தென்னாபிரிக்க வளர்ந்துவரும் கிரிக்கெட் அணிக்கும், இலங்கை வளர்ந்துவரும் கிரிக்கெட் அணிக்கும் இடையில் நடைபெற்று வருகின்ற நான்கு நாட்கள் கொண்ட இரண்டாவது உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நேற்று (26) நிறைவுக்கு வந்தது.
இதில் இலங்கை அணியின் இளம் சுழல் பந்துவீச்சாளரான லசித் அம்புல்தெனிய 8 விக்கெட்டுக்களை வீழ்த்தி முதல்தரப் போட்டிகளில் தனது சிறந்த பந்துவீச்சுப் பிரதியைப் பதிவு செய்தார்.
தென்னாபிரிக்க வளர்ந்துவரும் அணிக்காக சதமடித்து அசத்திய ரெய்னார்ட்
இலங்கை வளர்ந்துவரும் அணியுடனான……
தொடர்ந்து, தமது முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடி வருகின்ற இலங்கை வளர்ந்துவரும் கிரிக்கெட் அணி, இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவின் போது 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 217 ஓட்டங்களைப் பெற்று நிதானமாக விளையாடி வருகிறது.
தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை வளர்ந்துவரும் கிரிக்கெட் அணி, உத்தியோகபூர்வமற்ற ஒருநாள் போட்டிகள் கொண்ட முத்தரப்பு தொடரில் விளையாடியதுடன், தற்போது 2 போட்டிகள் கொண்ட உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது.
இந்த நிலையில், நான்கு நாட்கள் கொண்ட உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி, வியாழக்கிழமை (25) பிரிட்டோரியாவில் ஆரம்பமாகியது.
போட்டியில் முதலில் துடுப்பாடிய தென்னாபிரிக்க வளர்ந்துவரும் கிரிக்கெட் அணி, போட்டியின் முதல் நாள் நிறைவில் அணித் தலைவர் ரெய்னார்ட் வான் டொன்டரின் சதம் மற்றும் சினெதெம்பா கெஸிலின் அரைச் சதத்தின் உதவியுடன் முதல் இன்னிங்ஸில் 321 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்தது.
தென்னாபிரிக்க வளர்ந்துவரும் அணியின் துடுப்பாட்டத்திற்காக அதன் தலைவர் ரெய்னார்ட் வான் டொன்டர் 122 ஓட்டங்களுடனும், சினெதெம்பா கெஸில் 87 ஓட்டங்களுடனும் களத்தில் ஆட்டமிழக்காமல் நின்றனர்.
இது இவ்வாறிருக்க, போட்டியின் இரண்டாம் நாள் (26) தென்னாபிரிக்க வளர்ந்துவரும் அணி தமது முதல் இன்னிங்ஸை தொடர்ந்தது.
போட்டியின் ஆரம்பத்திலே சினெதெம்பா கெஸில் 87 ஓட்டங்களையும், நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரெய்னார்ட் வான் டொன்டர் 137 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்தனர்.
இறுதியில் கைல் சிம்மண்ட்ஸ் பெற்றுக்கொண்ட அரைச் சதத்தின் (73) உதவியுடன் தென்னாபிரிக்க வளர்ந்துவரும் அணி 108.1 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 441 ஓட்டங்களை எடுத்தது.
இரண்டாம் நாளில் தென்னாபிரிக்க வளர்ந்துவரும் அணிக்கு சுழல் பந்தில் நெருக்கடி கொடுத்த லசித் அம்புல்தெனிய 156 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுக்களை வீழ்த்தி அசத்தினார்.
இதனைத்தொடர்ந்து தமது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை வளர்ந்துவரும் அணி, தங்களுடைய முதல் விக்கெட்டினை 13 ஓட்டங்களுக்கு இழந்தது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர் லஹிரு உதார (08) மார்கோ ஜென்சனின் பந்து வீச்சில், LBW முறையில் ஆட்டமிழந்தார்.
வெற்றியுடன் மாலிங்கவிற்கு பிரியாவிடை கொடுத்த இலங்கை
இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ்…..
