இலங்கை கிரிக்கெட் சபை (SLC) இளம் கிரிக்கெட் வீரர்களுக்காக ஒழுங்கு செய்து நடாத்தி வரும் “மேஜர் எமர்ஜிங் லீக் (Emerging Major League)” தொடரின் அரையிறுதிப் போட்டிகள் இன்று நடைபெற்று முடிந்தன.
மூன்று நாட்கள் கொண்ட போட்டிகளாக நடைபெற்ற இந்த அரையிறுதிப் போட்டிகளில் கொழும்பு கோல்ட்ஸ் கழகம் மற்றும் சிலாபம் மேரியன்ஸ் அணிகள் வெற்றிபெற்று, இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றன. இதில், சிலாபம் மேரியன்ஸ் அணி முதல் இன்னிங்ஸ் புள்ளிகளால் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இலங்கையில் மற்றொரு கிரிக்கெட் மைதானம்!
இலங்கை கிரிக்கெட் சபை மற்றும்……………..
SSC எதிர் கொழும்பு கோல்ட்ஸ் கழகம்
கட்டுநாயக்க மேரியன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற SSC அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற கொழும்பு கோல்ட்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றது.
Photos – Day 1 | Day 2 | Day 3
போட்டியின் சுருக்கம்
SSC (முதல் இன்னிங்ஸ்) – 128 (39.2) – கிரிஷான் சஞ்சுல 28, சொஹான் டி லிவேரே 25, தனன்ஜய லக்ஷான் 4/28, பிரவீன் ஜயவிக்ரம 3/12
கொழும்பு கோல்ட்ஸ் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 185 (52.2) – கவிஷ்க அஞ்சுல 64, விஷாட் ரந்திக 34, ஆகாஷ் சேனாரத்ன 5/67, தனீஷ வீரகோன் 2/44
SSC (இரண்டாவது இன்னிங்ஸ்) – 192 (51.2) – பசிந்து சூரியபண்டார 83, ஆகாஷ் சேனாரத்ன 25, பிரவீன் ஜயவிக்ரம 5/84, மஹேஷ் தீக்ஷன 2/27
கொழும்பு கோல்ட்ஸ் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 136/2 (42.4) – சந்துஷ் குணதிலக்க 55*, விஷாட் ரசந்திக 46*, தனன்ஜய லக்ஷான் 30,
முடிவு – கொழும்பு கோல்ட்ஸ் கழகம் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி
சிலாபம் மேரியன்ஸ் கழகம் எதிர் இராணுவப்படை கிரிக்கெட் கழகம்
கொழும்பு பி.சரா. ஓவல் மைதானத்தில் நடைபெற்ற சிலாபம் மேரியன்ஸ் கழகம் மற்றும் இராணுவப்படை கிரிக்கெட் கழக அணிகளுக்கு இடையிலான போட்டி சமனிலையில் முடிவடைந்த போதும், முதல் இன்னிங்ஸ் புள்ளிகள் அடிப்படையில், சிலாபம் மேரியன்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றது.
லசித் மாலிங்கவின் ஓய்வு தொடர்பில் வெளியான புதிய தகவல்!
இலங்கை T20I அணியின் தலைவர் லசித்…………….
Photos – Day 1 | Day 2 | Day 3
சிலாபம் மேரியன்ஸ் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 255 (115.2) – நிமேஷ் விமுக்தி 58, கவிந்து இரோஷ் 56, சனோஜ் விஜேதுங்க 47, கவிந்து பண்டார 37, மலீஷ அலுத்கெதர 3/63, துலின டில்ஷான் 2/27, ஹன்ச டி சில்வா 2/43
இராணுவப்படை கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 166 (81.2) – ஹிமேஷ லியனகே 51, பெதும் குமார 39, ஹன்ச டி சில்வா 27, லசித் குரூஸ்புள்ளே 4/44, நிமேஷ் விமுக்தி 3/52
முடிவு – போட்டி சமநிலை (முதல் இன்னிங்ஸ் புள்ளியால் சிலாபம் மேரியன்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி)
>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<