பங்களாதேஷ் பிரீமியர் லீக் தொடரில் விளையாடவுள்ள இலங்கை வீரர்கள்

2121

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களான லசித் மாலிங்க மற்றும் திசர பெரேரா உள்ளிட்ட ஆறு வீரர்கள், பங்களாதேஷ் பிரீமியர் லீக்கின் ஆறாவது பருவகாலத்துக்கான வீரர்கள் வரைவில் இருந்து தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

பங்களாதேஷ் பிரீமியர் லீக்கின் இறுதிக்கட்ட வீரர்கள் வரைவு நேற்று (28) டாக்காவில் நடைபெற்றது. இதில் உள்நாட்டைச் சேர்ந்த 165 வீரர்கள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 365 வீரர்கள் என மொத்தமாக 17 நாடுகளைச் சேர்ந்த  வீரர்களின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன.  

ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் (APL) சம்பியன்களாக பல்க் லெஜென்ட்ஸ் அணி

இலங்கை அணியின் முன்னாள் தலைவரும், தற்போது பங்களாதேஷ் பிரீமியர் லீக்கின் குஹ்ல்னா டைட்டன்ஸ் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளருமான மஹேல ஜயவர்தன, நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான லசித் மாலிங்கவை அவரது அணியின் A பிரிவு வீரராக தெரிவுசெய்துள்ளார்.

லசித் மாலிங்க ஏற்கனவே, மும்பை (IPL) அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக செயற்பட்ட மஹேல ஜயவர்தனவுடன் இணைந்து அந்த அணியின் பந்து வீச்சு ஆலோசகராகவும், பந்து வீச்சாளராகவும் கடந்த பருவகாலங்களில் செயற்பட்டிருந்தார். இந்த நிலையில் குறித்த ஜோடி தற்போது பங்களாதேஷ் பிரீமியர் லீக் தொடரிலும் இணையவுள்ளது.

நடந்து முடிந்த ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக்கில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தவரும், T20 போட்டிகளில் சிறந்த பந்து வீச்சாளராக வலம் வருபவருமான இசுறு உதானவை ராஜ்ஷாஹி கிங்ஸ் அணி வாங்கியுள்ளது.

இவர்களுடன் இலங்கை அணியில் அதிரடி துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி வரும் சகலதுறை வீரர்களான தசுன் சானக மற்றும் திசர பெரேரா ஆகியோரும் இரண்டு வெவ்வேறு அணிகளில் இடம் பிடித்துள்ளனர். தசுன் சானக சிட்டகொங் விக்கிங்ஸ் அணிக்காகவும், திசர பெரேரா கொமில்லா விக்டோரியன்ஸ் அணிக்காகவும் விளையாடவுள்ளனர்.

அணித் தலைவர் திசர பெரேரா போராடியும் இலங்கைக்கு தோல்வி

இலங்கை அணிக்கு…

அதேநேரம், இலங்கை தேசிய அணியில் மீண்டும் விளையாடுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வரும் அதிரடி சகலதுறை வீரர் சீகுகே பிரசன்ன மற்றும் மத்தியவரிசை துடுப்பாட்ட வீரர் அசேல குணரத்ன ஆகியோர் முறையே ராஜ்ஷாஹி கிங்ஸ் மற்றும் கொமில்லா விக்டோரியன்ஸ் அணிக்காக தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி அசேல குணரத்ன மற்றும் திசர பெரெரா ஆகியோர் கொமில்லா விக்டோரியன்ஸ் அணியுடன் இணையவுள்ளதுடன், இசுறு உதான மற்றும் சீகுகே பிரசன்ன ஆகியோர் ராஜ்ஷாஹி கிங்ஸ் அணியில் இணையவுள்ளனர்.

பங்களாதேஷ் பிரீமியர் லீக்கின் கடந்த பருவாகலத்தின் சம்பியனாக, திசர பெரேரா மற்றும் லசித் மாலிங்க விளையாடியிருந்த ராங்பூர் ரைடர்ஸ் அணி முடிசூடியிருந்தது.  இந்நிலையில், தற்போது அடுத்த பருவகாலத்துக்கான போட்டிகள் எதிர்வரும் ஜனவரி 5ம் திகதி முதல் பெப்ரவரி 8ம் திகதிவரை நடைபெறவுள்ளன.

இலங்கை அணி வீரர்கள்

  • லசித் மாலிங்ககுஹ்ல்னா டைட்டன்ஸ்
  • திசர பெரேரா, அசேல குணரத்னகொமில்லா விக்டோரியன்ஸ்
  • சீகுகே பிரசன்ன, இசுறு உதானராஜ்ஷாஹி கிங்ஸ்
  • தசுன் சானகசிட்டகொங் விக்கிங்ஸ்

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க