நீர்கொழும்பு கிரிக்கெட் கழகத்திற்காக சகலதுறையிலும் அசத்திய டில்ஷான் முனவீர

233

இலங்கை கிரிக்கெட் சபை உள்ளூர் கழகங்கள் இடையே நடாத்தும் அழைப்பு T20 தொடரின் ஐந்தாம் நாளுக்குரிய போட்டிகள் இன்று (12) – நிறைவுக்கு வந்திருந்தன. 

அழைப்பு T20 தொடரின் ஐந்தாம் நாளில் 12 போட்டிகள் நடைபெற்றிருந்ததோடு இன்றைய நாளில் இளம் கிரிக்கெட் வீரர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. 

துடுப்பாட்டத்தில் அசத்திய பெதும் நிஸ்ஸங்க, சதீர சமரவிக்ரம

இலங்கை கிரிக்கெட் சபை, இலங்கையின் உள்ளூர் கிரிக்கெட் கழகங்கள் இடையே நடாத்தும்…

இதில், இலங்கை  கிரிக்கெட் அணியின் அதிரடி ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான டில்ஷான் முனவீர நீர்கொழும்பு கிரிக்கெட் கழகத்திற்காக அரைச்சதம் (55) – பெற்றதோடு, பின்னர் பந்துவீச்சிலும் அசத்தி குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகத்திற்கு எதிராக 4 விக்கெட்டுக்களைச் சாய்த்திருந்தது குறிப்பிடத்தக்கது. டில்ஷான் முனவீரவின் சகலதுறை ஆட்டத்தோடு நீர்கொழும்பு கிரிக்கெட் கழக அணி குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகத்திற்கு எதிராக 17 ஓட்டங்களால் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 

இதேவேளை, அழைப்பு  T20 தொடரின் முதல் நாளில் சதம் பெற்றிருந்த இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர்களில் ஒருவரான ஷெஹான் ஜயசூரிய இன்று சிலாபம் மேரியன்ஸ் அணிக்காக சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி 72 ஓட்டங்கள் பெற்றார். அதேநேரம், NCC அணியின் முன்வரிசை துடுப்பாட்ட வீரரான பெதும் நிஸ்ஸங்க இன்று 60 ஓட்டங்கள் விளாசி அழைப்பு T20 தொடரில் அடுத்தடுத்த அரைச்சதங்களை பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்து.

இந்த வீரர்கள் தவிர நுகேகொட கிரிக்கெட் கழகத்தின் வலதுகை துடுப்பாட்ட வீரரான இரோஷ் சமரவீர T20 போட்டிகளில் தனது கன்னி சதத்தினை பதிவு செய்தார். மொத்தமாக 108 ஓட்டங்கள் பெற்ற இரோஷ் சமரவீர  தனது தரப்பு, கண்டி சுங்க அணிக்கு எதிராக 9 விக்கெட்டுக்களால் இலகு வெற்றியினைப் பதிவு செய்யவும் பங்களிப்புச் செய்திருந்தார்.

துடுப்பாட்ட வீரர்கள் ஒருபுறமிருக்க வேகப்பந்துவீச்சாளர்களான ஜனித் சில்வா இராணுவப்படை அணிக்காகவும், கேஷான் விஜயரத்ன லங்கன் கிரிக்கெட் கழக அணிக்காகவும் தலா 5 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஐந்தாம் நாள் போட்டிகளின் சுருக்கம்

குழு A

புளூம்பில்ட் கிரிக்கெட் கழகம் எதிர் யுனிச்செலா விளையாட்டுக் கழகம்

இடம் – FTZ மைதானம், கட்டுநாயக்க

புளூம்பில்ட் கிரிக்கெட் கழகம் – 133/8 (20) – ஹர்ஷ விதான 47*, கவிந்து பண்டார 2/17

யுனிச்செலா விளையாட்டுக் கழகம் – 104 (19.4) – நுவன் சானக்க 35, கயான் சிறிசோம 3/11, மதுஷன் ரவிச்சந்திரகுமார் 3/18

