Home Tamil முதல்தர கழகங்களுக்கிடையிலான ஒருநாள் தொடர் சம்பியனாக சிலாபம் மேரியன்ஸ்

முதல்தர கழகங்களுக்கிடையிலான ஒருநாள் தொடர் சம்பியனாக சிலாபம் மேரியன்ஸ்

164

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றுவரும் முதல் தர கழகங்களுக்கு இடையிலான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் அழைப்பு கிரிக்கெட் ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டியில் NCC கழகத்தை வீழ்த்தி சிலாபம் மேரியன்ஸ் கழகம் 91 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. 

24 அணிகள் பங்கேற்ற இப்போட்டித் தொடரில் இறுதிப் போட்டிக்குத் தெரிவாகிய இவ்விரண்டு அணிகளிலும் திறமையான வீரர்கள் இடம்பெற்றிருந்ததால் போட்டி பரபரப்பாக நடைபெற்றது.

காதிகோன்கரின் அபார ஆட்டத்தால் இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்ற சிலாபம் மேரியன்ஸ்

இலங்கை கிரிக்கெட் சபையினால் (SLC)……

எனினும், இந்திய வீரரான சுமித் காடிகோன்கார் மற்றும் ருமேஷ் புத்திகவின் சிறப்பான துடுப்பாட்டம் மற்றும் கமிந்து மெண்டிஸ், ஷெஹான் ஜயசூரியவின் அபார பந்துவீச்சு மூலம் சிலாபம் மேரியன்ஸ் கழகம் சம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

கொழும்பு SSC மைதானத்தில் இன்று (31) நடைபெற்ற இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற அஞ்செலோ பெரேரா தலைமையிலான NCC முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. 

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய சிலாபம் மேரியன்ஸ் அணி முதலாவது விக்கெட்டுக்கு 63 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்து கொண்டது. சிறப்பாக ஆடிவந்த லசித் குரூஸ்புள்ளே 21 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார்.

இதனைத் தொடர்ந்து ஜோடி சேர்ந்த சுமித் காடிகோன்கார் மற்றும் கமிந்து மெண்டிஸ் மேரியன்ஸ் அணியின் ஓட்டங்களை மேலும் அதிகரித்தனர். 

சிறப்பாக துடுப்பாடிய இந்திய வீரரான சுமித் காடிகோன்கார் 77 பந்துகளில் 79 ஓட்டங்களை பெற்றார். அவர் இந்த போட்டித் தொடரில் ஒரு சதம் இரண்டு அரைச்சதங்களுடன் 278 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

Photos: Finals – NCC Vs Chilaw MCC – SLC Invitational Limited Over Tournament 2019/20

அதேபோன்று, இளம் துடுப்பாட்ட வீரரான கமிந்து மெண்டிஸ் இந்தப் போட்டியில் சிறப்பாக ஆடி அரைச்சதம் பெறுவதை 6 ஓட்டங்களால் தவறவிட்டார். தொடர்ந்து வந்த அணித் தலைவர் ஷெஹான் ஜயசூரிய 3 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

இதன்போது ருமேஷ் புத்திக மற்றும் திக்ஷில டி சில்வா ஜோடி 5ஆவது விக்கெட்டுக்கு 69 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டது. திக்ஷில டி சில்வா 47 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

சிலாபம் மேரியன்ஸ் அணியின் பின் வரிசை வீரர்கள் குறைந்த ஓட்டங்களுடன் வெளியேறினாலும், ருமேஷ் புத்திக ஒருமுனையில் வேகமாக ஆடி ஓட்டங்களை சேகரித்தார். 71 பந்துகளுக்கு முகம்கொடுத்த அவர் 6 பௌண்டரிகளுடன் 60 ஓட்டங்களை குவித்து இறுதிவரை களத்தில் இருந்தார்.

இதன் மூலம் சிலாபம் மேரியன்ஸ் அணி 50 ஓவர்களுக்கும் 8 விக்கெட்டுகளை இழந்து 295 ஓட்டங்களை குவித்தது. 

NCC பந்துவீச்சு சார்பில் சாமிக்க கருணாரத்ன 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

296 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பாடக் களமிறங்கிய NCC அணிக்கு லஹிரு உதார மற்றும் பெத்தும் நிஸ்ஸங்க ஜோடி நல்லதொரு ஆரம்பத்தைப் பெற்றுக் கொடுத்தனர். 

இந்திய தொடருக்கான இலங்கை T20I குழாம் வெளியானது!

இந்திய அணிக்கு எதிராக எதிர்வரும் 5ம் திகதி……

இருவரும் முதல் விக்கெட்டுக்காக 70 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்றிருந்த போது லஹிரு உதார 50 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

அதன்பின்னர் களமிறங்கிய நிமேஷ் குணசிங்க பெத்தும் நிஸ்ஸங்கவுடன் இணைந்து சிறப்பாக துடுப்பெடுத்தாடியிருந்தார். இருவரும் 49 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றிருந்த போது பெத்தும் நிஸ்ஸங்க 38 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

இதனைத் தொடர்ந்து வந்த மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர்கள் நின்றுபிடித்து ஆடத் தவறினர். இதனால் NCC கழகம் 43.3 ஓவர்கள் முடிவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 204 ஓட்டங்களை பெற்று தோல்வியைத் தழுவியது.

