சரண நாணயக்காரவின் அதிரடி பந்து வீச்சில் 85 ஓட்டங்களுக்கு சுருண்ட ரிச்மண்ட் கல்லூரி

285
Singer U19 Schools Cricket February 20th roundup

19 வயதுக்குட்பட்ட சிங்கர் கிண்ணத்துக்கான முதல் சுற்றுப் போட்டிகளுக்காக இன்றைய தினம் இரண்டு போட்டிகள் இடம்பெற்றன. அந்த வகையில் முதலாம் நாளான இன்றைய நாள் பந்து வீச்சில் அதிரடி காட்டிய சரண நாணயக்கார 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ரிச்மன்ட் கல்லூரி, காலி எதிர் தர்ஸ்டன் கல்லூரி

இவ்விரு அணிகளுக்கிடையிலான போட்டி இன்றைய தினம் முதல் நாளாக கொழும்பு தர்ஸ்டன் கல்லூரி மைதானத்தில் ஆரம்பித்தது. நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய தர்ஸ்டன் கல்லூரி, முதலில் ரிச்மண்ட் கல்லூரியை துடுப்பாடுமாறு பணித்தது.

இங்கிலாந்து லயன்ஸ் அணியிடம் படுதோல்வியடைந்த இலங்கை A அணி

அதனையடுத்து களமிறங்கிய ரிச்மண்ட் கல்லூரி, சரண நாணயக்காரவின் அதிரடி பந்து வீச்சில் சீக்குண்டு 28.3 ஓவர்களுக்குள் சகல விக்கெட்டுகளையும் இழந்து 85 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. கூடிய ஓட்டங்களாக தனஞ்சய லக்க்ஷான் 28 ஓட்டங்களை பதிவு செய்த அதேவேளை, சரண நாணயக்கார 31 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் தமது முதல் இன்னிங்சிற்காகத் துடுப்பாடிய தர்ஸ்டன் கல்லூரி அணி, இன்றைய நாள் ஆட்ட நேர நிறைவின் போது 4 விக்கெட்டு இழப்பிற்கு 93 ஓட்டங்களை பெற்றிருந்தது. நாளை போட்டியின் இரண்டாம் நாளாகும்

போட்டியின் சுருக்கம்

ரிச்மண்ட் கல்லூரி: 85 (28.3) – தனஞ்சய லக்க்ஷான் 28, சரண நாணயக்கார 5/31, துசால் மதுஷங்க 2/08, நிபுன் லக்க்ஷான் 2/24

தர்ஸ்டன் கல்லூரி: 93/4 (25) –யஷான் விக்ரமராச்சி 35, இமேஷ் விரங்க 33, திலங்க உதேஷன 2/30, அவிந்து தீக்ஷன 20/2


தர்மராஜ கல்லூரி, கண்டி எதிர் கொழும்பு றோயல் கல்லூரி

கொழும்பு றோயல் கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகிய இவ்விரு அணிகளுக்கிடையிலான போட்டியில், முதலில் துடுப்பாடிய தர்மராஜ கல்லூரி அணி இன்றைய நாள் அட்ட நேர நிறைவின் போது 9 விக்கெட் இழப்பிற்கு 106 ஓட்டங்களை பெற்றுள்ளது.

அவ்வணி சார்பாக  டுலாஜ் விஜயகோன் 35 ஓட்டங்களை கூடிய ஓட்டங்களாக பதிவு செய்த அதேவேளை ஹெலித விதானகே 23 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்

நாளை போட்டியின் இரண்டாம் நாளாகும்.

போட்டியின் சுருக்கம்

தர்மராஜ கல்லூரி, கண்டி : 106/9 (44) டுலாஜ் விஜயகோன் 35, சமக்க எதிரிசிங்க 2/17, ஹெலித விதானகே 4/23