மேஜர் பிரீமியர் லீக்கில் புலின தரங்க ஹெட்ரிக் விக்கெட் சாதனை

SLC Major League Tournament 2022

211

இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் நடைபெற்றுவரும் முதல்தர கழகங்களுக்கிடையிலான மூன்று நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடரின் நான்காவது வாரத்துக்கான 12 போட்டிகளின் மூன்றாவதும், கடைசியுமான நாள் ஆட்டங்கள் நேற்று (11) நிறைவுக்கு வந்தன.

இதில் ராகம கிரிக்கெட் கழகம் மற்றும் பதுரெலிய கிரிக்கெட் கழகம் ஆகியன இன்னிங்ஸ் வெற்றிகளைப் பதிவு செய்ய, தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம், SSC கழகம், காலி கிரிக்கெட் கழகம், குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகம், கொழும்பு கிரிக்கெட் கழகம் மற்றும் செபஸ்டியன்ஸ் கிரிக்கெட் கழகம் ஆகிய கழகங்களும் வெற்றிகளை ஈட்டிக் கொண்டன.

இதனிடையே, சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகத்துக்காக விளையாடி வரும் 29 வயதான சுழல் பந்துவீச்சாளரான புலின தரங்க, சரசென்ஸ் விளையாட்டுக் கழகத்துக்கு எதிரான போட்டியில் ஹெட்ரிக் விக்கெட் எடுத்து அசத்தினார்.

அத்துடன், குறித்த போட்டியில் 64 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தி, முதல்தரப் போட்டிகளில் தனது சிறந்த பந்துவீச்சுப் பிரதியைப் பெற்றுக் கொண்டார்.

இது இவ்வாறிருக்க, செபஸ்டியன்ஸ் கிரிக்கெட் கழகத்துக்காக விளையாடி வருகின்ற இரண்டு கரங்களாலும் பந்துவீசுகின்ற சுழல் பந்துவீச்சாளரான தரிந்து ரத்நாயக, பொலிஸ் விளையாட்டுக் கழகத்துக்கு எதிரான போட்டியில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். இதன் மூலம் முதல்தரப் போட்டிகளில் தனது 200ஆவது விக்கெட் மைல்கல்லையும் எட்டினார்.

இது தவிர, பாணந்துறை விளையாட்டுக் கழகத்தின் நிமேஷ் விமுக்தி (7/45), இராணுவ விளையாட்டுக் கழகத்தின் கௌமால் நாணயக்கார (7/56), ராகம கிரிக்கெட் கழகத்தின் சஷிக துல்ஷான் (7/99), குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகத்தின் சகிது விஜேரட்ன (6/20) மற்றும் தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகத்தின் திலும் சுதீர (6/44) பந்துவீச்சில் அதிரா காண்பித்திருந்ததோடு, விமானப்படை விளையாட்டுக் கழகத்தின் துலஞ்சன மெண்டிஸ் மற்றும் கொழும்பு கிரிக்கெட் கழகத்தின் மாலிந்த புஷ்பகுமார ஆகியோர் 5 விக்கெட் குவியலைப் பதிவு செய்தனர்.

துடுப்பாட்டத்தைப் பொறுத்தவரை BRC கழகத்தின் லியோ ப்ரான்சிஸ்கோ மற்றும் சரசென்ஸ் விளையாட்டுக் கழகத்தின் நவிது விதானகே சதமடித்து அசத்த, நுகேகொட கழகத்துக்காக விளையாடி வருகின்ற இந்திய வீரர் முர்தசா த்ருக்வாலா இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதமடித்தார்.

போட்டியின் சுருக்கம்

SSC கழகம் எதிர் களுத்துறை நகர கழகம்

SSC கழகம் – 394/5d (88) – மனோஜ் சரத்சந்த்ர 110*, நுவனிது பெர்னாண்டோ 100, லக்ஷித மானசிங்க 86, சம்மு அஷான் 73, தேஷான் செனவிரட்ன 3/61

களுத்துறை நகர கழகம் – 204 (69.1) – சுகித மனோஜ் 89, ஹிருன சிகேரா 31, தரிந்து சிறிவர்தன 22, பிரபாத் ஜயசூரிய 4/62, நிம்னக ஜயதிலக 2/2

களுத்துறை நகர கழகம் – 207 (83) F/O – தரிந்து சிறிவர்தன 74, தேஷான் செனவிரட்ன 26, சுகித மனோஜ் 25, பிரபாத் ஜயசூரிய 4/45, கவிந்து நதீஷான் 2/32, நிம்னக ஜயதிலக 2/41

