முதல்தர கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய நிபுன் தனன்ஜய

SLC Major League Tournament 2022

278
Nipuna

இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் முதல்தர கழகங்களுக்கு இடையில் நடைபெற்று வரும் மூன்று நாட்கள் கொண்ட மேஜர் பிரீமியர் லீக் முதல்தர கிரிக்கெட் தொடரின் எட்டாவது வாரத்துக்கான 12 போட்டிகள் இன்று (07) ஆரம்பமாகின.

இதில் SSC கழகத்தின் 22 வயது இடது கை ஆரம்ப துடுப்பாட்ட வீரர் நிபுன் தனன்ஜய கோல்ட்ஸ் கழகத்துக்கு எதிராக 245 பந்துகளில் 18 பௌண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 173 ஓட்டங்களை எடுத்தார். இது முதல்தர கிரிக்கெட்டில் அவரது அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையாகவும் அமைந்தது.

சிலாபம் மேரியன்ஸ் கழகத்துக்கு எதிரான போட்டியில் பதுரலிய கழகத்தின் தலைவர் அலங்கார அசங்க சதமடித்தார். 219 பந்துகளைச் சந்தித்த அவர் 16 பௌண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 127 ஓட்டங்களை எடுத்தார்.

அதேபோல, காலி கிரிக்கெட் கழகத்தின் தலைவர் சமீன் கந்தனாராச்சி குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகத்துக்கு எதிரான போட்டியில் 16 பெண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 123 ஓட்டங்களைப் பெற்றார். இது முதல்தர கிரிக்கெட்டில் அவரது அதிகபட்ச ஓட்டங்களாகும். அத்துடன் இம்முறை மேஜர் லீக்கில் தனது 3ஆவது சதத்தையும் அவர் பூர்த்தி செய்தார்.

மேலும், NCCகழகத்துக்கு எதிரான போட்டியில் நுகேகொட கழகத்தின் ருமேஷ் புத்திக 10 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 109 ஓட்டங்களைக் குவித்தார்.

இதேவேளை, மேஜர் லீக்கின் எட்டாவது வாரத்துக்கான முதல் நாளில் 16 அரைச் சதங்களைக் குவிக்கப்பட்டமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

பந்துவீச்சை பொறுத்தமட்டில் களுத்துறை நகர கிரிக்கெட் கழகத்துக்கு எதிரான போட்டியில் 18 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தி கண்டி சுங்க கழகத்தின் லெக் ஸ்பின் சுழல் பந்துவீச்சாளர் சச்சித்ர பெரேரா சிறந்த பந்துவீச்சைப் பதிவு செய்தார்.

மேலும், காலி கிரிக்கெட் கழகத்துக்கு எதிராக குருநாகல் இளையோர் அணியின் 20 வயது இடது கை சுழல் பந்துவீச்சாளர் சகிது விஜேரத்ன 46 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளையும், கொழும்பு கிரிக்கெட் கழகத்தின் 21 வயது இடது கை சுழல் பந்துவீச்சாளரான சொனால் தினுஷ, செபஸ்டியனைட்ஸ் கழகத்துக்கு எதிராக 22 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளையும்; கைப்பற்றியிருந்தனர்.

இந்த நிலையில், முவர்ஸ் கழகத்தின் தலைவர் ரமேஷ் மெண்டிஸ், BRC கழகத்துக்கு எதிரான போட்டியில் முதல்தர கிரிக்கெட் வாழ்க்கையில் தனது 150ஆவது விக்கெட் மைல்கல்லை எட்டினார்.

போட்டியின் சுருக்கம்

SSC கழகம் எதிர் கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம்

SSC கழகம் – 292/3 (83) – நிபுன் தனன்ஜய 173*, ரொஷேன் சில்வா 65*, துனித் வெல்லாலகே 3/105

BRC கழகம் எதிர் முவர்ஸ் விளையாட்டுக் கழகம்

BRC கழகம் – 231 (67.1) – லியோ ப்ரான்சிஸ்கோ 53, டிலான் ஜயலத் 38, துஷான் ஹேமன்த 32, திலகரட்ன சம்பத் 20, மிலான் ரத்நாயக 3/55, ரமேஷ் மெண்டிஸ் 3/64, சானுக டில்ஷான் 3/64

