கோல்ட்ஸ் அணிக்காக சதம் விளாசிய அவிஷ்க பெர்னாந்து

148

இலங்கை கிரிக்கெட் சபை (SLC), உள்ளூர் கழங்கள் இடையே நடாத்தும் மேஜர் எமர்ஜிங் மூன்று நாட்கள் கொண்ட முதல்தரக் கிரிக்கெட் தொடரின் காலிறுதிப் போட்டிகள் நான்கினதும் முதல் நாள் ஆட்டங்கள் இன்று (12) நிறைவுக்கு வந்தன. 

முதல் நாளுக்கான போட்டிகளில் கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் மற்றும் சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் என்பன சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தியிருந்தd.

விமானப்படை விளையாட்டுக் கழகம் எதிர் கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் 

கொழும்பு BRC மைதானத்தில் ஆரம்பமான இந்தப் போட்டியில் முதலில் துடுப்பாடிய விமானப்படை விளையாட்டுக் கழகம் துடுப்பாட்ட அனர்த்தம் ஒன்றினை சந்தித்து 104 ஓட்டங்களுக்கு தமது முதல் இன்னிங்ஸின் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்தது.

மக்கள் எண்ணுவதும், எனது வாழ்க்கையும் வித்தியாசமானது – தனுஷ்க குணத்திலக்க

இலங்கை கிரிக்கெட் அணியின் அதிரடி துடுப்பாட்டவீரர்களில் ஒருவரான தனுஷ்க…

விமானப்படை அணிக்காக துடுப்பாட்டத்தில் போராடியிருந்த சபீக் இப்தாரி 47 ஓட்டங்கள் குவிக்க, கோல்ட்ஸ் கிரிக்கெட் அணிக்காக பிரவீன் ஜயவிக்ரம 5 விக்கெட்டுக்களைச் சாய்த்திருந்தார். 

பின்னர் தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பம் செய்த கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் அவிஷ்க பெர்னாந்துவின் அபார சதத்தோடு போட்டியின் முதல் நாள் ஆட்டம் நிறைவுக்கு வரும் போது தமது முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுக்களை இழந்து 259 ஓட்டங்களுடன் பலமான நிலையில் காணப்படுகின்றது. 

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகத்திற்காக சதம் பெற்றிருந்த அவிஷ்க பெர்னாந்து 120 ஓட்டங்களை குவித்திருந்தார். மறுமுனையில், சுமித லக்ஷன் விமானப்படை அணிக்காக 3 விக்கெட்டுக்களை சாய்த்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

போட்டியின் சுருக்கம்

விமானப்படை கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 104 (44.1) சபீக் இப்தாரி 47, பிரவீன் ஜயவிக்ரம 5/30

கொழும்பு கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 259/4 (48) அவிஷ்க பெர்னாந்து 120, சுமின்த லக்ஷன் 3/105


சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் NCC

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழக அணியின் சொந்த மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியில் முதலில் துடுப்பாடி வரும் சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் லசித் குரூஸ்புள்ளேயின் அபார சதத்தோடு 323 ஓட்டங்களை தமது முதல் இன்னிங்ஸில் பெற்றது. 

சிலாபம் மேரியன்ஸ் அணி சார்பில் சதம் பெற்ற லசித் குரூஸ்புள்ளே 134 ஓட்டங்களை குவித்திருக்க, லசித் எம்புல்தெனிய NCC அணிக்காக 4 விக்கெட்டுக்களைச் சாய்த்திருந்தார். 

பின்னர் தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த NCC அணி போட்டியின் முதல்நாள் ஆட்டம் நிறைவுக்கு வரும்போது 41 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து காணப்படுகின்றது. 

