வெற்றியோடு தலைவர் பயணத்தை ஆரம்பித்தார் வோர்னர்

438
T.M.Dilshan,

இலங்கை – அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கட் போட்டி ரங்கிரி தம்புள்ள கிரிக்கட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. 5 போட்டிகளைக் கொண்ட தொடர் 1-1 என்று சமநிலையில் இருந்ததனால் இரண்டு அணிகளும் வெற்றியைப் பெற்று தொடரில் முன்னிலை பெரும் முனைப்புடன் களமிறங்கியது. அத்தோடு இலங்கை அணியின் அதிரடி ஆரம்பத் துடுப்பாட்ட வீரரின் இறுதி ஒருநாள் போட்டி என்பதால் இலங்கை அணி டில்ஷானை வெற்றியை பரிசாக அளித்து அவரது சேவைக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என்ற ஒரு முனைப்புடன் விளையாடியது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பாட்டத்தைத் தெரிவு செய்தது.

அதன்படி குணதிலக, தில்ஷான் ஆகியோர் ஆரம்பத் துடுப்பாட்டவீரர்காளக களம் இறங்கினார்கள். குணதிலக 5 ஓட்டங்களோடு  ஸ்டார்க் வீசிய பந்தில் மீண்டும் போல்ட் முறையில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த மெண்டிஸ் 4 ஓட்டங்களோடு ஏமாற்றம் அளித்தார். கடைசிப் போட்டியில் விளையாடிய தில்ஷான் 42 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டம் இழந்து  தனது ஒருநாள் கிரிக்கட் வாழ்க்கையை முடித்தார். அதன் பின் வந்த தலைவர் மெதிவ்ஸ் 2 ஓட்டங்களோடு ஆட்டம் இழக்க இலங்கை அணி சரிவை நோக்கி சென்றது. ஆயினும் உபதலைவர் தினேஷ் சந்திமால் மறுமுனையில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

ஆனால் அவருக்கு பக்க பலமாக யாரும் ஆடாமல் மற்ற வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டம் இழந்தனர். தனி மரமாக நின்று போராடிய தினேஷ் சந்திமால் சதம் அடித்தார். சதம் அடித்த அவர் 102 ஓட்டங்களோடு கடைசி விக்கட்டாக ஆட்டம் இழந்தார். அத்தோடு தினேஷ் சந்திமால் 75 ஓட்டங்களைப் பெற்று இருந்த போது ஒருநாள் கிரிக்கெட்டில் 3000 ஓட்டங்களைப் பெற்ற 15ஆவது இலங்கை வீரர் என்ற பெருமையைப் பெற்றார் தினேஷ் சந்திமால். இறுதியில் இவரது ஆட்டத்தால் இலங்கை அணி 49.2 ஓவர்கள் முடிவில் சகல விக்கட்டுகளையும் இழந்து 226 ஓட்டங்களுக்கு சுருண்டது. அவுஸ்திரேலிய அணியின் பந்து வீச்சில் எடம் சம்பா 3 விக்கட்டுகளை வீழ்த்த மிச்சல் ஸ்டார்க், ஜேம்ஸ் போல்க்னர் மற்றும் ஹேஸ்டிங்ஸ் ஆகியோர் 2 விக்கட்டுகள் வீதம் வீழ்த்தினார்கள்.

பின்னர் 227 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி, 46 ஓவர்களில் 8 விக்கட்டுகளை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில் ஜோர்ஜ் பெய்லி 70 (99), மத்தியூ வேட் 42 (46), ட்ரவிஸ் ஹெட் 36 (48), ஆரொன் ஃபின்ச் 30 (29) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் அஞ்சலோ மத்தியூஸ், அமில அபோன்ஸோ, டில்ருவான் பெரேரா ஆகியோர் தலா 2 விக்கட்டுகளைக் கைப்பற்றினர்.

இப்போட்டியின் ஆட்ட நாயகனாக, ஜோர்ஜ் பெய்லி தெரிவானார்.

போட்டியின் சுருக்கம்

இலங்கை – 226/ (49.2)

தினேஷ் சந்திமால் 103, திலகரத்ன டில்ஷான் 42, டில்ருவன் பெரேரா 17 – எடம் சம்பா 38/3, மிச்சல் ஸ்டார்க் 42/2, ஜேம்ஸ் போல்க்னர் 44/2, ஹேஸ்டிங்ஸ் 41/2

அவுஸ்ரேலியா – 227/8 (46)

ஜோர்ஜ் பெய்லி 70, மத்தியூ வேட் 42, ட்ரவிஸ் ஹெட் 36, ஆரொன் ஃபின்ச் 30 – அஞ்சலோ மத்தியூஸ் 30/2, அமில அபோன்ஸோ 44/2, டில்ருவான் பெரேரா 45/2

அவுஸ்திரேலியா அணி 2 விக்கட்டுகளால் வெற்றி

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்