இன்று நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்ட சிங்கர் கிண்ணப் போட்டிகளில் புனித பேதுரு கல்லூரி, புனித பெனடிக் கல்லூரியை சொந்த மண்ணிலேயே 8 விக்கெட்டுகளால் தோற்கடித்தது.

ஸாஹிரா கல்லூரி, கொழும்பு எதிர் அனுராதபுரம் மத்திய மகாவித்தியாலயம்

கொழும்பு, ஸாஹிரா கல்லூரி மைதானத்தில் இன்றைய தினம் ஆரம்பித்த இவ்விரு அணிகளுக்கிடயிலான போட்டியில், கொழும்பு ஸாஹிரா கல்லூரி முதல் இன்னிங்சுக்காக பெற்றுக்கொண்ட 218 ஓட்டங்களுக்கு பதிலாக துடுப்பாடிய அனுராதபுரம் மத்திய மகாவித்தியாலயம் சஜித் சமீரவின் அதிரடி பந்து வீச்சில் வெறும் 58 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

அந்த வகையில் 160 ஓட்டங்களுடன் முன்னிலை பெற்ற நிலையில் இரண்டாவது இன்னிங்சுக்காக களமிறங்கிய ஸாஹிரா கல்லூரி இன்றைய நாள் ஆட்ட நேர நிறைவின் போது 40 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

நாளை போட்டியின் இரண்டாம் நாளாகும்.

போட்டியின் சுருக்கம்

ஸாஹிரா கல்லூரி, கொழும்பு (முதல் இன்னிங்ஸ்): 218 (57) – முகமத் சமாஷ் 83, முகமது நஜாத் 60, தில்ஷான் லக்ஷித 3/24, சித்தும் நிலுமிந்த 2/20

அனுராதபுரம் மத்திய மகாவித்தியாலயம் (முதல் இன்னிங்ஸ்): 58 (20) – சிதறக ஹிரந்த 17, சஜித் சமீர 4/15, ஹஷ்மி ஹுசைன் 2/15

சாஹிரா கல்லூரி, கொழும்பு (இரண்டாம் இன்னிங்ஸ்): 40/4 (14)


புனித பேதுரு கல்லூரி, கொழும்பு எதிர் புனித பெனடிக்ட் கல்லூரி, கொட்டாஞ்சேனை

புனித பேதுரு கல்லூரி முதல் இன்னிங்சுக்காக பெற்றுக்கொண்ட 302 ஓட்டங்களுக்கு பதிலாக முதலாவது இன்னிங்சுக்காக களமிறங்கிய புனித பெனடிக்ட் கல்லூரி167 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

அந்த வகையில் 135 ஓட்டங்களால் பின்னிலை பெற்ற நிலையில், இரண்டாம் இன்னிங்சுக்காக மீண்டும் களமிறங்கிய பெனடிக்ட் கல்லூரி 199 ஓட்டங்களை பெற்று 64 ஓட்டங்களால் முன்னிலை பெற்றது. சிறப்பாக துடுப்பாடிய சமிந்து விஜேசிங்க 91 ஓட்டங்களை பெற்று அணியின் ஓட்ட எண்ணிகையை உயர்த்தினார்.

அதனை தொடர்ந்து இலகுவான வெற்றி இலக்கை நோக்கி துடுப்பாடிய புனித பேதுரு கல்லூரி, 7.5 ஓவர்களில் குறித்த இலக்கை அடைந்து 8 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது

போட்டியின் சுருக்கம்

புனித பேதுரு கல்லூரி, கொழும்பு (முதல் இன்னிங்ஸ்): 302/6d (68) – சந்தோஷ்  குணதிலக்க 133*, அனிஷ்க பெரேரா 58, லக்ஷின ரொட்ரிகோ 58, மனெல்கர் டி சில்வா 21, கவிஷ ஜயதிலக்க 2/60

புனித பெனடிக்ட் கல்லூரி, கொட்டாஞ்சேனை (முதல் இன்னிங்ஸ்): 167 (57.2) – மகீஷ் தீக்ஷன 62, கவீஷ ஜயதிலக்க 33*, சதுர ஒபேசேகற 5/41, முஹம்மத் அமீன் 3/45

