Home Tamil சமாஸ், விதுஷனின் ஆட்டத்தோடு சம்பியனான மூர்ஸ் விளையாட்டுக் கழகம்

சமாஸ், விதுஷனின் ஆட்டத்தோடு சம்பியனான மூர்ஸ் விளையாட்டுக் கழகம்

522
Moors SC crown as U23 champions

இலங்கை கிரிக்கெட் சபை 2023ஆம் ஆண்டுக்கான 23 வயதின் கீழ்ப்பட்ட வீரர்களுக்காக ஒழுங்கு செய்திருக்கும் முன்னணி கழக கிரிக்கெட் (Major Club) தொடரின் இறுதிப் போட்டியில் மொஹமட் சமாஸ் மற்றும் தீசன் விதுஷன் ஆகியோரின் சிறப்பாட்டத்தோடு மூர்ஸ் விளையாட்டுக் கழகமானது (Moors Sports Club) சம்பியன் பட்டம் வென்றுள்ளது.

>> WATCH – இலங்கை டெஸ்ட் அணியின் புதிய தலைவர் யார்? குழப்பத்தில் Sri Lanka Cricket | Sports Roundup – Epi 229

கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் முன்னணி கழக கிரிக்கெட் தொடரினுடைய இறுதிப் போட்டி றாகம கிரிக்கெட் கழகம் மற்றும் மூர்ஸ் அணிகள் இடையே நடைபெற்ற நிலையில் இப்போட்டியில் முதல் இன்னிங்ஸ் அடிப்படையில் வெற்றி பெற்ற மூர்ஸ் கழக அணியே சம்பியன் பட்டம் வென்றிருக்கின்றது.

இரண்டு நாட்கள் கொண்ட இந்த தொடரின் இறுதிப் போட்டி நேற்று (22) ஆரம்பமாகியது. போட்டியின் நாணய சுழற்சியில் றாகம அணி வெற்றி பெற்று போட்டியில் முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்திருந்தது.

இதன்படி போட்டியில் தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பாடிய றாகம கிரிக்கெட் கழகம் 101.5 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 293 ஓட்டங்கள் எடுத்தது.

றாகம கிரிக்கெட் கழக அணியின் துடுப்பாட்டத்தில் துலாஜ் பண்டார 73 ஓட்டங்களை பெற்றதோடு ரன்மித் ஜயசேன 72 ஓட்டங்களை எடுத்தார். இதேநேரம் றாகம அணியில் அரைச்சதம் விளாசிய ஏனைய வீரரான சஷிக துல்ஷான் 52 ஓட்டங்களை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மறுமுனையில் மூர்ஸ் அணியின் பந்துவீச்சு சார்பில் சுழல்பந்துவீச்சாளரான தீசன் விதுஷன் 5 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி சிறப்பாக செயற்பட்டிருந்தார்.

இதன் பின்னர் தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த மூர்ஸ் கழக அணி போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நிறைவில் 62.5 ஓவர்களுக்கு 9 விக்கெட்டினை இழந்து 298 ஓட்டங்கள் எடுத்ததிருந்தது.

>> விஸ்டன் டெஸ்ட் சம்பியன்ஷிப் அணியில் இரு இலங்கை வீரர்கள்

போட்டியின் இரண்டாம் நாள் நிறைவடைந்ததன் காரணமாக முதல் இன்னிங்ஸ் ஓட்டங்களின் அடிப்படையில் இறுதிப் போட்டியின் வெற்றியாளர்களாக மூர்ஸ் கழக அணி மாறிக் கொண்டது. சோனகர் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்டம் சார்பில் மொஹமட் சமாஸ் 73 ஓட்டங்களை எடுத்தார். அதேவேளை சோஹான் டி லிவேரா மற்றும் ஜனிஷ்க பெரேரா தலா 72 ஓட்டங்கள் வீதம் எடுத்திருந்தனர்.

றாகம அணியின் பந்துவீச்சில் டெலோன் பீரிஸ் 5 விக்கெட்டுக்களை கைப்பற்றிய போதும், அது வீணாகியிருந்தது. போட்டியின் ஆட்டநாயகனாக மொஹமட் சமாஸ் தெரிவானார்.