SSC கழகம் – 18/1 (2.3)

முடிவு – SSC கழகம் 9 விக்கெட்டுகளால் வெற்றி


காலி கிரிக்கெட் கழகம் எதிர் கண்டி சுங்க விளையாட்டுக் கழகம்

காலி கிரிக்கெட் கழகம் – 231 (105.1) – கவிந்து எதிரவீர 54, சதுர லக்ஷான் 41, மெதுஷன் திலின 5/80, ரவீந்த்ர கருணாரட்ன 2/33

கண்டி சுங்க விளையாட்டுக் கழகம் – 146 (56.2) – இரோஷ் சமரசூரிய 46, ஹரிந்து ஜயசேகர 40, ரகு சர்மா 7/56

காலி கிரிக்கெட் கழகம் – 209/5d (50) – சமீன் கண்தனாராச்சி 92, விநுர துல்சர 53, டில்ஷான் காஞ்சன 21, சித்தார்த் சிட்னிஸ் 2/32

கண்டி சுங்க விளையாட்டுக் கழம் – 151 (42) – ரவீந்திர கருணாரட்ன 94*, ஹரிந்து ஜயசேகர 28, சந்துன் மதுஷங்க 3/35, ரகு சர்மா 3/60, சுபானு ராஜபக்ஷ 2/22

முடிவு – காலி கிரிக்கெட் கழகம் 143 ஓட்டங்களால் வெற்றி


குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகம் எதிர் லங்கன் கிரிக்கெட் கழகம்

குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகம் – 306 (83) – தனுஷ்க தர்மசிறி 58, தமித் பெரேரா 56, தினுஷ்க மாலன் 72, லஹிரு ஜயரட்ன 24, மிரங்க விக்ரமகே 3/37, ரஜீவ வீரசிங்க 3/75, யசிரு ரொட்றிகோ 2/54, சந்துன் அபேரட்ன 2/58

லங்கன் கிரிக்கெட் கழகம் – 174 (70.4) – யசிரு ரொட்றிகோ 33*, ஷெஹான் பெர்னாண்டோ 31, மிரங்க விக்ரமகே 27, தினுஷ்க மாலன் 3/30, சகிந்து விஜேரட்ன 3/47

குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகம் – 230/7d (47.3) – மொஹமட் மோஷின் 76, கயான் மனீஷன் 43, அசன்த பஸ்நாயக 31*, ஹேஷான் மதுஷங்க 3/59, யசிரு ரொட்றிகோ 2/38

லங்கன் கிரிக்கெட் கழகம் – 101 (57.4) – சகிது விஜேரட்ன 6/20, தினுஷ்க மாலன் 2/14

முடிவு – குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகம் 261 ஓட்டங்களால் வெற்றி


நுகேகொட விளையாட்டுக் கழகம் எதிர் Ace Capital கிரிக்கெட் கழகம்

நுகேகொட விளையாட்டுக் கழகம் – 322 (101.3) – முர்தசா த்ருக்வாலா 123, சுவத் மெண்டிஸ் 63, அரவிந்த ப்ரமேரட்ன 35, ரொஷான் ஜயதிஸ்ஸ 4/79, சிதும் ஜயசேகர 2/83

Ace Capital கிரிக்கெட் கழகம் – 197 (56.5) – ஓஷத பெர்னாண்டோ 93*, பிரமோத் ஹெட்டிவத்தே 48, சுவத் மெண்டிஸ் 4/44, அரவிந்த ப்ரேமரட்ன 3/17, சமிந்த பண்டார 2/41

நுகேகொட விளையாட்டுக் கழகம் – 207 (71) – முர்தசா ட்ரன்க்வாலா 101, பெதும் டில்ஷான் 50, நயன பெர்னாண்டோ 25, சச்சிந்து கொலம்பகே 4/54, ரொஷான் ஜயதிஸ்ஸ 3/56

Ace Capital கிரிக்கெட் கழகம் – 80/3 (26) – ஸ்வப்னில் அனில் 23, லசித் குரூஸ்புள்ளே 21, சஹன் நாணயக்கார 3/09

முடிவு – போட்டி சமநிலையில் நிறைவு


BRC கழகம் எதிர் ராகம கிரிக்கெட் கழகம்

BRC கழகம் – 160 (47.1) – மாலிந்த ஜயோத் 44, லஹிரு சமரகோன் 30, திலகரட்ன சம்பத் 24, எஷான் மாலிங்க 4/39, ஜனித் லியனகே 3/33, கல்ஹார சேனாரட்ன 2/25

