உள்ளூர் வீரர்களின் உடற்தகுதியை மேம்டுத்த SLC விசேட நடவடிக்கை

38

உள்ளூர் கிரிக்கெட்டின் செயல்திறனை மேம்படுத்தும் தொடர் முயற்சியில், உள்ளூர் கிரிக்கெட் கழகங்களுக்கு நவீன செயல்திறன் மேம்பாட்டு உபகரணங்களான வீரர்களின் உடல் கொழுப்பை அளவிடும் skinfold calipers கருவிகள் மற்றும் பந்து வீசும் வேகத்தை பரிசோதிக்கும் pocket radars கருவிகளை இலங்கை கிரிக்கெட் சபை வழங்கியுள்ளது.

மொத்தம் 17 கழகங்களுக்கும், இலங்கை கிரிக்கெட் சபையின் நான்கு சிறப்பு மையங்களுக்கும் உடல் கொழுப்பை அளவிடும் skinfold calipers கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் பயிற்சியாளர்கள் உடலின் குறிப்பிட்ட பகுதிகளில் தோலுக்கடியில் உள்ள கொழுப்பின் தடிமனை அளவிட்டு வீரர்களின் உடல் கொழுப்பு சதவீதத்தை மதிப்பிட முடியும்.

இந்தக் கருவி உடற்தகுதி முன்னேற்றத்தை கண்காணிக்கவும், உடல் அமைப்பை மதிப்பிடவும் உதவுகிறது. இதன் மூலம் வீரர்கள் போட்டித்தன்மை கொண்ட கிரிக்கெட்டுக்கான உச்ச உடல் நிலையை பராமரிப்பதை உறுதி செய்கிறது.

மேலும், உள்ளூர் கழகங்களுக்கு பந்து வீசும் வேகத்தை பரிசோதிக்கும் மற்றும் பிற செயல்திறன் அளவுருக்களை வழங்கும் pocket radars கருவிகளும் வழங்கப்பட்டுள்ளன. இந்தக் கருவிகள் பயிற்சி மற்றும் போட்டி பகுப்பாய்வு இரண்டிற்கும் அவசியமானவை, இதன் மூலம் நிகழ்நேர செயல்திறன் கண்காணிப்பை செய்ய முடியும்.

இந்த உபகரணங்கள் அண்மையில் இலங்கை கிரிக்கெட் சபையில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வில் வைத்து வழங்கப்பட்டன. இதன்போது ஜயந்த தர்மதாச, ஏஷ்லி டி சில்வா, ஜெரோம் ஜயரட்ன, சிந்தக எதிரிமான்ன மற்றும் பிரமோத்ய விக்ரமசிங்க உள்ளிட்ட இலங்கை கிரிக்கெட் சபையின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

>>பாடசாலைகளுக்கிடையிலான மாபெரும் கிரிக்கெட் சமரில் அதிரடி மாற்றம்

இதுதொடர்பில் இலங்கை கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஏஷ்லி டி சில்வா கருத்து தெரிவிக்கையில், ‘கழகங்கள் வீரர்களின் உடற்தகுதியில் கவனம் செலுத்துவது முக்கியம். வீரர்களின் திறன்களை வளர்ப்பதோடு மட்டுமல்லாமல், அவர்களின் உடற்தகுதி நிலைகளை பராமரிப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும். எனவே தேசிய மட்டத்தில் அங்கீகாரத்தைப் பெற விரும்பும் எந்தவொரு வீரரும் தேர்வாளர்களால் நிர்ணயிக்கப்பட்ட உடற்தகுதி அளவுகோல்களை பூர்த்தி செய்ய வேண்டும்,’ என்று அவர் தெரிவித்தார்.

இந்த விநியோகத்தை பயனுள்ளதாக்க, இலங்கை கிரிக்கெட் சபையானது கழகங்களின் உடற்தகுதி பயிற்சியாளர்களுக்கும், பயிற்சியாளர்களுக்கும் புதிய உபகரணங்களை திறம்பட பயன்படுத்த பயிற்சிகளை வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, இலங்கை கிரிக்கெட் சபையின் கிரிக்கெட் பணிப்பாளர் ஜெரோம் ஜயரட்ன கருத்து தெரிவிக்கையில், ‘இந்த உடல் கொழுப்பை அளவிடும் கருவியின் மூலம் உள்ளூர் கழகங்கள் வீரர்களை அளவிட்டு, மதிப்பீடு செய்து, எப்போதும் போட்டித் தன்மை கொண்ட கிரிக்கெட்டுக்கு தகுதியாகவும் ஆயத்தமாகவும் இருக்கத் தேவையான நடவடிக்கைகளை செயல்படுத்த உதவும்,’ என்று கூறினார்.

pocket radars, பயிற்சியாளர்கள் பந்து வீசும் வேகத்தை தொடர்ந்து அளவிட்டு, வீரர்களின் செயல்திறனின் பல்வேறு அம்சங்களை நிகழ்நேரத்தில் கண்காணிக்க உதவும்,’ என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த நவீன கருவிகளின் அறிமுகம் இலங்கையின் முதல் தர கிரிக்கெட் அமைப்பை வலுப்படுத்துவதிலும், உடற்தகுதி மற்றும் செயல்திறன் ரீதியாக வீரர்களின் தரத்தை மேம்படுத்துவதிலும் ஒரு முக்கிய படியாகும்.

இந்த நிகழ்ச்சியானது உள்ளூர் கழக பிரதிநிதிகள் மற்றும் இலங்கை கிரிக்கெட் Super Provincial பயிற்சியாளர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது. இது தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மூலம் உள்நாட்டு கிரிக்கெட்டை உயர்த்துவதற்கான இலங்கை கிரிக்கெட் சபையின் அர்ப்பணிப்பை வலுப்படுத்துகிறது.

இதன்படி குறித்த 2 கருவிகளும் கொழும்பு கிரிக்கெட் கழகம், கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம், BRC கழகம், சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம், NCC கழகம், ராகம கிரிக்கெட் கழகம், SSC கழகம், மூர்ஸ் விளையாட்டுக் கழகம், நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம், தமிழ் யூனியன் கழகம், பதுரலிய கிரிக்கெட் கழகம், பாணந்துறை விளையாட்டுக் கழகம், ப்ளூம்ஃபீல்ட் கழகம், குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகம், ACE கேபிடல் கிரிக்கெட் கழகம், நுகேகொட விளையாட்டுக் கழகம் மற்றும் பொலிஸ் விளையாட்டுக் கழகம் ஆகிய கழகங்களுக்கு வழங்கப்பட்டன.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<