இலங்கை கிரிக்கெட் சபை (SLC) இலங்கையின் பிரதான உள்ளூர் கிரிக்கெட் கழகங்களுக்காக ஏற்பாடு செய்திருக்கும் மேஜர் லீக் T20 தொடரில் நேற்று (05) இரண்டு போட்டிகள் நிறைவடைந்தன.
இதில் கொழும்பு பி.சரவணமுத்து மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகம், பதுரெலிய அணியினை எதிர் கொண்டது. மழையின் காரணமாக இந்தப் போட்டி அணிக்கு 11 ஓவர்கள் கொண்ட ஆட்டமாக மட்டுப்படுத்தப்பட்டதோடு, இப்போட்டியில் குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகமானது 7 விக்கெட்டுக்களால் வெற்றியினைப் பதிவு செய்திருந்தது. குருநாகல் அணியின் வெற்றிக்கு சகலதுறைகளிலும் பங்காற்றிய நவீன் பெர்னாண்டோ 17 பந்துகளில் 25 ஓட்டங்கள் குவித்ததோடு, 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
>> இலங்கையின் கோரிக்கையை நிராகரித்த பாகிஸ்தான்
இதேவேளை பி.சரவணமுத்து மைதானத்தில் நடைபெற்ற ஏனைய போட்டியில் SSC கழகத்தினை ஏஸ் கெபிடல் அணி 13 ஓட்டங்களால் வீழ்த்தியது. போட்டியில் முதலில் துடுப்பாடிய ஏஸ் கெபிடல்ஸ் அணிக்காக சகுன லியனகே அரைச்சதம் தாண்டி 67 ஓட்டங்கள் குவித்திருக்க, SSC அணியின் வெற்றிக்காக போராடிய அவிஷ்க பெர்னாண்டோ 41 ஓட்டங்கள் எடுத்தும் அது வீணாகியிருந்தது.
ஸ்கோர் விபரங்கள்
பதுரெலிய எதிர் குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகம்
பதுரெலிய கி.க. – 87/7 (11) யேசித் ரூபசிங்க 28, நவீன் பெர்னாண்டோ 2/17
குருநாகல் இளையோர் கி.க. – 90/3 (9.2) தரிந்த விஜேசிங்க 28, நவீன் பெர்னாண்டோ 25*, வேனுக கயாஷன் 1/15
முடிவு – குருநாகல் இளையோர் 7 விக்கெட்டுக்களால் வெற்றி
ஏஸ் கெபிடல் கிரிக்கெட் கழகம் எதிர் SSC
ஏஸ் கெபிடல் கி.க. – 164/8 (20) சகுன லியனகே 67*, கலன பெரேரா 3/25
SSC – 151 (19.1) அவிஷ்க பெர்னாண்டோ 41, ஷெவோன் டேனியல் 40, ரோஷன் ஜயதிஸ்ஸ 3/24
முடிவு – ஏஸ் கெபிடல் 13 ஓட்டங்களால் வெற்றி
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<