இலங்கை கிரிக்கட் சபை (SLC) இரண்டு ஆண்டு காலத்துக்கு புதிய உயர் செயல்திறன் முகாமையாளராக 42 வயதான இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த சைமன் வில்லிஸ்ஸை நியமித்துள்ளது.
வில்லிஸ் இதற்கு முன் கென்ட் விளையாட்டுக் கழகத்திற்கு புதிய உயர் செயல்திறன் இயக்குனராக செயற்பட்டு வந்திருந்தார். இவர் எதிர்வரும் ஜூன் மாதம் 1ஆம் திகதியிலிருந்து இலங்கை அணியின் உயர் செயல்திறன் முகாமையாளராக செயற்படவுள்ளார்.
இலங்கை அணிக்கு இரண்டாவது பாரிய அடி
இது தொடர்பாக வில்லிஸ் கூறுகையில் “எனக்கு இந்த அற்புதமான புதிய வாய்ப்பைத் தந்தமைக்கு இலங்கை கிரிக்கட் சபைக்கு நன்றி தெரிவிக்கிறேன். நான் வரவிருக்கும் சவால்களை வெற்றிகரமாக முகங்கொடுக்க எதிர்பார்க்கிறேன். அது ஒரு பெரிய பயணமாக இருக்கப்போகிறது“. என்று கூறியுள்ளார்.
விக்கட் காப்பாளர் மற்றும் துடுப்பாட்ட வீரரான சைமன் வில்லிஸ் 1993ஆம் ஆண்டு தொடக்கம் 1999ஆம் ஆண்டு வரை இங்கிலாந்தில் 16 முதல்தர போட்டிகளிலும், 14 லிஸ்ட் “ஏ” போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.
இலங்கை கிரிக்கட் சபையின் தலைவர் திலங்க சுமாதிபாலவின் அறிக்கைப்படி வில்லிஸ் இலங்கை “ஏ” அணி, இலங்கை அபிவிருத்தி அணி, 23 மற்றும் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான அணிகள் இவரின் கீழ இயங்கும். அத்தோடு இலங்கை கிரிக்கட் பயிற்சியாளர்கள் மற்றும் தேசியப் பயிற்சியாளர்கள் ஆகியோர் இவருக்குக் கீழ் இயங்குவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் இலங்கை அடைந்த மோசாமான தோல்விகளை நிவர்த்தி செய்யவே இவர் இலங்கை அணியின் உயர் செயல்திறன் முகாமையாளராக இணைக்கப்பட்டுள்ளார்.
மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்