இலங்கை கிரிக்கெட் சபை (SLC) ஒழுங்கு செய்திருக்கும் அழைப்பு T20 தொடரில் இன்று (13) தமது இறுதிகுழுநிலைப் போட்டியில் ஆடிய SLC கிரேஸ் அணி கீரின்ஸ் அணியினை 81 ஓட்டங்களால் வீழ்த்தியிருக்கின்றது. அத்துடன் இந்த வெற்றி கிரேஸ் அணிக்கு தொடரில் முதல் வெற்றியாகவும் மாறியிருக்கின்றது.
தொடரில் முதல் வெற்றியினைப் பதிவு செய்த கீரின்ஸ் அணி
இரு அணிகளும் மோதிய இந்தப் போட்டி கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் ஆரம்பமானது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தசுன் ஷானக்க தலைமையிலான கீரின்ஸ் அணி முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை கிரேஸ் அணிக்கு வழங்கியது.
அதன்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய கிரேஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 166 ஓட்டங்கள் எடுத்துக் கொண்டது. கிரேஸ் அணியின் துடுப்பாட்டத்தில் அதிரடி அரைச்சதம் விளாசியிருந்த தனுக தாபரே 2 சிக்ஸர்கள் மற்றும் 8 பௌண்டரிகள் அடங்கலாக 40 பந்துகளுக்கு 66 ஓட்டங்கள் எடுத்தார். மறுமுனையில் கசுன் விதார 31 பந்துகளுக்கு 36 ஓட்டங்கள் எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கீரின்ஸ் அணியின் பந்துவீச்சில் லக்ஷான் சந்தகன் மற்றும் தசுன் ஷானக்க ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றியிருந்தனர்.
பின்னர் போட்டியின் வெற்றி இலக்கினை அடைய பதிலுக்கு துடுப்பாடிய கீரின்ஸ் அணியினர் ஆரம்பத்திலேயே தடுமாற்றம் காட்டி 15.5 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 85 ஓட்டங்கள் மாத்திரம் பெற்று போட்டியில் படுதோல்வி அடைந்தனர்.
கீரின்ஸ் அணியின் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக நிரோஷன் டிக்வெல்ல 26 பந்துகளுக்கு 27 ஓட்டங்கள் எடுக்க புலின தரங்க, முதித லக்ஷான் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றி கிரேஸ் தரப்பின் வெற்றியினை உறுதி செய்தனர்.
இங்கிலாந்து செல்லும் இலங்கை U19 கிரிக்கெட் அணி அறிவிப்பு
இப்போட்டியில் கீரின்ஸ் அணி தோல்வியடைந்த நிலையில், தொடரில் ஒரு வெற்றி மாத்திரம் பெற்ற அந்த அணி மோசமான ஓட்டவீதம் (NRR) காரணமாக இறுதிப் போட்டி வாய்ப்பினை இழக்க கிரேஸ் அணிக்கு அந்த வாய்ப்பு இன்னும் காணப்படுகின்றது.
போட்டியின் சுருக்கம்
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Thanuka Dabare | c & b Dasun Shanaka | 66 | 40 | 8 | 2 | 165.00 |
Kasun Vidura Adikari | b Lakshan Sandakan | 36 | 31 | 3 | 1 | 116.13 |
Movin Subasingha | c Binura Fernando b Dasun Shanaka | 4 | 4 | 1 | 0 | 100.00 |
Sanegeeth Cooray | lbw b Lakshan Sandakan | 0 | 2 | 0 | 0 | 0.00 |
Minod Bhanuka | b Binura Fernando | 20 | 19 | 0 | 1 | 105.26 |
Ashan Priyanjan | c Nuwanidu Fernando b Jeffrey Vandersay | 4 | 10 | 0 | 0 | 40.00 |
Tharindu Ratnayake | c Ramesh Mendis b Dhananjaya Lakshan | 13 | 10 | 1 | 1 | 130.00 |
Pulina Tharanga | not out | 0 | 2 | 0 | 0 | 0.00 |
Muditha Lakshan | not out | 1 | 2 | 0 | 0 | 50.00 |
Extras | 22 (b 4 , lb 3 , nb 0, w 15, pen 0) |
Total | 166/7 (20 Overs, RR: 8.3) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Nuwan Thushara | 4 | 0 | 34 | 0 | 8.50 | |
Ramesh Mendis | 2 | 0 | 21 | 0 | 10.50 | |
Binura Fernando | 3 | 0 | 22 | 1 | 7.33 | |
Dhananjaya Lakshan | 2 | 0 | 24 | 1 | 12.00 | |
Lakshan Sandakan | 4 | 0 | 14 | 2 | 3.50 | |
Jeffrey Vandersay | 3 | 0 | 24 | 1 | 8.00 | |
Dasun Shanaka | 2 | 0 | 20 | 2 | 10.00 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Pathum Nissanka | c Sanegeeth Cooray b Tharindu Ratnayake | 15 | 19 | 2 | 0 | 78.95 |
Niroshan Dickwella | st Minod Bhanuka b Ashan Priyanjan | 27 | 26 | 3 | 0 | 103.85 |
Dinesh Chandimal | c Pulina Tharanga b Ashan Priyanjan | 24 | 18 | 0 | 2 | 133.33 |
Dasun Shanaka | c Kasun Vidura Adikari b Pulina Tharanga | 0 | 4 | 0 | 0 | 0.00 |
Dhananjaya Lakshan | c Ashan Priyanjan b Pulina Tharanga | 1 | 3 | 0 | 0 | 33.33 |
Nuwanidu Fernando | lbw b Muditha Lakshan | 2 | 3 | 0 | 0 | 66.67 |
Ramesh Mendis | lbw b Muditha Lakshan | 0 | 1 | 0 | 0 | 0.00 |
Lakshan Sandakan | not out | 9 | 9 | 0 | 0 | 100.00 |
Jeffrey Vandersay | lbw b Muditha Lakshan | 7 | 10 | 0 | 0 | 70.00 |
Nuwan Thushara | c Kasun Vidura Adikari b Pulina Tharanga | 0 | 2 | 0 | 0 | 0.00 |
Extras | 0 (b 0 , lb 0 , nb 0, w 0, pen 0) |
Total | 85/9 (15.5 Overs, RR: 5.37) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Tharindu Ratnayake | 3 | 0 | 16 | 1 | 5.33 | |
Milan Rathnayake | 2 | 0 | 6 | 0 | 3.00 | |
Muditha Lakshan | 3 | 0 | 17 | 3 | 5.67 | |
Ashan Priyanjan | 3 | 0 | 11 | 2 | 3.67 | |
Duvindu Tillakaratne | 2 | 0 | 23 | 0 | 11.50 | |
Pulina Tharanga | 2.5 | 0 | 12 | 3 | 4.80 |
முடிவு – SLC கிரேஸ் அணி 81 ஓட்டங்களால் வெற்றி
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<