போட்டியின் சுருக்கம் 

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 323 (67.1) லசித் குரூஸ்புள்ளே 134, றிசித் உபுமல் 56, தில்ஷான் சஞ்சீவ 55, லசித் எம்புல்தெனிய 4/86

NCC – 41/3 (23) 


இராணுவப்படை கிரிக்கெட் கழகம் எதிர் கடற்படை விளையாட்டுக் கழகம்

NCC கிரிக்கெட் கழக மைதானத்தில் இந்தப் போட்டி ஆரம்பமானது. போட்டியில் முதலில் துடுப்பாடி வருகின்ற இராணுவப்படை விளையாட்டுக் கழகம் 66 ஓவர்களில் தமது அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 139 ஓட்டங்களை தமது முதல் இன்னிங்ஸில் எடுத்தது. 

இராணுவப்படை அணியின் துடுப்பாட்டம் சார்பில் கிஹான் கோரலகே 31 ஓட்டங்களுடன் தனது தரப்பில் அதிகூடிய ஓட்டங்களை பதிவு செய்ய சவிந்து பீரிஸ் 3 விக்கெட்டுக்களை கடற்படை அணிக்காக சாய்த்திருந்தார். 

பின்னர் தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பாடிவரும் கடற்படை விளையாட்டுக் கழகம் போட்டியின் முதல் நாள் ஆட்டம் நிறைவுக்கு வரும் போது ஒரு விக்கெட்டினை இழந்து 2 ஓட்டங்களுடன் காணப்படுகின்றது. 

போட்டியின் சுருக்கம்

இராணுவப்படை விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 139 (66) கிஹான் கோரலகே 31, சவிந்து பீரிஸ் 3/41

கடற்படை விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 2/1 (4)  


SSC எதிர் தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் 

மேரியன்ஸ் கழக கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறும் இப்போட்டியில் முதலில் SSC அணி தமது முதல் இன்னிங்ஸில் 121 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. 

SSC அணியின் துடுப்பாட்டம் சார்பில் சொஹான் டி லிவேரா 28 ஓட்டங்களுடன் வீரர் ஒருவர் பெற்ற அதிகூடிய ஓட்டங்களை பதிவு செய்ய சுப்புன் கவிந்த மற்றும் தமித்த சில்வா ஆகியோர் தலா 4 விக்கெட்டுக்கள் வீதம் தமிழ் யூனியன் அணிக்காக கைப்பற்றியிருந்தனர். 

ஷாய் ஹோப்பின் அதிரடியில் ஆப்கானை வைட்வொஷ் செய்தது மேற்கிந்திய தீவுகள்

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இன்று (11) நடைபெற்ற கடைசி ஒருநாள் போட்டியில்…

பின்னர் தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் 152 ஓட்டங்களை தங்களது முதல் இன்னிங்ஸில் எடுத்தது. தமிழ் யூனியன் அணியின் துடுப்பாட்டம் சார்பில் யோஹான் மெண்டிஸ் அரைச்சதம் பெற்று 63 ஓட்டங்கள் குவித்திருக்க, ஆகாஷ் செனரத்ன SSC அணிக்காக 4 விக்கெட்டுக்களை சாய்த்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

தொடர்ந்து 31 ஓட்டங்கள் பின்தங்கியவாறு தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை தொடங்கிய SSC அணி, போட்டியின் முதல் நாள் ஆட்டம் நிறைவுக்கு வரும் போது 19 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுக்களை இழந்து காணப்படுகின்றது. 

போட்டியின் சுருக்கம்

SSC (முதல் இன்னிங்ஸ்) – 121 (36.1) சோஹான் டி லிவேரா 28, சுபுன் கவிந்த 4/22, தமித்த சில்வா 4/31

தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 152 (45.5) யோஹான் மெண்டிஸ் 63, ஆகாஷ் செனரத்ன 4/42

SSC (இரண்டாம் இன்னிங்ஸ்) – 19/1 (7) 

இன்று ஆரம்பமாகிய அனைத்துப் போட்டிகளினதும் இரண்டாம் நாள் ஆட்டங்கள் நாளை தொடரும் 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<