கொழும்பின் CCC மைதானத்தில் நடைபெற்று முடிந்திருக்கும் பங்களாதேஷ் மகளிர் கிரிக்கெட் அணி மற்றும் இலங்கை கிரிக்கெட் சபை பதினொருவர் மகளிர் இடையிலான 50 ஓவர்கள் கொண்ட பயிற்சிப் போட்டியில் பங்களாதேஷ் 27 ஓட்டங்களால் வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது.
மெண்டிஸின் சாதனை இரட்டைச் சதத்தோடு முதல் டெஸ்ட்டில் முன்னேறும் இலங்கை
நேற்று (27) நடைபெற்ற இந்தப் பயிற்சிப் போட்டியில் இலங்கை கிரிக்கெட் சபை மகளிர் அணித்தலைவி சத்யா சந்தீப்பனி போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் பங்களாதேஷ் வீராங்கனைகளை துடுப்பாட பணித்தார். அதன்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய பங்களாதேஷ் மகளிர் அணியினர் 38.1 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 116 ஓட்டங்கள் எடுத்தனர்.
இலங்கை கிரிக்கெட் சபை பதினொருவர் அணியின் துடுப்பாட்டம் சார்பில் மதுஷிக்கா மேதானந்த, மால்கி மாதரா மற்றும் தருக்கா செஹானி ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றியிருந்தனர்.
இதன் பின்னர் போட்டியின் வெற்றி இலக்கை அடைவதற்கு பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை கிரிக்கெட் சபை பதினொருவர் அணியானது மோசமான துடுப்பாட்டத்தினை வெளிப்படுத்தியதோடு 33.4 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 89 ஓட்டங்களை மாத்திரம் எடுத்து போட்டியில் தோல்வியினைத் தழுவியது.
பங்களாதேஷ் மகளிர் அணியின் பந்துவீச்சில் பாஹிமா கட்டுன் 22 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை கைப்பற்றி தமது தரப்பு வெற்றியினைப் பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
போட்டியின் சுருக்கம்
பங்களாதேஷ் – 116 (38.1) சுல்தானா காட்டுன் 32, மதுஷிகா மேத்தனாந்தா 2/17, மால்கி மாதரா 2/21, தாருக்கா செஹானி 2/22
இலங்கை கிரிக்கெட் சபை பதினொருவர் அணி – 89 (33.4) உமேஷா திமாஷினி 24, பாஹிமாக கட்டுன் 4/22
முடிவு – பங்களாதேஷ் மகளிர் 27 ஓட்டங்களால் வெற்றி
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<