அணியைத் தெரிவு செய்யும் வாய்ப்பையும் பெற்ற ஹத்துருசிங்க

1639
Chandika Hathurusingha

இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய பயிற்றுவிப்பாளரான சந்திக ஹத்துருசிங்கவை கிரிக்கெட் சுற்றுப் பயணங்களின் போது தெரிவுக்குழு உறுப்பினராக நியமிப்பதற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அனுமதி வழங்கியது.

மூன்று பிரதான விடயங்களுக்கு முன்னுரிமை அளித்து இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் விசேட பொதுக்கூட்டம் நேற்று (07) எஸ்.எஸ்.சி மைதான கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது.

முத்தரப்பு ஒரு நாள் தொடருக்கான பங்களாதேஷ் அணி அறிவிப்பு

பங்களாதேஷ், இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகளின்..

விளையாட்டுத்துறை அமைச்சின் விளையாட்டுத்துறை சட்டவிதிகளுக்கு அமைய இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் யாப்பு விதிகளை திருத்தி அமைத்தல், புதிய செயலாளரைத் தெரிவு செய்தல், உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளுக்கான கட்டமைப்பை மாற்றியமைத்தல் ஆகிய விடயங்கள் இவ்விசேட கூட்டத்தின்போது பெரும்பான்மை ஆதரவுடன் ஏகமானதாக நிறைவேற்றப்பட்டன.

ஒவ்வொரு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுப் பயணத்தின் போது இறுதி அணித் தெரிவின்போது பிரதான பயிற்றுவிப்பாளர் தலையிடும் உரிமையை கிரிக்கெட் யாப்பில் இணைத்துக்கொள்ள நேற்று இடம்பெற்ற கிரிக்கெட் பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

இதன்படி, பிரதான பயிற்றுவிப்பாளர் வழங்கும் உபாய வழித் திட்டங்களுக்கு அமைய தெரிவுக்குழு போட்டிகளுக்கான இறுதி அணியை பெயரிடவுள்ளது.

இந்நிலையில், கிரிக்கெட் போட்டிகளின் போது இறுதி பதினொருவரை தெரிவு செய்யும் அதிகாரம் புதிய பயிற்றுவிப்பாளருக்கு வழங்கப்பட்டுள்ளதா? என விசேட பொதுக்கூட்டத்தைத் தொடர்ந்து இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது எழுப்பிய கேள்விக்கு கிரிக்கெட் சபைத் தலைவர் திலங்க சுமதிபால பதிலளிக்கையில்,

”இலங்கை கிரிக்கெட் யாப்பின் பிரகாரம் தலைமைப் பயிற்றுவிப்பாளர் தெரிவுக்குழு உறுப்பினர் அல்ல. எனவே, அதுதொடர்பில் நாம் கவனம் செலுத்தி ஒவ்வொரு சுற்றுப் பயணங்களின் போது பயிற்றுவிப்பாளருக்கும் தெரிவுக்குழு உறுப்பினராக செயற்படும் விதத்தில் இன்று எமது யாப்பு திருத்தியமைக்கப்பட்டது.

தலைமைப் பதவியில் இருந்து நீக்கப்பட்ட திசர பெரேரா

இலங்கை கிரிக்கெட் அணியின் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள்..

அத்துடன், கிரிக்கெட் சுற்றுப்பயணங்களின் போது தற்போதுள்ள அணி முகாமையாளரே தலைமை தெரிவாளராக செயற்படுவார். அவர்தான் குறித்த சுற்றுப்பயணத்தின் போது தெரிவுக்குழு உறுப்பினராகவும் பணியாற்றுவார். ஆனால் இலங்கை கிரிக்கெட் குழாம், கிரஹம் லெப்ரோய் தலைமையிலான தெரிவுக்குழுவினரால் தெரிவு செய்யப்படும். திருத்தியமைக்கப்பட்ட புதிய யாப்பின்படி, பிரதான பயிற்றுவிப்பாளர் அணியின் தலைவர் மற்றும் சுற்றுலாவின் முகாமையாளரும், சுற்றுலாவின் இடைநடுவே தெரிவுக்குழுவாக நியமிக்கப்பட்டுள்ளது” என அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், இலங்கை அணி, இலங்கை வளர்ந்து வரும் அணி மற்றும் 19 வயதுக்குட்பட்ட அணிகளின் தெரிவின் போது தெரிவுக்குழு உறுப்பினர்களுக்கு நேரடியாக தலையிடுவதற்கான வாய்ப்பும் இதன்போது வழங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இதேவேளை, ஜயந்த தர்மதாசவின் பதவி விலகலையடுத்து வெற்றிடமாக இருந்த உப தலைவர் மற்றும் உள்ளூர் கிரிக்கெட்டின் பிரதானியாகவும் முன்னாள் செயலாளர் மொஹான் டி சில்வா நியமிக்கப்பட்டார். எனவே, வெற்றிடமாக இருந்த செயலாளர் பதவிக்கு விமானப்படையின் ஏயார் கொமாண்டோர் ரொஷான் பியன்வில, பொதுக்கூட்டத்தின் போது ஏகமனதாக நியமிக்கப்பட்டார். அத்துடன், சர்வதேச கிரிக்கெட் விடயங்களுக்கு பொறுப்பாக உதவித் தலைவர் கே. மதிவாணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கெட்டுக்காக சேவை புரிய வந்திருக்கும் அவுஸ்திரேலிய உளவியலாளர்

அவுஸ்திரேலிய அணியின் பிரபல விளையாட்டு உளவியல்..

விசேட பொதுக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள்

இலங்கை பாடசாலை கிரிக்கெட் சங்க உறுப்பினரொருவரின் தலைமையிலான 8 பேர் கொண்ட விசேட பாடசாலை குழு நியமனம் செய்யப்பட்டது. இதன் அங்கத்தவர்களாக பாடசாலை கிரிக்கெட் சங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி மூவரும், இலங்கை கிரிக்கெட் பொதுக்கூட்டத்தின் போது தெரிவுசெய்யப்பட்ட மூவரும், கிரிக்கெட் நிறுவனத்தின் உப தலைவர் மற்றும் உப பொருளாளர் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் நிருவாக உத்தியோகத்தர் பதவி வகிக்கும் காலம் 2 வருடங்களாக வரையறுக்கப்பட்டது. இதன்படி, அடுத்த கிரிக்கெட் நிறுவனத் தேர்தலை எதிர்வரும் மே மாதம் நடத்துவதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

தேசிய அணியின் பயிற்றுவிப்பாளர் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுப் பயணத்தின் போது தெரிவுக்குழு உறுப்பினராக செயற்படும் திட்டம் மிக முக்கிய திட்டமாக உள்ளது.

உள்ளூர் போட்டிகளில் பங்கேற்கின்ற வீரர்களுக்கு ஒழுக்கக் கோட்பாடொன்றை அறிமுகப்படுத்தவும், அதனை தற்போது நடைபெற்று வருகின்ற உள்ளூர் முதல்தர போட்டிகளிலிருந்து அறிமுகப்படுத்தவும் நடவடிக்கை எடுத்தல் என்பன குறித்தும் தீர்மானம் எடுக்கப்பட்டது.

>> மேலும் பல செய்திகளைப் படிக்க இங்கே அழுத்துங்கள் <<