சொந்த செலவில் இங்கிலாந்து செல்லும் இலங்கை கிரிக்கெட் சபை நிர்வாகக் குழு உறுப்பினர்கள்

596
Sri Lanka Cricket

இலங்கை கிரிக்கெட் சபையின் துணைத் தலைவர் ஜயந்த தர்மதாச மற்றும் கே.மதிவாணன் ஆகியோர், சர்வதேச கிரிக்கெட் சபையின் (ICC) அழைப்பின் பேரில், இலங்கை கிரிக்கெட் சபையின் பிரதிநிதிகளாக 2017ஆம் ஆண்டுக்கான சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகளில் கலந்துகொள்ளவுள்ளனர். மேலும், இலங்கை கிரிக்கெட் சபையின் நிதி ஆலோசனைக் குழுவின் தலைவரும் முன்னாள் பொருளாளருமான திரு. நுஸ்கி மொஹமடும் இவர்களுடன் இணைந்துகொள்ளவுள்ளார்.

SLC ஏற்பாட்டில் உபாதைகளை நிவர்த்தி செய்வதற்கான விழிப்புணர்வூட்டும் பட்டறை

இலங்கை கிரிக்கெட் சபையின் கடுமையான நிதிசார் வரைபுகளுக்கமைய, நிர்வாக குழு உறுப்பினர்கள் மற்றும் துணைக் குழு உறுப்பினர்கள் இங்கிலாந்தில் நடைபெறவுள்ள சம்பியன்ஸ் கிண்ண போட்டிகளுக்கு தமது சொந்த செலவில் பயணமாவதற்கு ஏகமனதாக தீர்மானித்துள்ளனர்.

கிரிக்கெட் சபைத் தலைவர் திலங்க சுமதிபால, செயலாளர் மொஹான் டி சில்வா, பொருளாளர் ஷம்மி சில்வா மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஆஷ்லி டி சில்வா ஆகியோர் ஜூன் மாத இறுதியில் நடைபெறவுள்ள ஐசிசி நிர்வாக சபைக் கூட்டத்தில் பங்குபற்றவுள்ளனர்.

அதேநேரம், குறித்த காலப்பகுதியில் இடம்பெற்றவுள்ள ஆசிய கிரிக்கெட் சபையின் கூட்டத் தொடரில் இலங்கை சார்பாக, கிரிக்கெட் சபையின் உதவி செயலாளர் ரவீன் விக்ரமரத்ன பங்குபற்றவுள்ளார்.

மேலும் 12 விளையாட்டு செய்தி நிறுவனங்களுக்கு, தங்கள் நிறுவனம் சார்பாக ஐசிசி சம்பியன்ஸ் கிண்ணப் போட்டித் தொடர் தொடர்பான செய்திகளை சேகரிப்பதற்கு விளையாட்டு செய்தியாளரை பரிந்துரைக்குமாறு இலங்கை கிரிக்கெட் சபை அழைப்பு விடுத்துள்ளது.

மஹிந்த ராஜபக்ஷ அரங்கில் நடைபெறவுள்ள இலங்கைஜிம்பாப்வே இடையிலான ஒருநாள் போட்டிகள்

இதன்படி, அவ்வாறு செல்லும் பத்திரிகையாளர்களுக்கு  விமானப் பயணச்சீட்டு உள்ளடங்கலாக   ஐக்கிய இராட்சியத்தில் மேற்கொள்ளப்படும் இதர செலவினங்களுக்கு உதவக்கூடிய விதத்தில் குறிப்பிட்ட ஒரு தொகைக் கொடுப்பனவும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.