இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் நடைபெற்றுவரும் முதல்தர கழகங்களுக்கிடையிலான மூன்று நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடரின் மூன்றாவது வாரத்துக்கான 12 போட்டிகளில் நேற்று (02) 07 போட்டிகள் ஆரம்பமாகின.
இதில் கண்டி சுங்க விளையாட்டுக் கழத்துக்கு எதிராக முவர்ஸ் விளையாட்டுக் கழகத்தின் சுழல் பந்துவீச்சாளரான தீஷன் விதுசன் 44 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தார். முதல்தரப் போட்டிகளில் அவரது முதலாவது 5 விக்கெட் குவியல் இதுவாகும்.
இறுதியாக கடந்த வாரம் நடைபெற்ற பொலிஸ் விளையாட்டுக் கழகத்துக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய அவர், இதுவரை நடைபெற்ற 3 போட்டிகளில் 16 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள் தரவரிசையில் 4ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.
>> முவர்ஸ் கழகத்துக்காக பந்துவீச்சில் பிரகாசித்த தீஷன் விதுசன்
இதனிடையே, நேற்று நடைபெற்ற போட்டிகளில் காலி கிரிக்கெட் கழகத்துக்கு எதிரான போட்டியில் BRC கழகத்தின் துஷான் ஹேமந்த 7 விக்கெட்டுகளையும், கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகத்துக்கு எதிரான போட்டியில் செபஸ்டியன்ஸ் கிரிக்கெட் கழகத்தின் தரிந்து ரத்னாயக்க 7 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தியிருந்தனர்.
இது தவிர துடுப்பாட்டத்தை பொறுத்தமட்டில் 7 அரைச் சதங்கள் போட்டிகளின் முதல் நாளான நேற்றைய தினம் பதிவாகியமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, நீர்கொழும்பு கிரிக்கெட் கழகத்துக்கும் ப்ளும்பீல்ட் கிரிக்கெட் கழகத்துக்கும் இடையிலான போட்டி மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாத நிலையில் கைவிடப்பட, நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக மேலும் 4 போட்டிகள் 4ஆம் திகதி ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
போட்டியின் சுருக்கம்
கண்டி சுங்க விளையாட்டுக் கழகம் எதிர் முவர்ஸ் விளையாட்டுக் கழகம்
கண்டி சுங்க விளையாட்டுக் கழகம் – 116 (43.4) – ரஷ்மிக மதுஷங்க 47*, ருவீன் பொன்சேகா 23, தீஷன் விதுசன் 5/44, சானுக டில்ஷான் 3/46
முவர்ஸ் விளையாட்டுக் கழகம் – 142/1 (46) – தினுக டில்ஷான் 72*, பபசர வதுகே 59
Ace Capital கிரிக்கெட் கழகம் எதிர் தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம்
Ace Capital கிரிக்கெட் கழகம் – 151 (55.4) – ப்ரமோத் ஹெட்டிவத்தே 69, சச்சிந்து கொலம்பகே 24*, கவிந்து பத்திரத்னே 3/14, டில்ருவன் பெரேரா 3/44, திலும் சுதீர 2/57
தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் – 94/3 (31) – ரொன் சந்த்ரகுப்த 43, சதீர சமரவிக்ரம 26
காலி கிரிக்கெட் கழகம் எதிர் BRC கழகம்
காலி கிரிக்கெட் கழகம் – 178 (56.2) – யசோதா லங்கா 42, கவிந்து எதிரிவீர 33, சமீன் கனதெனஆரச்சி 31, சுபானு ராஜபக்ஷ 27, ரஜித் ப்ரியான் 23, துஷான் ஹேமந்த 7/65, லஹிரு சமரகோன் 2/37
BRC கழகம் – 114/3 (33) – துஷான் ஹேமந்த 31, லஹிரு சமரகோன் 30, டிலான் ஜயலத் 23, சுபானு ராஜபக்ஷ 2/42
சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் கடற்படை விளையாட்டுக் கழகம்
சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் – 276/6 (90) – புலின தரங்க 65*, கசுன் விதுர 61, கௌரவ் ஜாதர் 52, திமிர இருஷிக 39, ரவீன் யசஸ் 39*, லஹிரு ஜயகொடி 2/35, கசுன் ஏகநாயக்க 2/49
இராணுவ கிரிக்கெட் கழகம் எதிர் நுகேகொட விளையாட்டுக் கழகம்
இராணுவ கிரிக்கெட் கழகம் – 150 (65.2) – கிஹான் கோரளகே 37, ஷெஹான் பெர்னாண்டோ 28, பெதும் பொதேஜு 23, சஹன் நாணயக்கார 3/20, அரவிந்த ப்ரேமரத்ன 3/47
நுகேகொட விளையாட்டுக் கழகம் – 61/3 (25)
கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் செபஸ்டியன்ஸ் கிரிக்கெட் கழகம்
கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் – 274 (73.4) – விஷாத் ரந்திக 92*, தனன்ஜய லக்ஷான் 41, சங்கீத் குரே 28, தரிந்து ரத்னாயக்க 7ஃ116
செபஸ்டியன்ஸ் கிரிக்கெட் கழகம் – 49/3 (14)
ராகம கிரிக்கெட் கழகம் எதிர் குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகம்
ராகம கிரிக்கெட் கழகம் – 38/2 (18) – நுஷால் தர்மரத்ன 24
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<