LPL தொடரின் விளம்பர தூதுவராகும் விவியன் ரிச்சர்ட்ஸ்

241

லங்கா பிரீமியர் லீக் (LPL) T20 தொடரின் விளம்பரத் தூதுவர்களில் (Brand Ambassador) ஒருவராக மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்ஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மூன்றாவது பருவகாலத்திற்கான LPL தொடர் டிசம்பர் மாதம் 06ஆம் திகதி தொடக்கம் 23ஆம் வரை நடைபெறவுள்ளது. இந்த நிலையில் தொடருக்கு மேலும் பலம் சேர்க்கும் விதத்திலேயே விவியன் ரிச்சர்ட்ஸ் LPL தொடரின் விளம்பரத் தூதுவராக நியமனம் செய்யப்பட்டிருக்கின்றார்.

கோலிக்கு எதிராக ஐசிசி இடம் புகார் அளிக்கவுள்ள பங்களாதேஷ்

அத்துடன் LPL தொடருக்கு விளம்ப தூதுவர்களாக சனத் ஜயசூரிய மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் நட்சத்திரம் வசீம் அக்ரம் ஆகியோர் நியமனம் செய்யப்பட்ட நிலையிலையே இந்த தொடரில் விளம்பர தூதுவராக கைகோர்க்கும் மூன்றாவது வீரராக விவியன் ரிச்சர்ட்ஸ் மாறியிருக்கின்றார்.

இதேநேரம் LPL தொடரின் விளம்பர தூதுவராக மாறிய விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்ட விவியன் ரிச்சர்ட்ஸ், இந்த தொடருக்கான விளம்பர தூதுவராக மாறியது மகிழ்ச்சி தருகின்றது எனத் தெரிவித்துள்ளார்.

LPL தொடரின் உரிமத்தை தன்னகத்தே வைத்திருக்கும் IPG நிறுவனத்தின் தலைமை அதிகாரியான அனில் மோஹன் விவியன் ரிச்சர்ட்ஸ் போன்ற ஒரு கிரிக்கெட் நட்சத்திரத்தை விளம்பர தூதுவராக மாற்றுவது LPL தொடரின் இரசிகர் பட்டாளத்தை இன்னும் அதிகரிக்கும் எனக் குறிப்பிட்டிருக்கின்றார்.

LPL தொடரானது பிரபல்யமிக்க T20 கிரிக்கெட் தொடர்களில் ஒன்றாக வளர்ந்து வருவதுடன், இந்த தொடரினை சுமார் 557 மில்லியன் வரையிலான இரசிகர்கள் இதுவரை பார்வையிட்டிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

WATCH – “அடுத்த இரண்டு போட்டிகளில் சிறப்பாக ஆடுவோம்” குசல் மெண்டிஸ் நம்பிக்கை!

அத்துடன் இந்த ஆண்டுக்கான LPL தொடரிலும் T20 அரங்கில் பிரகாசிக்கும் முன்னணி நட்சத்திரங்களான எவின் லூயிஸ், கார்லோஸ் ப்ராத்வைட், ஜென்னமான் மலான், ட்வைன் ப்ரெடோரியஸ் மற்றும் சொஹைப் மலிக் ஆகிய வீரர்கள் கலந்து கொள்ளவிருக்கின்றமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

அதேவேளை இந்த ஆண்டுக்கான LPL தொடரின் முதல் போட்டியானது தொடரின் நடப்புச் சம்பியன் ஜப்னா கிங்ஸ் மற்றும் கோல் கிளேடியேட்டர்ஸ் அணிகள் இடையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<