முடிவு – புளூம்பீல்ட் கிரிக்கெட் கழகம் 29 ஓட்டங்களால் வெற்றி

பதுரெலிய கிரிக்கெட் கழகம் எதிர் பாணதுறை விளையாட்டுக் கழகம்

இடம் – CCC மைதானம், கொழும்பு

பதுரெலிய கிரிக்கெட் கழகம் – 161/6 (20) – லஹிரு சமரக்கோன் 66, திலகரட்ன சம்பத் 31, சலன டி சில்வா 2/21

பாணதுறை விளையாட்டுக் கழகம் – 155/3 (20) – ஹர்ஷ கூரே 56*, அசங்க சில்வா 2/04

முடிவு – பதுரெலிய கிரிக்கெட் கழகம் 06 ஓட்டங்களால் வெற்றி

எனது கிரிக்கெட் வாழ்க்கைக்கு நானே முன்மாதிரி – மொஹமட் சமாஸ்

தென்னாபிரிக்காவில் இம்மாதம் ஆரம்பமாகவுள்ள 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண…

சோனகர் கிரிக்கெட் கழகம் எதிர் கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம்

இடம் – CCC மைதானம், கொழும்பு

சோனகர் கிரிக்கெட் கழகம் – 108 (18.3) – அதீஷ திலன்சன 37, அகில தனன்ஞய 3/11, பிரபாத் ஜயசூரிய 2/16

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் – 103 (19.2) – அவிஷ்க பெர்னாந்து 43, பிரவீன் ஜயவிக்ரம 3/14

முடிவு – சோனகர் கிரிக்கெட் கழகம் 5 ஓட்டங்களால் வெற்றி

Photos: Colts CC v Moors SC | SLC Invitation T20 Tournament 2019/20

குழு B

பொலிஸ் விளையாட்டுக் கழகம் எதிர் SSC

BRC மைதானம், கொழும்பு

பொலிஸ் விளையாட்டுக் கழகம் – 166/8 (20) – சுபுன் மதுஷங்க 54, ஹிமேஷ் ராமநாயக்க 2/15

SSC – 166/9 (20) – சரித் அசலங்க 64, தரிந்து ரத்னாயக்க 63*, மொஹமட் பாஹிம் 3/35

முடிவு – போட்டி சமநிலையில் முடிந்தது

 

தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் எதிர் NCC

இடம் – FTZ மைதானம், கட்டுநாயக்க

தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் – 130/8 (20) – தக்ஷித பெர்னாந்து 65*, யொஹான் மெண்டிஸ் 38, சசிந்து கொலம்பகே 2/31, சச்சிந்த பீரிஸ் 2/33

NCC – 135/4 (15.4) – பெதும் நிஸ்ஸங்க 60, மஹேல உடவத்த 31, ப்ரமோத் மதுசன் 2/27

முடிவு – NCC 6 விக்கெட்டுக்களால் வெற்றி

கடற்படை விளையாட்டுக் கழகம் எதிர் செரசன்ஸ் விளையாட்டுக் கழகம்

இடம் – BRC மைதானம், கொழும்பு

கடற்படை விளையாட்டுக் கழகம் – 129/9 (20) – புத்திக்க மதுஷான் 40, ரொஷான் அத்துகோரல்ல 24*, ரவீன் சேயர் 2/18, சமன் ஜீவந்த 2/18

செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் – 134/4 (13.2) – சித்தார கிம்ஹான் 59, ரவீன் சேயர் 35, சுரங்க பரணவிதான 2/07

முடிவு – செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் 6 விக்கெட்டுக்களால் வெற்றி

குழு C

நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் எதிர் குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகம்

இடம் – கோல்ட்ஸ் கிரிக்கெட் கழக மைதானம், கொழும்பு

நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் – 169/5 (20) – டில்ஷான் முனவீர 55, பசிந்து லக்ஷங்க 36, ரன்தீர ரணசிங்க 2/33

குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகம் – 152/9 (20) – கலிந்து சிறிவர்தன 43, டில்ஷான் முனவீர 4/13, மாதவ வர்ணபுர 3/19

முடிவு – நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் 17 ஓட்டங்களால் வெற்றி

எனது கிரிக்கெட் வாழ்க்கைக்கு நானே முன்மாதிரி – மொஹமட் சமாஸ்

தென்னாபிரிக்காவில் இம்மாதம் ஆரம்பமாகவுள்ள 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண…

விமானப்படை விளையாட்டுக் கழகம் எதிர் களுத்துறை நகர கழகம்

இடம் – SSC மைதானம், கொழும்பு

விமானப்படை விளையாட்டுக் கழகம் – 108 (20) – சாமர பெர்னாந்து 22, சசித்ர ஜயதிலக்க 2/15

களுத்துறை நகர கழகம் – 70/9 (20) – எரங்க ரத்நாயக்க 28, சஞ்சய ரனவீர 3/11

முடிவு – விமானப்படை விளையாட்டுக் கழகம் 38 ஓட்டங்களால் வெற்றி

Photos: Air Force SC v Kalutara TC | SLC Invitation T20 Tournament 2019/20

இராணுவப்படை கிரிக்கெட் கழகம் எதிர் சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம்

இடம் – கோல்ட்ஸ் கிரிக்கெட் கழக மைதானம், கொழும்பு

இராணுவப்படை கிரிக்கெட் கழகம் – 180/7 (20) – துலின தில்ஷான்  53, லக்ஷான் எதிரிசிங்க 48, அசித்த பெர்னாந்து 2/32

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் – 149 (18.1) – ஷெஹான் ஜயசூரிய 72, ஜனித் சில்வா 5/23

முடிவு – இராணுவப்படை கிரிக்கெட் கழகம் 31 ஓட்டங்களால் வெற்றி

குழு D

இலங்கை துறைமுக அதிகார சபை எதிர் BRC

இடம் – டி சொய்ஸா மைதானம், மொரட்டுவ

இலங்கை துறைமுக அதிகார சபை – 127/7 (20) – யொஹான் டி சில்வா 58, ஹஷேன் ராமநாயக்க 3/27

BRC – 128/2 (15) – ரமிந்த விஜேசூரிய 58, டேஷான் டயஸ் 38

முடிவு – BRC 8 விக்கெட்டுக்களால் வெற்றி

கண்டி சுங்க விளையாட்டுக் கழகம் எதிர் நுகேகொட கிரிக்கெட் கழகம்

இடம் – டி சொய்ஸா மைதானம், மொரட்டுவ

கண்டி சுங்க விளையாட்டுக் கழகம் – 151/6 (20) – நிம்னக்க ரத்னாயக்க 50, அகீல் இன்ஹாம் 30, பூர்ணா வர்ணதிலக்க 3/29

நுகேகொட கிரிக்கெட் கழகம் –  156/1 (16) – இரோஷ் சமரசூரிய 108*,  ப்ரமோத் ஹெட்டிவத்த 43*

முடிவு – நுகேகொட கிரிக்கெட் கழகம் 9 விக்கெட்டுக்களால் வெற்றி

U19 உலகக் கிண்ணத்துக்கான இலங்கை குழாம் அறிவிப்பு

தென்னாபிரிக்காவில் இம்மாதம் 17ம் திகதி ஆரம்பமாகவுள்ள…

லங்கன் கிரிக்கெட் கழகம் எதிர் கொழும்பு கிரிக்கெட் கழகம்

இடம் – SSC மைதானம், கொழும்பு

லங்கன் கிரிக்கெட் கழகம் – 109 (19.4) – கீத் குமார 29, மலிந்த புஷ்பகுமார 3/17, நுவன் துஷார 3/22

கொழும்பு கிரிக்கெட் கழகம் – 111/9 (19.3) – ஷலிக்க கருணாநாயக்க 22, கேஷான் விஜயரத்ன 5/15

முடிவு – கொழும்பு கிரிக்கெட் கழகம் ஒரு விக்கெட்டினால் வெற்றி

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<