ராகம் கிரிக்கெட் கழகம் – 413/9d (118) – நிஷான் மதுஷ்க 107, துலாஜ் பண்டார 74*, ஜனித் லியனகே 71, திலகரட்ன சம்பத் 2/53, மல்க மதுசங்க 2/56, துவிந்து திலகரட்ன 2/60

BRC கழகம் – 232 (77.3) – லியோ ப்ரான்சிஸ்கோ 104*, துஷான் ஹேமன்த 24, துவிந்து திலகரட்ன 23, சஷிக துல்ஷான் 7/99

முடிவு – ராகம கிரிக்கெட் கழகம் இன்னிங்ஸ் மற்றும் 21 ஓட்டங்களால் வெற்றி


தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் எதிர் விமானப்படை விளையாட்டுக் கழகம்

தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் – 345 (89.5) – ரவிந்து பெர்னாண்டோ 67, நவோத் பரணவிதான 61, திலும் சுதீர 52, ரொன் சந்த்ரகுப்த 46, கயான் சிறிசோம 5/135, துலான்ஜன மெண்டிஸ் 3/71

விமானப்படை விளையாட்டுக் கழகம் – 209 (60.2) – உதயவன்ச பராக்கிரம 49, மொவின் சுபசிங்க 45, திலும் சுதீர 4/85, ரவிந்து பெர்னாண்டோ 4/73

தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் – 221/8d (45) – கமேஷ் நிர்மால் 61, நவோத் பரணவிதான 42, துலான்ஜன மெண்டிஸ் 2/20

விமானப்படை விளையாட்டுக் கழகம் – 87 (29.4) – சசிந்து நாணயக்கார 19, திலும் சுதீர 6/44, ரவிந்து பெர்னாண்டோ 3/11

முடிவு – தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் 270 ஓட்டங்களால் வெற்றி


NCC கழகம் எதிர் இராணுவ விளையாட்டுக் கழகம்

NCC கழகம் – 282 (69.4) – சந்துன் வீரக்கொடி 95, லஹிரு உதார 59, நிபுன் ரன்சிக 25, வினுக ரூபசிங்க 25, கௌமால் நாணயக்கார 5/76

இராணுவ விளையாட்டுக் கழகம் – 108 (48.3) – தினேஷ் சந்திமால் 27, மஹேஷ் குமார 24, துலின டில்ஷான் 21, அஷைன் டேனியல் 4/30, லசித் எம்புல்தெனிய 3/29, ரவீன் சாயர் 2/22

NCC கழகம் – 191 (61) – அசேல் சிகேரா 58, சஹன் ஆரச்சிகே 36, லஹிரு உதார 34, கௌமால் நாணயக்கார 7/56, அசங்க மனோஜ் 2/44

இராணுவ விளையாட்டுக் கழகம் – 210/6 (77) – ஹிமாஷ லியனகே 55, துலின டில்ஷான் 43, கிஹான் கோரலகே 36, சஹன் ஆராச்சிகே 2/24, அஷைன் டேனியல் 2/49

முடிவு – போட்டி சமநிலையில் நிறைவு


சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் சரசென்ஸ் விளையாட்டுக் கழகம்

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் – 391 (131.1) – கௌரவ் ஜதார் 139, ரவீன் யசஸ் 87, அநுக் ஜொடின் 74, சந்துன் மெண்டிஸ் 4/123, கவிக டில்ஷான் 4/130

சரசென்ஸ் விளையாட்டுக் கழகம் – 195 (68.5) – நிபுன் கருணாநாயக 68, சிதார கிம்ஹான் 36, நவிந்து விதானகே 27, புலின தரங்க 5/64, ஷேசான் சில்வா 3/49

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் – 212/5 (62.4) – நவிந்து விதானகே 91*, தவீஷ கஹதுவாரச்சி 84, அவிந்து தீக்ஷன 3/47, இருஷ்க திமிர 2/47

முடிவு – போட்டி சமநிலையில் நிறைவு


கடற்படை விளையாட்டுக் கழகம் எதிர் பதுரெலிய விளையாட்டுக் கழகம்

கடற்படை விளையாட்டுக் கழகம் – 190 (67.4) – லஹிரு ஜயகொடி 46, அசந்த சிங்கப்புலி 38, சஹன் கோசல 34, சலன டி சில்வா 5/84, பர்விஸ் ரசூல் 4/70