இதன்போது சிலாபம் மேரியன்ஸ் அணிக்காக சிறப்பாக பந்துவீசிய கமிந்து  மெண்டிஸ் மற்றும் ஷெஹான் ஜயசூரிய ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதன்படி, 91 ஓட்டங்களால் வெற்றிபெற்ற சிலாபம் மேரியன்ஸ் கழகம் 2019/20 பருவகாலத்துக்கான மட்டுப்படுத்தப்பட்ட ஒருநாள் தொடருக்கான சம்பியனாகத் தெரிவாகியது.

ஸ்கோர் விபரம்

Result


Nondescripts Cricket Club
204/10 (43.3)

Chilaw Marians Cricket Club
295/8 (50)

Batsmen R B 4s 6s SR
Lasith Croospulle b Chamika Gunasekara 21 22 2 1 95.45
Sumit Ghadigaonkar c Mahela Udawatte b Sahan Arachchige 79 77 14 0 102.60
Kamindu Mendis b Nimesha Gunasinghe 44 70 3 0 62.86
Rumesh Buddika not out 60 71 6 0 84.51
Shehan Jayasuriya st Lahiru Udara b Sachindu Colombage 3 8 0 0 37.50
Thikshila de Silva c Lahiru Udara b Chamika Gunasekara 47 36 3 3 130.56
Pulina Tharanga run out (Chaturanga de Silva) 6 3 1 0 200.00
Nimesh Vimukthi c Angelo Perera b Dilesh Gunaratne 1 2 0 0 50.00
Irosh Fernando run out (Lahiru Udara) 6 6 0 0 100.00
Chathuranga Kumara not out 16 5 2 1 320.00


Extras 12 (b 3 , lb 3 , nb 0, w 6, pen 0)
Total 295/8 (50 Overs, RR: 5.9)
Did not bat Asitha Fernando,

Fall of Wickets 1-63 (9.1) Lasith Croospulle, 2-128 (22.1) Sumit Ghadigaonkar, 3-171 (32.4) Kamindu Mendis, 4-178 (35.2) Shehan Jayasuriya, 5-247 (45.3) Thikshila de Silva, 6-254 (45.6) Pulina Tharanga, 7-259 (46.5) Nimesh Vimukthi, 8-278 (48.6) Irosh Fernando,

Bowling O M R W Econ
Dilesh Gunaratne 6 0 38 1 6.33
Chamika Karunaratne 4 0 28 0 7.00
Chaturanga de Silva 5 0 34 0 6.80
Chamika Gunasekara 8 0 67 2 8.38
Sachindu Colombage 9 0 40 1 4.44
Sahan Arachchige 8 0 32 1 4.00
Nimesha Gunasinghe 9 0 46 1 5.11
Mahela Udawatte 1 0 4 0 4.00


Batsmen R B 4s 6s SR
Pathum Nissanka lbw b Pulina Tharanga 38 65 3 0 58.46
Lahiru Udara c & b Nimesh Vimukthi 50 49 9 1 102.04
Nimesha Gunasinghe c & b Shehan Jayasuriya 24 42 2 0 57.14
Mahela Udawatte c Irosh Fernando b Kamindu Mendis 3 6 0 0 50.00
Angelo Perera st Irosh Fernando b Shehan Jayasuriya 1 9 0 0 11.11
Chaturanga de Silva b Shehan Jayasuriya 0 1 0 0 0.00
Sahan Arachchige c & b Thikshila de Silva 6 9 1 0 66.67
Chamika Karunaratne c Shehan Jayasuriya b Asitha Fernando 32 29 1 4 110.34
Sachindu Colombage lbw b Kamindu Mendis 15 24 2 0 62.50
Chamika Gunasekara not out 24 24 4 0 100.00
Dilesh Gunaratne st Irosh Fernando b Kamindu Mendis 0 2 0 0 0.00


Extras 11 (b 0 , lb 0 , nb 0, w 11, pen 0)
Total 204/10 (43.3 Overs, RR: 4.69)
Fall of Wickets 1-70 (14.1) Lahiru Udara, 2-118 (25.1) Pathum Nissanka, 3-121 (26.2) Nimesha Gunasinghe, 4-123 (28.2) Angelo Perera, 5-123 (28.3) Chaturanga de Silva, 6-123 (29.1) Mahela Udawatte, 7-154 (33.1) Sahan Arachchige, 8-167 (36.2) Chamika Karunaratne, 9-192 (41.6) Sachindu Colombage, 10-204 (43.3) Dilesh Gunaratne,

Bowling O M R W Econ
Asitha Fernando 6 1 25 1 4.17
Chathuranga Kumara 2 0 13 0 6.50
Nimesh Vimukthi 10 1 49 1 4.90
Thikshila de Silva 7 0 34 1 4.86
Shehan Jayasuriya 6 0 38 3 6.33
Pulina Tharanga 5 1 13 1 2.60
Kamindu Mendis 7.3 0 31 3 4.25



>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<