பாடசாலைகள் கிரிக்கெட் அபிவிருத்தி திட்டத்தின் ஓர் அங்கமாக இலங்கையின் முன்னணி செவிப்புலனற்றோர் பாடசாலைகளில் ஒன்றான இரத்மலானை செவிப்புலனற்றோர் பாடசாலைக்கு வலைப் பயிற்சி மையம் ஒன்றை இலங்கை கிரிக்கெட் சபை அன்பளிப்புச் செய்துள்ளது.
குறித்த பாடசாலையின் நிர்வாகத்தினால் முன்வைக்கப்பட்ட விசேட கோரிக்கையை அமைய இந்த வலைப் பயிற்சி மையத்தை வழங்க இலங்கை கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி, இலங்கை கிரிக்கெட் சபையின் நிதியுதவியுடன் இரத்மலானை செவிப்புலனற்றோர் பாடசாலையில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட வலைப் பயிற்சி மையம் அண்மையில் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<