புனித பெனடிக்ட் கல்லூரி, கொட்டாஞ்சேனை (இரண்டாம் இன்னிங்ஸ்) f/o: 199 (49.2) – சமிந்து விஜேசிங்க 91, மகீஷ் தீக்ஷன 48, சச்சின் சில்வா 3/22, முஹம்மத் அமீன் 3/62, மனெல்கர் டி சில்வா 3/48

புனித பேதுரு கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்): 65/2 (7.5) – லக்‌ஷின ரொட்ரிகோ 31*

போட்டி முடிவு: புனித பேதுரு கல்லூரி 8 விக்கெட்டுகளால் வெற்றி  


பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி, மொறட்டுவ எதிர் வெஸ்லி கல்லூரி, கொழும்பு

146 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்த நிலையில் இரண்டாம் நாளாக துடுப்பாட்டத்தை தொடர்ந்த பிரின்ஸ் வேல்ஸ் கல்லூரி, சனோஜ் தர்ஷிக்க (78) மற்றும் சந்துன் பெர்னாண்டோ (56) ஆகியோரின் அரைச்சதங்களின் உதவியுடன் 8 விக்கெட்டுகளுக்கு 269 ஓட்டங்களை பெற்றுக்கொண்டு 104 ஓட்டங்களால் முன்னிலை பெற்ற நிலையில் ஆட்டத்தை நிறுத்தி வெஸ்லி கல்லூரிக்கு துடுப்பாடுமாறு பணித்தது.

அந்த வகையில் 1௦4 ஓட்டங்களால் பின்னிலை பெற்ற நிலையில் களமிறங்கிய வெஸ்லி கல்லூரி 88 ஓட்டங்களுக்குள் சுருண்டது.  அவ்வணி சார்பாக கூடிய ஓட்டங்களை பதிவு செய்த ஹசித் பெரேரா 49 ஓட்டங்களைக் குவித்தார். 

போட்டியின் சுருக்கம்

வெஸ்லி கல்லூரி, கொழும்பு (முதல் இன்னிங்ஸ்): 165 (60.3) – ஹசித்த பெரேரா 39, ருசிக்க தங்கல்ல 29, ஹேஷ்ரன் வணிகசூரிய 28, திசுருக்க அக்மீமன 21, திலான் நிமேஷ் 5/47, தருக்க பெர்னாண்டோ 3/32

பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி, மொரட்டுவ (முதல் இன்னிங்ஸ்): 269/8d (56.5) – சனோஜ் தர்ஷிக்க 78, சந்துன் பெர்னாண்டோ 56, விஷ்வ சதுரங்க 34, திலங்க மதுரங்க 31, ருசிக்க தங்கல்ல 3/67, மொவின் சுபசிங்க 3/86

வெஸ்லி கல்லூரி, கொழும்பு (இரண்டாம் இன்னிங்ஸ்): 88 (36) – ஹசித் பெரேரா 49, சவிந்து பீரிஸ் 2/06, தருக்க பெர்னாண்டோ 2/17, சனோஜ் தர்ஷிக்க 2/22, திலான் நிமேஷ் 2/31

போட்டி முடிவு: பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி இன்னிங்ஸ் மற்றும் 16 ஓட்டங்களால் வெற்றி


புனித அந்தோனியர் கல்லூரி, கண்டி எதிர் புனித ஜோசப் கல்லூரி, கொழும்பு

இவ்விரு அணிகளுக்கிடையிலான இந்த விறுவிறுப்பான போட்டி இறுதி நேரத்தில் சமநிலையில் முடிவுற்றது. எனினும், முதல் இன்னிங்சில் 49 ஓட்டங்களால் முன்னிலை பெற்ற புனித அந்தோனியர் கல்லூரி முதல் இன்னிங்ஸ் வெற்றிக்கான புள்ளிகளை பெற்றுக்கொண்டது.

இன்றைய நாள் 127 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுகளுடன் ஆட்டதை ஆரம்பித்த புனித ஜோசப் கல்லூரி முதல் இன்னிங்சுக்காக சகல விக்கெட்டுகளையும் இழந்து 127 ஓட்டங்களைப் பெற்றது.

