இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள SLC அழைப்பு T20 தொடருக்கான போட்டி அட்டவணையில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நான்கு அணிகள் மோதும் இந்தப்போட்டித்தொடர் எதிர்வரும் 9ம் திகதி ஆரம்பமாகும் என இலங்கை கிரிக்கெட் சபை நேற்றைய தினம் (27) அறிவித்திருந்தது.
>> SLC அழைப்பு T20 தொடருக்கான அணிக்குழாம்கள் அறிவிப்பு!
எனினும் இந்த தொடரை குறிப்பிட்ட தினத்துக்கு முன்னர் ஆகஸ்ட் 8ம் திகதி ஆரம்பிக்கவிருப்பதாக இலங்கை கிரிக்கெட் சபை இன்றைய தினம் வெளியிட்டுள்ள போட்டி அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முதல் இரண்டு போட்டிகள் ஆகஸ்ட் 8ம் திகதி ஆரம்பிக்கவுள்ளதுடன், ஆகஸ்ட் 10ம் மற்றும் 13ம் திகதிகளில் ஏனைய லீக் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதேவேளை, இறுதிப்போட்டியானது 15ம் திகதி நடைபெறவுள்ளது.
இந்தப்போட்டிகள் அனைத்தும் கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறவுள்ளதுடன், முதல் போட்டி பிற்பகல் 03.00 மணிக்கும், இரண்டாவது போட்டி இரவு 07.00 மணிக்கும் ஆரம்பமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
போட்டி அட்டவணை
- ஆகஸ்ட் 08 – SLC கிரேஸ் எதிர் SLC ரெட்ஸ்
SLC புளூஸ் எதிர் SLC கிரீன்ஸ்
- ஆகஸ்ட் 10 – SLC கிரீன்ஸ் எதிர் SLC ரெட்ஸ்
SLC கிரேஸ் எதிர் SLC புளூஸ்
- ஆகஸ்ட் 13 – SLC கிரேஸ் எதிர் SLC கிரீன்ஸ்
SLC புளூஸ் எதிர் SLC ரெட்ஸ்
- ஆகஸ்ட் 15 – இறுதிப்போட்டி
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<