இலங்கை கிரிக்கெட் சபை (SLC) இளம் கிரிக்கெட் வீரர்களுக்காக ஒழுங்கு செய்து நடாத்தி வரும் “மேஜர் எமர்ஜிங் லீக் (Emerging Major League)” தொடரின் இறுதிப் போட்டியில் முதல் இன்னிங்ஸ் புள்ளிகளால் வெற்றிபெற்ற கொழும்பு கோல்ட்ஸ் அணி தொடரின் சம்பினாகியது.
கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற்ற இந்த இறுதிப் போட்டியில் சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் மற்றும் கொழும்பு கோல்ட்ஸ் கழக அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
மேஜர் எமர்ஜிங் இறுதிப் போட்டியில் கோல்ட்ஸ், மேரியன்ஸ் அணிகள்
இலங்கை கிரிக்கெட் சபை (SLC) இளம் கிரிக்கெட் வீரர்களுக்காக ஒழுங்கு செய்து நடாத்தி வரும் “மேஜர் எமர்ஜிங்
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கொழும்பு கோல்ட்ஸ் கழக அணி முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை, சிலாபம் மேரியன்ஸ் அணிக்கு வழங்கியது.
மூன்று நாட்கள் கொண்ட இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சிலாபம் அணி 143 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. துடுப்பாட்டத்தில் டில்ஷான் சஞ்சீவ அதிகபட்சமாக 46 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள, ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர்.
பந்துவீச்சில் கோல்ட்ஸ் அணி சார்பில் நிபுன் ரன்சிக 4 விக்கெட்டுகளை சாய்க்க, கவிஷ்க அஞ்சுல 3 விக்கெட்டுகளையும், நிபுன் மாலிங்க 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
பதிலுக்கு தங்களுடைய முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த கோல்ட்ஸ் அணி, ஜெஹான் டேனியல், விஷாட் ரந்திக மற்றும் தனன்ஜய லக்ஷான் ஆகியோரின் அரைச் சதங்களின் உதவியுடன் 316 ஓட்டங்களை குவித்தது. ஜெஹான் டேனியல் 89 ஓட்டங்கள், விஷாட் ரந்திக 63 ஓட்டங்கள் மற்றும் தனன்ஜய லக்ஷான் 61 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றனர். பந்துவீச்சில் அசித பெர்னாண்டோ 5 விக்கெட்டுகளையும், நிம்சர அதரகல்ல 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
பின்னர், 173 ஓட்டங்கள் பின்னடைவில் தங்களுடைய இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த சிலாபம் மேரியன்ஸ் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 153 ஓட்டங்களை பெற்றிருந்த போது, மழை காரமணாக போட்டி நிறுத்தப்பட்டது. தொடர்ந்தும், போட்டியில் மழை குறுக்கிட்டதால், முதல் இன்னிங்ஸ் ஓட்டங்களின்படி, கோல்ட்ஸ் அணிக்கு வெற்றி வழங்கப்பட்டது.
சிலாபம் மேரியன்ஸ் அணி சார்பில் அதிகபட்சமாக டில்ஷான் சஞ்சீவ ஆட்டமிழக்காமல் 50 ஓட்டங்களையும், நிமேஷ் விமுக்தி 42 ஓட்டங்களையும் பெற்றுக்கொள்ள, பந்துவீச்சில் நிபுன் ரன்சிக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
போட்டியின் சுருக்கம்
சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் – 143 (43.5) – டில்ஷான் சஞ்சீவ 46, நிமேஷ் விமுக்தி 25, நிபுன் ரன்சிக 4/28, கவிஷ்க அஞ்சுல 3/43, நிபுன் மாலிங்க 2/29
கொழும்பு கோல்ட்ஸ் கழகம் – 316 (97.3) – ஜெஹான் டேனியல் 89, விஷாட் ரந்திக 63, தனன்ஜய லக்ஷான் 61, அசித பெர்னாண்டோ 5/62, நிம்சர அதரகல 4/8
சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 153/6 (41.4) – டில்ஷான் சஞ்சீவ 50*, நிமேஷ் விமுக்தி 42, கவிந்து பண்டார 30*, நிபுன் ரன்சிக 2/16
முடிவு – முதல் இன்னிங்ஸ் ஓட்டங்களால் கோல்ட்ஸ் அணிக்கு வெற்றி
மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க