முவர்ஸ் விளையாட்டுக் கழகம் – 46/0 (16) – ஜனிஷ்க பெரேரா 21*, தினுக டில்ஷான் 20*

நுகேகொட விளையாட்டுக் கழகம் எதிர் என்சிசி கழகம்

நுகேகொட விளையாட்டுக் கழகம் – 252/5 (79) – ரமேஷ் புத்திக 109, ரனித லியனாரச்சி 46*, மதீஷ பத்திரன 4/24

பதுரெலிய கிரிக்கெட் கழகம் எதிர் சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம்

பதுரெலிய கிரிக்கெட் கழகம் – 282/4 (78.1) – அலங்கார அசங்க சில்வா 127, அனுக் பெர்னாண்டோ 92*

காலி கிரிக்கெட் கழகம் எதிர் குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகம்

காலி கிரிக்கெட் கழகம் – 239 (74.2) – சமீன் கன்தனேஆராச்சி 123, கவிந்து எதிரவீர 37, சாலித் பெர்னாண்டோ 34, சகிது விஜேரட்ன 6/46, தினுஷ்க மாலன் 2/42

குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகம் – 30/0 (8.2)

களுத்துறை நகர கழகம் எதிர் கண்டி சுங்க விளையாட்டுக் கழகம்

களுத்துறை நகர கழகம் – 142 (50.2) – நிபுன கமகே 46, சதீஷ் ஜயவர்தன 29, சச்சித்ர பெரேரா 6/18, இமேஷ் உதயங்க 2/41

கண்டி சுங்க விளையாட்டுக் கழகம் – 115/2 (34) – இமேஷ் உதயங்க 53*, ஹர்ஷ ராஜபக்ஷ 44*

பாணந்துறை விளையாட்டுக் கழகம் எதிர் கடற்படை விளையாட்டுக் கழகம்

பாணந்துறை விளையாட்டுக் கழகம் – 376/7 (90) – சனுக துலாஜ் 86, அபிஷேக் குப்தா 61, நிமேஷ் விமுக்தி 58*, பவன் டி சில்வா 50, நவின் கவிகார 2/62, டிலங்க அவ்வார்ட் 2/86

இராணுவ விளையாட்டுக் கழகம் எதிர் தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம்

இராணுவ விளையாட்டுக் கழகம் – 212 (47.4) – மஹேஷ் குமார 50, லக்ஷான் எதிரிசிங்க 38, யசோத மெண்டிஸ் 31, ஷிரான் பெர்னாண்டோ 4/75, கவிந்து பத்திரத்னே 3/50, ரவீன் டி சில்வா 2/23

தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் – 92/6 (22) – நவோத் பரணவிதான 50, யசோத மெண்டிஸ் 2/19, சீக்குகே பிரசன்ன 2/22, அசங்க மனோஜ் 2/50

செபஸ்டியன்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் கொழும்பு கிரிக்கெட் கழகம்

செபஸ்டியன்ஸ் கிரிக்கெட் கழகம் – 151 (53.3) – லொஹான் டி சொய்ஸா 57, மானல்கர் டி சில்வா 28, ரையன் பெர்னாண்டோ 21, சொனால் தினூஷ 5/22, கமிந்து மெண்டிஸ் 3/27

கொழும்பு கிரிக்கெட் கழகம் – 128/2 (25) – மினோத் பானுக 60*, கமிந்து மெண்டிஸ் 47

ராகம கிரிக்கெட் கழகம் எதிர் லங்கன் கிரிக்கெட் கழகம்

ராகம கிரிக்கெட் கழகம் – 290/5 (81) – தினெத் திமோத்ய 93, நிஷான் மதுஷ்க 64, ஜனித் லியனகே 48, ரஜீவ வீரசிங்க 2/63

விமானப்படை விளையாட்டுக் கழகம் எதிர் ப்ளும்பீல்ட் கிரிக்கெட் கழகம்

விமானப்படை விளையாட்டுக் கழகம் – 235/7 (87) – சச்சின் ஜயவர்தன 59, கசுன் ஏகநாயக 48, ஆதித்ய சிறிவர்தன 39*, ஹஸ்னைன்; பொக்ஹாரி 3/49

சரசென்ஸ் விளையாட்டுக் கழகம் எதிர் நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம்

சரசென்ஸ் விளையாட்டுக் கழகம் – 235 (82.2) – சிதார கிம்ஹான் 61, நிபுன் கருணாநாயக 74, துஷான் விமுக்தி 60, உபுல் இந்திரசிறி 4/63, சனுர பெர்னாண்டோ 3/44

நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் – 23/1 (6)

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<