இந்தியாவுக்கு எதிரான T20 கிரிக்கெட் தொடரை வெற்றிகொண்ட இலங்கை அணியை பாராட்டி கௌரவிக்கும் வகையில் ஒரு இலட்சம் அமெரிக்க டொலர் பணப்பரிசு (2 கோடி ரூபா) வழங்கப்படவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
இலங்கை கிரிக்கெட் சபையின் நிறைவேற்றுக் குழு கூட்டத்தில் இவ்விடயம் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அணியின் இந்த தொடர் (2 – 1) வெற்றியை வெகுவாக பாராட்டிய இலங்கை கிரிக்கெட் சபை அணிக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தது.
>> Video – 13 ஆண்டுகளுக்குப் பிறகு புது வரலாறு படைத்த இலங்கை அணி..!
மிகவும் அவசியமான இந்த வெற்றியை ஈட்டுவதற்கு அர்ப்பணிப்புடன் செயல்பட்ட வீரர்கள், பயிற்றுவிப்பாளர்கள், உதவியாளர்கள் அனைவரும் பாராட்டுக்குரியவர்கள் என இலங்கை கிரிக்கெட் மேலும் தெரிவித்தது.
இலங்கை அணி 2019 ஆம் ஆண்டுக்கு பின்னர் டT20 கிரிக்கெட் தொடர் ஒன்றை கைப்பற்றிய முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
அதுமாத்திரமின்றி, 2016இலிருந்து இதுவரை நடைபெற்ற மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களைக் கொண்ட தொடர்களில் இந்தியாவை இலங்கை வெற்றிகொண்டது இதுவே முதல் தடவையாகும்.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<