இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் இம்மாதம் ஆரம்பமாகவுள்ள SLC அழைப்பு T20 லீக் தொடருக்கான அணிக் குழாம்களை இலங்கை கிரிக்கெட் சபை இன்று (04) உத்தியோகபூர்மாக அறிவித்துள்ளது.
ஆரம்பமாகவுள்ள SLC அழைப்பு T20 லீக் தொடரில், புளூஸ், ரெட்ஸ், கிரீன்ஸ் மற்றும் கிரேஸ் என நான்கு அணிகள் பங்கேற்கவுள்ளதுடன், புளூஸ் அணியின் தலைவராக தனன்ஜய டி சில்வா, கிரீன்ஸ் அணியின் அஷான் பிரியன்ஜன், ரெட்ஸ் அணியின் தலைவராக தினேஷ் சந்திமால் மற்றும் கிரேஸ் அணியின் தலைவராக தசுன் ஷானகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
T20I தரவரிசையில் முதலிடத்தை நெருங்கும் வனிந்து ஹசரங்க!
குறித்த இந்த தொடரிலிருந்து, நீண்ட நாட்களாக போட்டிகளில் விளையாடி வரும் துஷ்மந்த சமீர மற்றும் வனிந்து ஹசரங்க ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளதுடன், உபாதையிலிருந்து குணமடைந்துவரும் குசல் பெரேராவுக்கும் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இந்த குழாத்தில், இலங்கை அணியின் அனுபவ சகலதுறை வீரர் அஞ்செலோ மெதிவ்ஸ் இணைக்கப்படவில்லை. இதற்கான காரணம் குறித்தும் இலங்கை கிரிக்கெட் சபை அறிவிக்கவில்லை.
SLC அழைப்பு T20 லீக் தொடரானது எதிர்வரும் தென்னாபிரிக்க தொடர் மற்றும் ஐசிசி T20 உலகக் கிண்ணத் தொடர்களுக்கான தயார்படுத்தல்களை முன்னிட்டு நடத்தப்படவுள்ளது. தொடரானது, எதிர்வரும் 12ஆம் திகதி முதல் 24ஆம் திகதிவரை நடைபெறவுள்ளன. அத்துடன், போட்டிகள் அனைத்தும் கண்டி – பல்லேகலை கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அணிக்குழாம்கள்
புளூஸ்
நிஷான் மதுசங்க, சதீர சமரவிக்ரம, ஹஷான் ரந்திக, தனன்ஜய டி சில்வா (தலைவர்), ஹிமாஷ லியனகே, பவன் ரத்நாயக்க, அஷேன் பண்டார, அஞ்செலோ பெரேரா, செஹான் ஆராச்சிகே, லஹிரு சமரகோன், தனன்ஜய லக்ஷான், சுரங்க லக்மால், கலன பெரேரா, டில்ஷான் மதுசங்க, ஷிரான் பெர்னாண்டோ
கிரீன்ஸ்
லஹிரு உதார, மஹேல உடவத்த, கிரிஷான் சன்ஜுல, கமில் மிஷார, பெதும் நிஸ்ஸங்க, சமிந்த பெர்னாண்டோ, அஷான் பிரியன்ஜன் (தலைவர்), கமிந்து மெண்டிஸ், சம்மு அஷான், ரமேஷ் மெண்டிஸ், சுமிந்த லக்ஷான், இசான் ஜயரத்ன, லஹிரு குமார, விஷ்வ பெர்னாண்டோ, நுவான் துஷார, லஹிரு கமகே
ரெட்ஸ்
அவிஷ்க பெர்னாண்டோ, நிபுன் தனன்ஜய, சந்துன் வீரகொடி, தினேஷ் சந்திமால் (தலைவர்), ஓசத பெர்னாண்டோ, முதித் லக்ஷான், அசேல குணரத்ன, லசித் அபேரத்ன, சீகுகெ பிரசன்ன, சாமிக்க கருணாரத்ன, ஜெஹான் டேனியல், சந்துஷ் குணதிலக்க, பினுர பெர்னாண்டோ, மொஹமட் சிராஸ், அசித பெர்னாண்டோ, ஹிமேஷ் ரத்நாயக்க
கிரேஸ்
மினோத் பானுக, லசித் குரூஸ்புள்ளே, சங்கீத் குரே, சரித் அசலங்க, பானுக ராஜபக்ஷ, நுவனிந்து பெர்னாண்டோ, தசுன் ஷானக (தலைவர்), சதுரங்க டி சில்வா, லஹிரு மதுசங்க. மிலிந்த சிறிவர்தன, கோஷான் ஜயவிக்ரம, உதித் மதுஷான், நுவான் பிரதீப், சாமிக்க குணசேகர, மதீஷ பதிரன
மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க…