2017 மற்றும் 2018 பருவகாலத்துக்கான வருடாந்த கிரிக்கெட் வீரர்கள் ஒப்பந்தத்திற்கு உள்ளூர் போட்டிகளில் பிரகாசித்து வருகின்ற முதல்தர கிரிக்கெட் வீரர்கள் 104 பேரை ஒப்பந்தம் செய்வதற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் 850 மில்லியன் ரூபா நிதியினை முதலீடு செய்வதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளது.
[rev_slider LOLC]
கடவுளை நம்பி களத்தில் குதித்த இலங்கையின் எதிர்கால மிஸ்டர் கிரிக்கெட்
சில்வாவின் பொறுப்பான ஆட்டத்தால் குறித்த டெஸ்டில்..
இதன்படி, 2016/17 பருவகாலத்தில் உள்ளூர் போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்திய கிரிக்கெட் வீரர்கள் இம்முறை வருடாந்த ஒப்பந்தத்திற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். இதற்கான ஆவணங்கள் மற்றும் நிதியினை கையளிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு நேற்று(14) விளையாட்டுத்துறை அமைச்சின் கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது.
இதன்போது, 2016/17 பருவகாலத்தில் திறமைகளை வெளிப்படுத்திய முதல்தர கிரிக்கெட் வீரர்கள் 20 பேரும், உள்ளூர் போட்டிகளில் பிரகாசித்து அதிக பெறுபேறுகளைப் பெற்றுக்கொண்ட வளர்ந்துவரும் 23 வீரர்களுக்கும் புதிய ஒப்பந்தத்திற்கான கடிதங்கள் வழங்கிவைக்கப்பட்டன.
அத்துடன், முன்னாள் தேசிய வீரர்கள் 15 பேரும், தற்போது தேசிய அணியின் ஒப்பந்தத்தில் இடம்பெறாமல் தேசிய அணிக்காக அண்மைக்காலமாக சர்வதேசப் போட்டிகளில் விளையாடி வருகின்ற 17 வீரர்களும் இப்புதிய ஒப்பந்தத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். அண்மையில் நிறைவுக்கு வந்த 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணத்தில் திறமைகளை வெளிப்படுத்தியிருந்த 29 வீரர்களும் இப்புதிய ஒப்பந்தத்தில் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
அதிலும் குறிப்பாக, குறித்த காலப்பகுதியில் உள்ளூர் முதல்தரப் போட்டிகளில் விளையாடிய துடுப்பாட்ட வீரரொருவர் 750 ஓட்டங்களையும், பந்துவீச்சாளர் ஒருவர் 45 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருக்க வேண்டும். அத்துடன் சகலதுறை வீரரொருவர் 350 ஓட்டங்களுடன் 35 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருக்க வேண்டும் என்பதுடன், விக்கெட் காப்பாளர் ஒருவர் 400 ஓட்டங்களையும் 20 பிடியெடுப்புகளையும் மேற்கொண்டிருக்க வேண்டும்.
உபாதைகள் அற்ற கிரிக்கெட் வீரர்களை உருவாக்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்
பங்களாதேஷ், இலங்கை மற்றும் ஜிம்பாப்வே….
அத்துடன், வளர்ந்துவரும் வீரர்களுக்கான பிரிவில் இடம்பெற்ற வீரர்கள், கடந்த 3 வருட காலப்பகுதியில் இலங்கை தேசிய அணி, இலங்கை ஏ அணி அல்லது இலங்கை அபிவிருத்தி அணிகளில் விளையாடியிருக்க வேண்டும். இவ்வனைத்து தகைமைகளையும் பூர்த்தி செய்த வீரர்களுக்கு மாத்திரமே இம்முறை ஒப்பந்தம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்தது.
அதுமாத்திரமின்றி, இவ்வீரர்களுக்கு தலா 25 இலட்சம் ரூபா வீதம் திடீர் விபத்து காப்புறுதியும், 3 இலட்சம் ரூபா வீதம் வைத்திய காப்புறுதியும் வழங்கப்பட்டது. இவை தவிற தாம் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற கழகங்களினால் வழங்கப்படுகின்ற கொடுப்பனவுகளுக்கு மேலதிமாக புதிய சம்பளக் கொடுப்பனவு முறையொன்றும் வழங்கப்படவுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
இதேவேளை, 2016/17 பருவகாலத்திற்கான பிரீமியர் லீக் ஏ நிலை தொடரின் சம்பியனாகத் தெரிவாகிய எஸ்.எஸ்.சி கழகத்துக்கு 6.8 மில்லியன் ரூபா பெறுமதியான வேன் ஒன்றும், குறித்த பருவகாலத்தில் சிறந்த வீரராக தெரிவான என்.சி.சி கழகத்தின் சதுரங்க டி சில்வாவுக்கு 2.3 மில்லியன் ரூபா பெறுமதியான கார் ஒன்றும் இதன்போது கையளிக்கப்பட்டது.
விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் திலங்க சுமதிபால உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர்.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<