இதனை அடுத்து மினோத் பானுக்கவுடன் ஜோடி சேர்ந்த பெதும் நிஸ்ஸங்க 2ஆவது விக்கெட்டுக்காக 75 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பகிர்ந்து வலுச்சேர்த்தனர். எனினும், நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பெதும் நிஸ்ஸங்க 32 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
இதேநேரம், ஆரம்ப துடுப்பாட்ட வீரராகக் களமிறங்கிய மினோத் பானுக்க அரைச் சதங்களைக் கடந்த நிலையில் 56 ஓட்டங்களுடனும், அணித் தலைவர் சரித் அசலங்க 18 ஓட்டங்களுடனும் தன்டோ நிட்னியின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர்.
இதன் பிறகு பிரமோத் மதுவன்தவுடன் ஜோடி சேர்ந்த ஜெஹான் டேனியல் தென்னாபிரிக்க வளர்ந்துவரும் அணியின் பந்து வீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டு ஓட்டங்களை குவித்தனர்..
நிதானமாக ஓட்டங்களைக் குவித்த இருவரும் 5ஆவது விக்கெட்டுக்காக 89 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றுக்கொள்ள, ஜெஹான் டேனியல் 36 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
இதனால், போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வரும் போது இலங்கை வளர்ந்துவரும் கிரிக்கெட் அணி 5 விக்கெட்டுக்களை இழந்து 217 ஓட்டங்களுடன் காணப்படுகின்றது.
இலங்கை வளர்ந்துவரும் அணியின் துடுப்பாட்டத்தில் நம்பிக்கை கொடுத்த பிரமோத் மதுவன்த 47 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார்.
தென்னாபிரிக்க வளர்ந்துவரும் அணியின் பந்துவீச்சில், 19 வயதான இளம் வீரர்களான தன்டோ நிட்னி 3 விக்கெட்டுக்களையும், மார்கோ ஜென்சன் 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியிருந்தனர்.
இன்று போட்டியின் மூன்றாவது நாளாகும்.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Janneman Malan | b Jehan Daniel | 35 | 38 | 5 | 0 | 92.11 |
Wandile Makwetu | c Minod Bhanuka b Lasith Embuldeniya | 25 | 53 | 2 | 1 | 47.17 |
Raynard van Tonder | c Charith Asalanka b Lasith Embuldeniya | 137 | 267 | 14 | 1 | 51.31 |
Jason Smith | b Lasith Embuldeniya | 34 | 62 | 1 | 1 | 54.84 |
Matthew Breetzke | c Minod Bhanuka b Lasith Embuldeniya | 13 | 27 | 0 | 0 | 48.15 |
Sinethemba Qeshile | c Charith Asalanka b Lasith Embuldeniya | 87 | 89 | 9 | 2 | 97.75 |
Dayyaan Galiem | c Minod Bhanuka b Lasith Embuldeniya | 8 | 16 | 2 | 0 | 50.00 |
Kyle Simmonds | c Hasitha Boyagoda b Lasith Embuldeniya | 73 | 57 | 8 | 3 | 128.07 |
M Jansen | c Minod Bhanuka b Lasith Embuldeniya | 3 | 19 | 0 | 0 | 15.79 |
Thando Ntini | not out | 14 | 29 | 1 | 0 | 48.28 |
Tladi Bokako | run out (Pathum Nissanka) | 0 | 0 | 0 | 0 | 0.00 |
Extras | 12 (b 3 , lb 0 , nb 8, w 1, pen 0) |
Total | 441/10 (108.1 Overs, RR: 4.08) |
Fall of Wickets | 1-50 (13.1) Janneman Malan, 2-71 (17.2) Wandile Makwetu, 3-151 (41.5) Jason Smith, 4-173 (49.2) Matthew Breetzke, 5-326 (85.2) Sinethemba Qeshile, 6-342 (89.3) Dayyaan Galiem, 7-363 (93.4) Raynard van Tonder, 8-383 (99.2) M Jansen, 9-441 (107.6) Kyle Simmonds, 10-441 (108.1) Tladi Bokako, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Mohamed Shiraz | 24 | 3 | 96 | 0 | 4.00 | |
Kalana Perera | 8 | 2 | 23 | 0 | 2.88 | |
Chamika Karunarathne | 16 | 3 | 61 | 0 | 3.81 | |
