இங்கிலாந்து லையன்ஸ் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மூன்று நாட்கள் கொண்ட பயிற்சிப்போட்டிக்கான இலங்கை கிரிக்கெட் சபை பதினொருவர் குழாம் (SLC XI) உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் சபை பெயரிட்டுள்ள இந்த குழாத்தின் தலைவராக சகலதுறை வீரர் சஹான் ஆராச்சிகே பெயரிடப்பட்டுள்ளதுடன், பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
T20 கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய வஹாப் ரியாஸ்
அதுமாத்திரமின்றி இலங்கை தேசிய அணியை பிரதிநிதித்துப்படுத்திவரும், இளம் வீரர் துனித் வெல்லாலகே இந்த குழாத்தில் இடம்பெற்றுள்ளதுடன், தேசிய அணியை பிரதிநிதித்துப்படுத்திய மற்றுமொரு வீரராக ஜனித் லியனகே இடம்பெற்றுள்ளார்.
இவர்களுடன் முதற்தர போட்டிகளில் சிறந்த பிரகாசிப்புகளை வெளிப்படுத்திவரும் லஹிரு உதார, நிஷான் மதுஷ்க ஆகியோருடன் பல இளம் வீரர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
இங்கிலாந்து லையன்ஸ் மற்றும் இலங்கை கிரிக்கெட் சபை பதினொருவர் அணிகளுக்கு இடையிலான மூன்று நாட்கள் கொண்ட பயிற்சிப்போட்டி எதிர்வரும் 25ம் திகதி முதல் 27ம் திகதிவரை கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை கிரிக்கெட் சபை பதினொருவர் குழாம்
லசித் குரூஸ்புள்ளே, லஹிரு உதார, பசிந்து சூரியபண்டார, அவிஷ்க தரிந்து, ஜனித் லியனகே, சஹான் ஆராச்சிகே (தலைவர்), நிமேஷ் விமுக்தி, இசித விஜேசுந்தர, கவிந்து பதிரத்ன, துஷான் ஹேமந்த, நிம்ஷார அதரகல்ல, துனித் வெல்லாலகே, நிஷான் மதுஷ்க
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<