சிம்பாப்வேவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அபிவிருத்தி அணியினர் ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரை சிம்பாபே அபிவிருத்தி அணியுடன் விளையாடி அதில் அபார வெற்றியடைந்து தொடரை 1-0 என வசப்படுத்தினர். இப்போட்டி ஹராரே மைதானத்தில் இடம்பெற்றது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அபிவிருத்தி அணியின் தலைவர் ரமேஷ் புத்திக சிம்பாபே அபிவிருத்தி அணியினரை முதலில் துடுப்பெடுத்தாடப் பணித்தார். ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய அணித்தலைவர் பிரியன் சாரீ, சார்லஸ் குஞ்செ ஆகியோர் இணைப்பாட்டமாக 131 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு வலுவூட்டினர். அதைத் தொடர்ந்து அரைச்சதம் பெற்ற குஞ்சே 53 ஓட்டங்களுடனும், சாரீ 76 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர். சிம்பாபே அபிவிருத்தி அணி முதலாவது இன்னிஸிற்காக சகல விக்கட்டுகளயும் இழந்து 349 ஓட்டங்களைக் குவித்தனர்
இலங்கை அபிவிருத்தி அணியின் பந்து வீச்சைப் பொருத்தமட்டில் செஹான் மதுசங்க, அணுக் பெர்னாண்டோ,அசலங்க ஆகியோர் தலா 2 விக்கட்டுகளை வீழ்த்தினர். முதல் இனிங்ஸ் முடிவில் சிம்பாபே அபிவிருத்தி அணி 100.1 ஒவர்களுக்கு முகம் கொடுத்து 349 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்தனர்.
முதலாவது இனிங்ஸைத் தொடர்ந்த இலங்கை அபிவிருத்தி அணியினர் சகல விக்கட்டுகளையும் இழந்து 346 ஓட்டங்களைக் குவித்தனர். இதில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய சந்துன் வீரக்கொடி 167 பந்துகளை எதிர்கொண்டு 21 பவுண்டரிகள் ஒரு சிக்ஸர் அடங்கலாக 151 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார். மறு முனையில் நிதானமாக ஆடிய அசலங்க 103 ஓட்டங்களைப் பெற்று சதத்தைப் பூர்த்திசெய்தார். இவர்கள் இருவரும் இணைப்பாட்டமாக 236 ஓட்டங்களைப் பெற்று அணிக்கு வலுவூட்டினர். மும்பா சிறப்பாக பந்துவீசி 89 ஓட்டங்களைக் கொடுத்து 6 விக்கட்டுகளையும், விக்டர் 42 ஓட்டங்களைக் கொடுத்து 3 விக்கட்டுகளையும் கைப்பற்றினர்.
மூன்றாவது நாளில் இரண்டாவது இனிங்ஸைத் தொடர்ந்த சிம்பாபே அபிவிருத்தி அணியினர் இலங்கை அபிவிருத்தி அணியினரின் பலத்த பந்து வீச்சு காரணமாக சகல விக்கட்டுகளயும் இழந்து 177 ஓட்டங்களை மாத்திரம் பெற்றனர். இதில் அதிக பட்சமாக அணித்தலைவர் சாரி 59 ஓட்டங்களைக் குவித்தார். பந்து வீச்சில் கசுன் மதுசங்க, சதுரங்க ஆகியோர் தலா 3 விக்கட்டுகளை வீழ்த்தினர்.
மூன்றாவது நாளில் 191 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய இலங்கை அபிவிருத்தி அணியினர் 1 விக்கட்டை இழந்து 38 ஓட்டங்களைப் பெற்றுயிருந்த நிலையில் மூன்றாவது நாளும் நிறைவுபெற்றது. இறுதி நாளில் ஆடத் தொடங்கிய இலங்கை அபிவிருத்தி அணியினர் 5 விக்கட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தனர். சகல துறை வீரரான அணுக் பெர்னாண்டோ ஆட்டமிழக்காமல் 61 ஓட்டங்களைக் குவித்தார். மறு முனையில் சந்துன் வீரக்கொடி 35 ஓட்டங்களைப் பெற்றார். மும்பா, ஜோங்வெ ஆகியோர் தலா இரண்டு விக்கட்டுகளை வீழ்த்தினர்.
போட்டியின் சுருக்கம்
சிம்பாபே அபிவிருத்தி அணி – 349
சாரீ 76, குஞ்சே 53 , கும்பீ 47, முஸகண்டா 61, ஜொங்வெ 50 – அசலங்க 2/79, செஹான் மதுசங்க 2/69, சதுரங்க 1/52, தனஞ்சய 1/73, பெர்னாண்டோ 2/23
இலங்கை அபிவிருத்தி அணி – 346
வீரக்கொடி 151, அசலங்க 103, கசுன் மதுசங்க 25* – விக்டர் 3/48, மும்பா 6/89, ஜோங்வெ 1/69
சிம்பாபே அபிவிருத்தி அணி – 177
சாரீ 59, குஞ்சே 53, கும்பீ 23, முஸகண்டா 24, ஜொங்வெ 20 – அசலங்க 2/79 , செஹான் மதுசங்க 3/25, சதுரங்க 3/50, கசுன் மதுசங்க 2/33, பெர்னாண்டோ 1/24
இலங்கை அபிவிருத்தி அணி – 185/2
அணுகி பெர்னாண்டோ 61*, சந்துன் வீரக்கொடி 35, வாதுக 30 – மும்பா 2/54, ஜோங்வெ 2/25, விக்டர் 1/57