Jehan Daniel | 6 | 1 | 31 | 1 | 5.17 | |
Lasith Embuldeniya | 42 | 5 | 156 | 8 | 3.71 | |
Nishan Peiris | 10.1 | 0 | 57 | 0 | 5.64 | |
Charith Asalanka | 2 | 0 | 14 | 0 | 7.00 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Lahiru Udara | c Sinethemba Qeshile b M Jansen | 8 | 14 | 2 | 0 | 57.14 |
Minod Bhanuka | c Sinethemba Qeshile b Thando Ntini | 56 | 65 | 8 | 1 | 86.15 |
Pathum Nissanka | lbw b Thando Ntini | 32 | 47 | 5 | 0 | 68.09 |
Charith Asalanka | c Raynard van Tonder b Thando Ntini | 18 | 26 | 2 | 0 | 69.23 |
Promod Maduwantha | c Sinethemba Qeshile b Thando Ntini | 111 | 236 | 9 | 0 | 47.03 |
Jehan Daniel | c Sinethemba Qeshile b M Jansen | 36 | 100 | 5 | 0 | 36.00 |
Kalana Perera | c Jason Smith b Dayyaan Galiem | 17 | 42 | 1 | 1 | 40.48 |
Chamika Karunarathne | c Wandile Makwetu b M Jansen | 53 | 97 | 4 | 0 | 54.64 |
Mohamed Shiraz | c Jason Smith b M Jansen | 23 | 50 | 3 | 0 | 46.00 |
Nishan Peiris | not out | 4 | 8 | 1 | 0 | 50.00 |
Lasith Embuldeniya | c Raynard van Tonder b M Jansen | 0 | 3 | 0 | 0 | 0.00 |
Extras | 30 (b 12 , lb 4 , nb 11, w 3, pen 0) |
Total | 388/10 (112.5 Overs, RR: 3.44) |
Fall of Wickets | 1-13 (3.3) Lahiru Udara, 2-88 (19.2) Pathum Nissanka, 3-118 (23.4) Minod Bhanuka, 4-128 (25.6) Charith Asalanka, 5-217 (59.4) Jehan Daniel, 6-250 (74.3) Kalana Perera, 7-333 (99.2) Promod Maduwantha, 8-379 (110.1) Chamika Karunarathne, 9-388 (112.2) Mohamed Shiraz, 10-388 (112.5) Lasith Embuldeniya, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Tladi Bokako | 16 | 1 | 53 | 0 | 3.31 | |
M Jansen | 19.5 | 5 | 69 | 5 | 3.54 | |
Dayyaan Galiem | 21 | 2 | 72 | 1 | 3.43 | |
Thando Ntini | 21 | 5 | 76 | 4 | 3.62 | |
Kyle Simmonds | 29 | 5 | 82 | 0 | 2.83 | |
Jason Smith | 6 | 1 | 21 | 0 | 3.50 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Janneman Malan | c Jehan Daniel b Kalana Perera | 84 | 162 | 6 | 0 | 51.85 |
Wandile Makwetu | lbw b Lasith Embuldeniya | 26 | 63 | 2 | 0 | 41.27 |
Raynard van Tonder | c Lahiru Udara b Lasith Embuldeniya | 31 | 80 | 3 | 0 | 38.75 |
Jason Smith | c Lahiru Udara b Promod Maduwantha | 62 | 130 | 3 | 3 | 47.69 |
Matthew Breetzke | not out | 38 | 89 | 3 | 0 | 42.70 |
Sinethemba Qeshile | c Jehan Daniel b Promod Maduwantha | 1 | 13 | 0 | 0 | 7.69 |
Dayyaan Galiem | not out | 3 | 17 | 0 | 0 | 17.65 |
Extras | 15 (b 1 , lb 0 , nb 14, w 0, pen 0) |
Total | 260/5 (90 Overs, RR: 2.89) |
Fall of Wickets | 1-46 (15.5) Wandile Makwetu, 2-129 (41.4) Raynard van Tonder, 3-185 (59.5) Janneman Malan, 4-245 (80.5) Jason Smith, 5-251 (84.5) Sinethemba Qeshile, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Kalana Perera | 15 | 3 | 43 | 1 | 2.87 | |
Lasith Embuldeniya | 34 | 5 | 99 | 2 | 2.91 | |
Mohamed Shiraz | 5 | 1 | 17 | 0 | 3.40 | |
Chamika Karunarathne | 11 | 3 | 42 | 0 | 3.82 | |
Jehan Daniel | 4 | 2 | 7 | 0 | 1.75 | |
Nishan Peiris | 14 | 4 | 31 | 0 | 2.21 | |
Promod Maduwantha | 7 | 0 | 20 | 2 | 2.86 |