பதுரெலிய விளையாட்டுக் கழகம் – 359 (77.5) – பர்விஸ் ரசூல் 135*, கிஹான் ரூபசிங்க 75, மலிந்து மதுரங்க 45, நவீன் கவிகார 6/159, சச்சித்ர சேனாநாயக்க 4/21

கடற்படை விளையாட்டுக் கழகம் – 160 (42.3) – அதீஷ நாணயக்கார 21, சுபுன் லீலாரட்ன 21, பர்விஸ் ரசூல் 5/53, சலன டி சில்வா 3/84

முடிவு – பதுரெலிய கிரிக்கெட் கழகம் இன்னிங்ஸ் மற்றும் 9 ஓட்டங்களால் வெற்றி


கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் கொழும்பு கிரிக்கெட் கழகம்

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் – 125 (40.2) – தனன்ஜய லக்ஷான் 30, சங்கீத் குரே 21, ஹஷான் துமிந்து 20, விஷ்வ பெர்னாண்டோ 5/36, மாலிந்த புஷ்பகுமார 3/22

கொழும்பு கிரிக்கெட் கழகம் – 236 (78.1) – மினோத் பானுக 68, சமிந்த விஜேசிங்க 56, பவன் ரத்நாயக 30, துனித் வெல்லாலகே 3/52, தனன்ஜய லக்ஷான் 2/31, சங்கீத் குரே 2/45

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் – 233 (91.4) – சலின் டி மெல் 92, துனித் வெல்லாலகே 59*, விஷாத் ரன்திக 26, அவிஷ்க பெரேரா 21, மாலிந்த புஷ்பகுமார 5/91, விஷ்வ பெர்னாண்டோ 3/54

கொழும்பு கிரிக்கெட் கழகம் – 125/5 (25.1) – அஷான் பிரியன்ஜன் 36*, கமிந்து மெண்டிஸ் 31, மினோத் பானுக 21, கவிஷ்க அன்ஜுல 2/35, சங்கீத் குரே 2/40

முடிவு – கொழும்பு கிரிக்கெட் கழகம் 5 விக்கெட்டுகளால் வெற்றி


பாணந்துறை விளையாட்டுக் கழகம் எதிர் ப்ளும்பீல்ட் கிரிக்கெட் கழகம்

பாணந்துறை விளையாட்டுக் கழகம் – 426/9d (125.1) – பார்த் பலாவத் 96, லக்ஷான் ரொட்றிகோ 95, ரொஷான் விஜேநாயக்க 77, அபிஷேக் குப்தா 48, பவன் டி சில்வா 46, சானக கோமசாரு 4/126, ஹஸ்னைன் பொக்ஹாரி 2/79

ப்ளும்பீல்ட் கிரிக்கெட் கழகம் – 135 (60.2) – கஜித கொடுவேகொட 32, சரித குமாரசிங்க 24, நிமேஷ் விமுக்தி 7/45

ப்ளும்பீல்ட் கிரிக்கெட் கழகம் – 227/6 (80) – லஹிரு மதுஷங்க 72, மாதவ வர்ணபுர 55, சரித குமாரசிங்க 29, நிமேஷ் விமுக்தி 3/83, தரிந்து கௌஷால் 2/33

முடிவு – போட்டி சமநிலையில் நிறைவு


பொலிஸ் விளையாட்டுக் கழகம் எதிர் செபஸ்டியன்ஸ் கிரிக்கெட் கழகம்

பொலிஸ் விளையாட்டுக் கழகம் – 107 (36.4) – லஹிரு தியன்த 24, சுபுன் மதுஷங்க 22, தரிந்து ரத்நாயக 7/47, சாமிக எதிரிசிங்க 2/36

செபஸ்டியன்ஸ் கிரிக்கெட் கழகம் – 218 (68.1) – மானல்கர் டி சில்வா 81, அக்ஷ்தீப் நாத் 71, நுவன் பிரதீப் 4/54, லஹிரு தியன்த 2/35

பொலிஸ் விளையாட்டுக் கழகம் – 239 (78) – சதுரங்க குமார 63*, உதய் கௌல் 42, சாமிக எதிரிசிங்க 5/93, சஷ்ரிக புஸ்ஸேகொல்ல 2/41, தரிந்து ரத்நாயக 2/89

செபஸ்டியன்ஸ் கிரிக்கெட் கழகம் – 130/2 (26.4) – லொஹான் டி சொய்ஸா 75*, அக்ஷ்தீப் நாத் 30

முடிவு – செபஸ்டியன்ஸ் கிரிக்கெட் கழகம் 8 விக்கெட்டுகளால் வெற்றி

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<