தொடரின் விருதுகள்

  • சிறந்த துடுப்பாட்டவீரர் – சகுன லியனகே
  • சிறந்த பந்துவீச்சாளர் – தீசன் விதுஷன்
  • தொடர் நாயகன் – டெலோன் பீரிஸ்

போட்டியின் சுருக்கம்

றாகம கிரிக்கெட் கழகம் – 293 (91) துலாஜ் பண்டார 73, ரன்மித் ஜயசேன 72, சஷிக துல்ஷான் 52, தீசன் விதுஷன் 5/102

மூர்ஸ் விளையாட்டுக் கழகம் – 298/9 (62.5) மொஹமட் சமாஸ் 73, சோஹான் டி லிவேரா 72, ஜனிஷ்க பெரேரா 72, டெலோன் பீரிஸ் 5/102

முடிவு – மூர்ஸ் கிரிக்கெட் கழகம் முதல் இன்னிங்ஸ் வெற்றி

>>  மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<

Result

Match drawn

Ragama Cricket Club
293/10 (101.5)

Moors Sports Club
298/9 (62.5)

Batsmen R B 4s 6s SR
Yohan Liyanage c Yashitha Samararathne b Dinuka Dilshan 2 9 0 0 22.22
Nushal Dharmarathna c & b Dinuka Dilshan 10 34 2 0 29.41
Dulaj Bandara c Mohammed Shamaaz b Theesan Vithusan 73 150 5 0 48.67
Avishka Tharindu c Imithiyaz Slaza b Janishka Perera 8 25 1 0 32.00
Lahiru Dewatage c Mohammed Shamaaz b Theesan Vithusan 17 40 2 0 42.50
Ranmith Jayasena run out (Mohammed Shamaaz) 72 117 6 0 61.54
Dellon Peiris c Sohan de Livera b Theesan Vithusan 27 46 3 0 58.70
Shashika Dulshan c Omesh Mendis b Theesan Vithusan 52 104 4 1 50.00
Kalhara Senarathna c Janishka Perera b Imithiyaz Slaza 5 26 0 0 19.23
Ashan Fernando not out 15 58 2 0 25.86
Eshan Malinga c Janishka Perera b Theesan Vithusan 1 2 0 0 50.00


Extras 11 (b 4 , lb 6 , nb 0, w 1, pen 0)
Total 293/10 (101.5 Overs, RR: 2.88)
Bowling O M R W Econ
Dinuka Dilshan 9 3 19 2 2.11
Sisitha Madanayaka 3 1 8 0 2.67
Janishka Perera 17 2 43 1 2.53
Imithiyaz Slaza 30 5 97 1 3.23
Theesan Vithusan 36.5 4 102 5 2.79
Shakour Razni 6 0 14 0 2.33


Batsmen R B 4s 6s SR
Dinuka Dilshan c Kaveesha Dulanjana b Dellon Peiris 44 54 6 0 81.48
Omesh Mendis c Ranmith Jayasena b Kalhara Senarathna 0 1 0 0 0.00
Sohan de Livera c Kaveesha Dulanjana b Dellon Peiris 72 57 7 2 126.32
Janishka Perera c Dulaj Bandara b Shashika Dulshan 72 128 6 0 56.25
Mohammed Shamaaz c Ranmith Jayasena b Dellon Peiris 73 87 3 3 83.91
Risira Weerasuriya c Lahiru Dewatage b Shashika Dulshan 4 6 1 0 66.67
Shakour Razni not out 14 16 1 1 87.50
Razeen Ramlan st Lahiru Dewatage b Dellon Peiris 1 7 0 0 14.29
Imithiyaz Slaza c Kalhara Senarathna b Dellon Peiris 0 1 0 0 0.00
Sisitha Madanayaka b Shashika Dulshan 12 23 0 0 52.17
Theesan Vithusan not out 0 1 0 0 0.00


Extras 6 (b 1 , lb 1 , nb 4, w 0, pen 0)
Total 298/9 (62.5 Overs, RR: 4.74)
Bowling O M R W Econ
Kalhara Senarathna 3 0 31 1 10.33
Eshan Malinga 8 2 30 0 3.75
Shashika Dulshan 22 1 92 3 4.18
Dellon Peiris 20.5 2 102 5 4.98
Yohan Liyanage 4 0 21 0 5.25
Ashan Fernando 5 0 20 0 4.00