முன்னணி மகளிர் கிரிக்கெட் அணிகள் பங்குபெறும் ஒருநாள் தொடர் இலங்கையில்

3

இந்தியா, தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிகள் பங்கெடுக்கும் முத்தரப்பு ஒருநாள் தொடரானது இலங்கையில் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கின்றது.

>>ஒருநாள் போட்டிகளில் இருந்து முஷ்பிகுர் ரஹீம் ஓய்வு

மொத்தம் 7 போட்டிகளுடன் இந்த மகளிர் ஒருநாள் தொடர் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதோடு, தொடரில் பங்கெடுக்கும் அணிகள் இரண்டு தடவைகள் குழுநிலைப் போட்டிகளில் மோதவிருக்கின்றன.

பின்னர் குழுநிலைப் போட்டிகளின் அடிப்படையில் இரண்டு அணிகள் தொடரின் இறுதிப் போட்டியில் ஆடவிருக்கின்றன. தொடரின் போட்டிகள் அனைத்து போட்டிகளும் கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருப்பதோடு இந்த ஒருநாள் தொடர் ஏப்ரல் மாதம் 27ஆம் திகதி இலங்கை – இந்திய மகளிர் அணிகள் இடையிலான மோதலுடன் ஆரம்பமாகுகின்றது.

தொடரின் இறுதிப் போட்டி மே மாதம் 11ஆம் திகதி ஒழுங்கு செய்யப்பட்டிருப்பதோடு, தொடரின் போட்டிகள் அனைத்தும் பகல் நேர ஆட்டங்களாக மாத்திரம் நடைபெறவிருக்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

தொடர் அட்டவணை

ஏப்ரல் 27 – இலங்கை எதிர் இந்தியா

ஏப்ரல் 29 – இந்தியா எதிர் தென்னாபிரிக்கா

மே 01 – இலங்கை எதிர் தென்னாபிரிக்கா

மே 04 – தென்னாபிரிக்கா எதிர் இந்தியா

மே 08 – இலங்கை எதிர் தென்னாபிரிக்கா

மே 11 – இறுதிப் போட்டி

  >>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<