இலங்கை கிரிக்கெட் சபை (SLC) ஒழுங்கு செய்த அழைப்பு T20 தொடரின் இறுதி குழுநிலைப் போட்டியில் SLC புளூஸ் அணியை 33 ஓட்டங்களால் வீழ்த்திய குசல் மெண்டிஸின் ரெட்ஸ் அணி தொடரில் இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
>> வெற்றியுடன் தொடரினை நிறைவு செய்த கிரேஸ் அணி
தீர்மானம் கொண்டதாக அமைந்த SLC ரெட்ஸ் மற்றும் புளூஸ் அணிகள் இடையிலான போட்டி நேற்று (14) கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் ஆரம்பமாகியது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ரெட்ஸ் அணியினர் முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தனர்.
தொடர்ந்து முதலில் துடுப்பாடிய ரெட்ஸ் அணி சிறு தடுமாற்றம் ஒன்றை காட்டிய போதும் குசல் மெண்டிஸ் மற்றும் வனிந்து ஹஸரங்க ஆகியோரின் அசத்தலான ஆரம்பங்களோடு ஓட்டங்களை குவிக்கத் தொடங்கியதோடு, இந்த இரண்டு வீரர்களும் தொடரில் தத்தமது முதல் அரைச்சதங்களையும் பதிவு செய்தனர்.
இதனால் 20 ஓவர்கள் நிறைவில் ரெட்ஸ் அணி 4 விக்கெட்டுக்களை இழந்து 178 ஓட்டங்கள் பெற்றது. ரெட்ஸ் அணியின் துடுப்பாட்டம் சார்பில் குசல் மெண்டிஸ் இறுதிவரை ஆட்டமிழக்காது நின்று 60 பந்துகளில் 10 பெளண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 86 ஓட்டங்கள் எடுக்க, வனிந்து ஹஸரங்க இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து 41 பந்துகளுக்கு 5 சிக்ஸர்கள் மற்றும் 3 பெளண்டரிகள் அடங்கலாக 69 ஓட்டங்கள் எடுத்தார்.
புளூஸ் அணியின் பந்துவீச்சில் சுமித லக்ஷான் 2 விக்கெட்டுக்களை சாய்க்க, சாமிக்க கருணாரட்ன மற்றும் டில்சான் மதுசங்க ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சாய்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட சவால் நிறைந்த 179 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய புளூஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 145 ஓட்டங்கள் மாத்திரமே பெற்றது.
புளூஸ் அணியின் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக சதீர சமரவிக்ரம 38 பந்துகளுக்கு 4 பெளண்டரிகள் அடங்கலாக 40 ஓட்டங்களை எடுத்தார்.
மறுமுனையில் அசித பெர்னாண்டோ மற்றும் வனிந்து ஹஸரங்க ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்து தமது தரப்பு வெற்றியை உறுதி செய்தனர்.
>> ஜிம்பாப்வே தொடரில் இந்திய அணியின் பயிற்சியாளராக VVS லக்ஷ்மன்
போட்டியின் ஆட்டநாயகனாக வனிந்து ஹஸரங்க தனது சகலதுறை ஆட்டத்திற்காக தெரிவு செய்யப்பட்டார்.
இப்போட்டியின் வெற்றியோடு தொடரின் புள்ளிகள் பட்டியலில் இரண்டு வெற்றிகளுடன் முதலிடம் பெற்ற அணியாக இறுதிப் போட்டிக்கு ரெட்ஸ் தெரிவாக, புளூஸ் அணியும் இரண்டு வெற்றிகளுடன் இறுதிப் போட்டி வாய்ப்பினை பெற்றுள்ளது.
போட்டியின் சுருக்கம்
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Lasith Croospulle | b Dilshan Madushanka | 3 | 4 | 0 | 0 | 75.00 |
Kusal Mendis | c Sadeera Samarawickrama b Chamika Karunaratne | 86 | 60 | 10 | 1 | 143.33 |
Bhanuka Rajapakse | c Sadeera Samarawickrama b Suminda Lakshan | 14 | 14 | 1 | 0 | 100.00 |
Kamindu Mendis | b Suminda Lakshan | 0 | 2 | 0 | 0 | 0.00 |
Wanindu Hasaranga | not out | 69 | 41 | 3 | 4 | 168.29 |
Extras | 6 (b 0 , lb 0 , nb 1, w 5, pen 0) |
Total | 178/4 (20 Overs, RR: 8.9) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Dilshan Madushanka | 4 | 0 | 30 | 1 | 7.50 | |
Kasun Rajitha | 1 | 0 | 18 | 0 | 18.00 | |
Dhananjaya de Silva | 2 | 0 | 13 | 0 | 6.50 | |
Chamika Karunaratne | 4 | 0 | 37 | 1 | 9.25 | |
Suminda Lakshan | 4 | 0 | 29 | 2 | 7.25 | |
Praveen Jayawickrama | 4 | 0 | 44 | 0 | 11.00 | |
Lahiru Udara | 1 | 0 | 7 | 0 | 7.00 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Sithara Gimhana | c Kusal Mendis b Maheesh Theekshana | 0 | 2 | 0 | 0 | 0.00 |
Lahiru Udara | b Wanindu Hasaranga | 35 | 25 | 6 | 0 | 140.00 |
Sadeera Samarawickrama | lbw b Wanindu Hasaranga | 40 | 38 | 4 | 0 | 105.26 |
Dhananjaya de Silva | st Bhanuka Rajapakse b Dunith wellalage | 15 | 11 | 2 | 0 | 136.36 |
Ashen Bandara | c Sahan Arachchige b Asitha Fernando | 30 | 27 | 3 | 0 | 111.11 |
Chamika Karunaratne | b Asitha Fernando | 1 | 3 | 0 | 0 | 33.33 |
Lahiru Samarakoon | not out | 2 | 10 | 0 | 0 | 20.00 |
Suminda Lakshan | not out | 5 | 4 | 1 | 0 | 125.00 |
Extras | 17 (b 2 , lb 9 , nb 0, w 6, pen 0) |
Total | 145/6 (20 Overs, RR: 7.25) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Maheesh Theekshana | 3 | 0 | 20 | 1 | 6.67 | |
Asitha Fernando | 4 | 0 | 25 | 2 | 6.25 | |
Dunith wellalage | 4 | 0 | 22 | 1 | 5.50 | |
Matheesha Pathirana | 3 | 0 | 25 | 0 | 8.33 | |
Lahiru Madushanka | 2 | 0 | 24 | 0 | 12.00 | |
Wanindu Hasaranga | 4 | 0 | 18 | 2 | 4.50 |
முடிவு – ரெட்ஸ் அணி 33 ஓட்டங்களால் வெற்றி
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<