அமெரிக்காவில் முதன் முறையாக ஒழுங்கு செய்யப்பட்டு நடைபெறவிருக்கும் மேஜர் லீக் T20 (Major League T20) தொடரில் இலங்கை ஒருநாள் மற்றும் T20I அணிகளின் தலைவரான தசுன் ஷானக்க விளையாடுவது உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.
ஐசிசியின் ஜூன் மாதத்திற்கான சிறந்த வீரராக ஹஸரங்க தெரிவு
மேஜர் லீக் தொடரில் தசுன் ஷானக சீயெட்டல் ஒர்காஸ் (Seattle Orcas) அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். எனினும் ஷானக்கவிற்கு இலங்கை கிரிக்கெட் சபை குறித்த தொடரில் விளையாடுவதற்கான ஆட்சேபனையற்ற சான்றிதழ் (NOC Certificate) வழங்கும் வரையில் அவர் தொடரில் பங்கேற்பதில் சந்தேகம் நிலவி வந்திருந்தது.
தற்போது ஷானக்கவிற்கு இலங்கை கிரிக்கெட் சபை (SLC) மேஜர் லீக் T20 தொடரில் விளையாடுவதற்கான ஆட்சேபனையற்ற சான்றிதழை வழங்கியிருக்கும் நிலையிலேயே அவர் தொடரில் விளையாடும் வாய்ப்பினைப் பெற்றிருக்கின்றார்.
ஒருநாள் உலகக் கிண்ண தகுதிகாண் தொடரில் ஜிம்பாப்வேயில் வைத்து இலங்கை அணியை சம்பியன் ஆக வழிநடாத்தியிருந்த தசுன் ஷானக்க தற்போது ஜிம்பாப்வேயில் இருந்து மேஜர் லீக் தொடருக்காக நேரடியாக அமெரிக்க பயணமாகியிருக்கின்றார்.
இதேநேரம் வனிந்து ஹஸரங்கவும் மேஜர் லீக் தொடரில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட போதும் அவர் தொடரில் பங்கெடுக்காமல் இலங்கை திரும்புவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மொத்தம் ஆறு அணிகள் பங்கெடுக்கும் மேஜர் லீக் தொடர் நாளை (13) கோலகலமாக ஆரம்பமாகவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<