பின்னர் இரண்டாம் இன்னிங்சுக்காக துடுப்பாடிய புனித அந்தோனியர் கல்லூரி 128 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. சிறப்பாக துடுப்பாடிய  முகமது அப்தார் 60 ஓட்டங்களை கூடிய ஓட்டங்களாக பதிவு செய்த அதே வேளை, பந்துவீச்சில் ஹரீன் குரே 41 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஓட்டங்களை மட்டுப்படுத்தினார்.

அந்தவகையில், 177 ஓட்டங்களை இலக்காக கொண்டு களமிறங்கிய புனித ஜோசப் கல்லூரி, 122 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்திருந்த இக்கட்டான சூழநிலையில் போதிய நேரமின்மை காரணமாக போட்டி சமநிலையில் முடிவுற்றது.

போட்டியின் சுருக்கம்

புனித அந்தோனியர் கல்லூரி, கண்டி (முதல் இன்னிங்ஸ்): 176 (49.3) – டியோன் ஸ்டோர்டர் 32, நிபுன் அசோக் 26, சுன்னேற ஜயசிங்க 26, ஹரின் குரே 5/45, நிபுன் சுமனசிங்க 3/26

புனித ஜோசப் கல்லூரி, கொழும்பு (முதல் இன்னிங்ஸ்): 127 (41.1) – தினித் மதுரவெல 54, விராஜித ஜயசிங்க 4/34  சந்தருவன் தர்மரத்ன 4/39

புனித அந்தோனியர் கல்லூரி, கண்டி (இரண்டாம் இன்னிங்ஸ்): 128 (35.5) – முகமது அப்தார் 60, ஹரின் குரே 5/41, நிபுன் சமரசிங்க 3/20

புனித ஜோசப் கல்லூரி, கொழும்பு (இரண்டாம் இன்னிங்ஸ்): 122/8 (58) – தினித் ஜயக்கொடி 31, ஹரின் குரே 24, சந்தருவன் தர்மரத்ன 4/47

போட்டி முடிவு: போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவுற்றது.


ஆனந்த கல்லூரி, கொழும்பு எதிர் தர்மராஜ கல்லூரி, கண்டி

ஆனந்த கல்லூரி முதல் இன்னிங்சுக்காக பெற்றுக்கொண்ட 335 ஓட்டங்களுக்கு பதிலாக களமிறங்கிய தர்மராஜ கல்லூரி முதல் இன்னிங்க்சில் 123 ஓட்டங்களுக்கு சுருண்டது. அதனை தொடர்ந்து 212 ஓட்டங்களால் பின்னிலை பெற்ற நிலையில் மீண்டும் இரண்டாவது இன்னிங்சுக்காக துடுப்பாடப் பணிக்கப்பட்ட (Follow On) தர்மராஜ கல்லூரி நிவந்த ஹேரத்தின் 148 ஓட்டங்களுடன் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 267 ஓட்டங்களை குவித்தது.

அதேநேரம் சிறப்பாக பந்து வீசிய சுபுன் வாரகொட 43 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

போட்டியின் சுருக்கம்

ஆனந்த கல்லூரி, கொழும்பு (முதல் இன்னிங்ஸ்): 335/8d (63) – கவிஷ்க அஞ்சுல 105, அசெல் சிகர 93, சுபுன் வாரகோட 57*, சம்மு அஷான் 31, கிஹான் விதார 5/141, நவிது தில்ஷான் 2/35

தர்மராஜ கல்லூரி, கண்டி (முதல் இன்னிங்ஸ்): 123 (46.2) – சசிந்த சேனநாயக்க 43, தேஷான் குணசிங்க 40, சஹன் சூரவீர 2/15, சம்மு அஷான் 2/20, சுபுன் வாராகோட 2/26, திலீப்ப ஜயலத் 2/09

தர்மராஜ கல்லூரி, கண்டி (இரண்டாம் இன்னிங்ஸ்) 267/7 (79) – நிவந்த ஹேரத் 148, சசிந்த சேனநாயக்க 71, சுபுன் வாரகொட 4/43

போட்டி முடிவு: போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவுற்றது.