஷிக துலான் 4/37

செபஸ்டியன்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் SSC கழகம்

செபஸ்டியன்ஸ் கிரிக்கெட் கழகம் – 314/5 (82) – சச்சித ஜயதிலக 98*, இஷான் ரங்கன 79*, நிசல தாரக 3/74

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<