சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையில் நடைபெற்றுவரும் 19 வயதுக்குட்பட்ட பிரிவு 1 பாடசாலைகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடரின் கீழ் காலி றிச்மண்ட் கல்லூரி மற்றும் குருநாகல், மலியதேவ கல்லூரிகளுக்கிடையில் நடைபெற்ற பாரம்பரிய போட்டியில் மலியதேவ கல்லூரியை இன்னிங்ஸ் மற்றும் 235 ஓட்டங்களால் றிச்மண்ட் கல்லூரி அணி தோல்வியடையச் செய்தது.
மொஹமட் அமீன் 10 விக்கெட்டுகள்; புனித பேதுரு கல்லூரிக்கு மற்றுமொரு வெற்றி
சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையில் நடைபெற்றுவரும் 19 வயதுக்கு உட்பட்ட……..
மலியதேவ கல்லூரி மைதானத்தில் நேற்று தொடங்கிய இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பாடியிருந்த மைதான சொந்தக்காரர்கள், றிச்மண்ட கல்லூரியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிக்காட்டி 110 ஓட்டங்களையே முதல் இன்னிங்ஸிற்காகப் பெற்றுக்கொண்டனர். அவ்வணி சார்பாக முதித பிரேமதாஸ ஆட்டமிழக்காது 59 ஓட்டங்களைப் பெற்றுக்கொள்ள, ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.
பந்துவீச்சில் றிச்மண்ட் கல்லூரியின் இடதுகை சுழற்பந்துவீச்சாளரான அவிந்து தீக்ஷன 42 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியிருந்தார்.
இதனையடுத்து பதிலுக்கு தங்களுடைய முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய றிச்மண்ட் கல்லூரியினர் தனஞ்சய லக்ஷான் (154) மற்றும் கமிந்து மெண்டிஸ்(124) ஆகியோரின் அபார சதங்களின் உதவியுடன் 510 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுக்களை இழந்து மிகவும் வலுவாக காணப்பட்டிருந்த போது தமது ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டனர்.
இதில் பாடசாலை அரங்கில் தனது கடைசி போட்டித் தொடரில் பங்கேற்று வருகின்ற அனுபவமிக்க வீரரான கமிந்து மெண்டிஸ், இப்பருவகாலத்தில் தனது 4ஆவது சதத்தையும் பூர்த்தி செய்தார்.
மொஹமட் அமீன் 10 விக்கெட்டுகள்; புனித பேதுரு கல்லூரிக்கு மற்றுமொரு வெற்றி
சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையில் நடைபெற்றுவரும் 19 வயதுக்கு உட்பட்ட……
தனஞ்சய லக்ஷான் மற்றும் கமிந்து மெண்டிஸ் ஜோடி முதல் விக்கெட்டுக்காக 241 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்று அவ்வணிக்கு மேலும் வலுசேர்த்தனர்.
இதனையடுத்து 400 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாம் இன்னிங்ஸிற்காக தமது துடுப்பாட்டத்தை ஆரம்பித்த மலியதேவ வீரர்கள் 165 ஓட்டங்களை மாத்திரமே பெற்று இன்னிங்ஸ் மற்றும் 235 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவினர். அவ்வணியின் துலாஜ் ரணதுங்க 59 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றுக்கொண்டார்.
பந்துவீச்சில் றிச்மண்ட் கல்லூரியின் திலும் சுதீர 66 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியிருந்தார்.
போட்டியின் சுருக்கம்
மலியதேவ கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) 110/10 (35.5) – முதித பிரேமதாஸ 59*, அவிந்து தீக்ஷன 7/42, சந்துன் மெண்டிஸ் 2/29
றிச்மண்ட் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) 510/8d (84.4) – தனஞ்சய லக்ஷான் 154, கமிந்து மெண்டிஸ் 124, சந்துன் மெண்டிஸ் 52*, ஆதித்ய சிறிவர்தன 51, கவீன் பண்டார 3/84, துலாஜ் ரணதுங்க 3/88
மலியதேவ கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) 165/10 (35.5) – துலாஜ் ரணதுங்க 59, சுபுன் சுமனரத்ன 21, திலும் சுதீர 5/66, ரவிந்து தீக்ஷன 3/35
முடிவு – றிச்மண்ட் கல்லூரி இன்னிங்ஸ் மற்றும் 235 ஓட்டங்களால் வெற்றி