சிங்கர் 19 வயதுக்கு உட்பட்ட டிவிஷன் I இற்கான 6 போட்டிகள் இன்றைய நாள் நடைபெற்ற நிலையில், ஜோசப் வாஸ் கல்லூரி அணியுடனான போட்டியில் ஹசித்த திமலின் அதிரடி பந்து வீச்சில் பண்டாரநாயக்க கல்லூரி 84 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. அதே நேரம் ஒரு போட்டி சமநிலையிலும், எஞ்சிய நான்கு போட்டிகளும் தொடர்ந்து நாளை இரண்டாவது நாளாக நடைபெறவுள்ளன.

புனித அந்தோனியர் கல்லூரி, கண்டி எதிர் புனித ஜோசப் கல்லூரி, கொழும்பு

கண்டி, புனித அந்தோனியர் கிரிக்கெட் மைதானத்தில் இன்று முதல் நாளாக ஆரம்பித்த இவ்விரு அணிகளுக்கிடையிலான போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற புனித அந்தோனியர் கல்லூரி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. அந்த வகையில் களமிறங்கிய அவ்வணி, முதல் இன்னிங்சுக்காக சகல விக்கெட்டுகளையும் இழந்து 176 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

கூடிய ஓட்டங்களாக டியோன் ஸ்டோர்டர் 32 ஓட்டங்களை பதிவு செய்தார். அதே நேரம் சிறப்பாக பந்து வீசிய ஹரின் குரே 45 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதனை தொடர்ந்து முதல் இன்னிங்சுக்காக துடுப்பாடிய புனித ஜோசப் கல்லூரி, இன்றைய நாள் ஆட்ட நேர முடிவின் போது 127 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்த நிலையில், 49 ஓட்டங்களால் பின்னிலை வகிக்கிறது.

எனினும். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய சிறப்பாக துடுப்பாடிய தினித் மதுரவெல 54 ஓட்டங்களை பெற்று அணயின் ஓட்ட எண்ணிகையை உயர்த்தினார். பந்துவீச்சில் விராஜித ஜயசிங்க மற்றும் சந்தருவன் தர்மரத்ன தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

நாளை போட்டியின் இரண்டாம் நாளாகும்.

போட்டியின் சுருக்கம்

புனித அந்தோனியர் கல்லூரி, கண்டி (முதல் இன்னிங்ஸ்): 176 (49.3) – டியோன் ஸ்டோர்டர் 32, நிபுன் அசோக் 26, சுன்னேற ஜயசிங்க 26, ஹரின் குரே 5/45, நிபுன் சுமனசிங்க 3/26

புனித ஜோசப் கல்லூரி, கொழும்பு (முதல் இன்னிங்ஸ்): 127/9 (40.3) – தினித் மதுரவெல 54, விராஜித ஜயசிங்க 4/34  சந்தருவன் தர்மரத்ன 4/39


திரித்துவக் கல்லூரி, கண்டி எதிர் இசிபதன கல்லூரி

கண்டி, அஸ்கிரிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இவ்விரு அணிகளுக்கிடையிலான போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவுற்றிருந்தாலும், முதல் இன்னிங்ஸ் புள்ளிகளை இசிபதன கல்லூரி பெற்றுக்கொண்டது.

திரித்துவக் கல்லூரி முதல் இன்னிங்சில் பெற்றுக்கொண்ட 258 ஓட்டங்களுக்கு பதிலாக களமிறங்கிய இசிபதன கல்லூரி, சகல விக்கெட்டுகளையும் இழந்து 290 ஓட்டங்களை பெற்று 32 ஓட்டங்களால் முன்னிலை வகித்தது. சிறப்பாக துடுப்பாடிய சஞ்சுல அபேவிக்ரம 76 ஒட்டங்களையும், பத்தும் நிஸ்ஸங்க மற்றும் அயன சிறிவர்தன அரைச் சதம் பெற்றுக்கொண்டனர்.

பந்துவீச்சில் விமுக்தி நெதுமல் 88 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதனை தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சுக்காக களமிறங்கிய திரித்துவக் கல்லூரி 44 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில் போட்டி சமநிலையில் முடிவுற்றது.

போட்டயின் சுருக்கம்

திரித்துவக் கல்லூரி, கண்டி (முதல் இன்னிங்ஸ்): 258 (89.1) – பூரண வனசேகற 52, சானுக்க பண்டார 46, ஹிமங்க சூரியபொல 34, தியாகராஜா பானுகோபன்  47, ஹசித போயகொட 21, லிசுற வீனத் 3/68, லஹிரு வீரரத்ன 3/40, நிரஞ்சன்  வன்னியாராச்சி 2/64  

இசிபத்தன கல்லூரி, கொழும்பு (முதல் இன்னிங்ஸ்): 290 (64.3) – சஞ்சுல அபேவிக்ரம 76, பத்தும் நிஸ்ஸங்க 50, அயன சிறிவர்தன 54, ஹேஷான் பெர்னாண்டோ 25, சஞ்சுல பண்டார 34, விமுக்தி நெதுமல் 5/88, ஷனோகித் சண்முகநாதன் 3/41

திரித்துவக் கல்லூரி, கண்டி (இரண்டாம் இன்னிங்ஸ்): 44/5 (13.4) – லிசுற வீனத் 2/09

போட்டி முடிவு: இசிபத்தன கல்லூரி முதல் இன்னிங்ஸ் புள்ளிகளை பெற்றுக்கொண்டது.


பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி, மொறட்டுவ எதிர் வெஸ்லி கல்லூரி, கொழும்பு

இவ்விரு அணிகளுக்கிடையிலான போட்டி பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி மைதானத்தில் இன்றைய தினம் ஆரம்பித்தது. இந்த போட்டியில் முதலில் துடுப்பாடிய வெஸ்லி கல்லூரி, சகல விக்கெட்டுகளையும் இழந்து 165 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. கூடிய ஓட்டங்களாக ஹசித்த பெரேரா 39 ஓட்டங்களை பதிவு செய்தார். சிறப்பாக பந்து வீசிய திலான் நிமேஷ் 47 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஓட்டங்களை மட்டுப்படுத்தினார்.

பின்னர் முதல் இன்னிங்சுக்காக நோக்கி களமிறங்கிய பிரின்ஸ் வேல்ஸ் கல்லூரி சனோஜ் தர்ஷிக்க மற்றும் சந்துன் பெர்னாண்டோ ஆகியோரின் அரைச் சதங்களுடன் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 146 ஓட்டங்களை பெற்றுள்ளது.

நாளை போட்டியின் இரண்டாம் நாளாகும்.

போட்டியின் சுருக்கம்

வெஸ்லி கல்லூரி, கொழும்பு (முதல் இன்னிங்ஸ்): 165 (60.3) – ஹசித்த பெரேரா 39, ருசிக்க தங்கல்ல 29, ஹேஷ்ரன் வணிகசூரிய 28, திசுருக்க அக்மீமன 21, திலான் நிமேஷ் 5/47, தருக்க பெர்னாண்டோ 3/32

பிரின்ஸ் வேல்ஸ் கல்லூரி, மொரட்டுவ (முதல் இன்னிங்ஸ்): 146/6 (34) – விஷ்வ சதுரங்க 34, சந்துன் பெர்னாண்டோ 56, சனோஜ் தர்ஷிக்க 51*, ருசிக்க தங்கல்ல 3/51


புனித பேதுரு கல்லூரி, கொழும்பு எதிர் புனித பெனடிக்ட் கல்லூரி, கொட்டாஞ்சேனை

புனித புனித பெனடிக்ட் கல்லூரி மைதானத்தில் இன்று முதல் தினமாக ஆரம்பித்த இவ்விரு அணிகளுக்கிடையிலான போட்டியில், முதலில் துடுப்பாடக் களமிறங்கிய புனித பேதுரு கல்லூரி, சந்தோஷ் குணதிலக்க ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொண்ட 133 ஓட்டங்களுடன் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 302 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டத்தை நிறுத்திக்கொண்டது.

பின்னர் துடுப்பாடக் களமிறங்கிய புனித பெனடிக்ட் கல்லூரி, 43 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்த நிலையில் முதலாம் நாள் ஆட்டம் முடிவுற்றது.

நாளை போட்டியின் இரண்டாம் நாளாகும்.

போட்டியின் சுருக்கம்

புனித பேதுரு கல்லூரி, கொழும்பு (முதல் இன்னிங்ஸ்): 302/6d (68) – சந்தோஷ்  குணதிலக்க 133*, அனிஷ்க பெரேரா 58, லக்ஷின ரொட்ரிகோ 58, மனெல்கர் டி சில்வா 21, கவிஷ ஜயதிலக்க 2/60

புனித பெனடிக்ட் கல்லூரி, கொட்டாஞ்சேனை (முதல் இன்னிங்ஸ்): 43/3 (25) – சதுர ஒபேசேகற 3/12


பண்டாரநாயக்க கல்லூரி, கம்பஹா எதிர் புனித ஜோசப் வாஸ் கல்லூரி, வென்னப்புவ

பண்டாரநாயக்க கல்லூரி முதல் இன்னிங்சுக்காக பெற்றுக்கொண்ட 158 ஓட்டங்களுக்கு பதிலாக களமிறங்கிய புனித ஜோசப் வாஸ் கல்லூரி 40.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 92 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. அந்த வகையில் 66 ஒட்டங்களால் முன்னிலை பெற்ற நிலையில் இரண்டாம் இன்னிங்சுக்காக துடுப்பாடிய பண்டாரநாயக்க கல்லூரி 148 ஓட்டங்களைப் பெற்று வெற்றி இலக்காக 214 ஓட்டங்களை நிர்ணயித்தது.

சிறப்பாக துடுப்பாடிய ஹிமத் ஜயவீர ஆட்டமிழக்காமல் 58 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். நிபுன் தனஞ்சய 72 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அந்த வகையில் கடின இலக்கை நோக்கி களமிறங்கிய ஜோசப் வாஸ் கல்லூரி 130 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 84 ஓட்டங்களால் தோல்வியுற்றது. வெற்றிக்கு வழி வகுத்த ஹசித்த திமல் 29 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

போட்டியின் சுருக்கம்

பண்டாரநாயக்க கல்லூரி, கம்பஹா (முதல் இன்னிங்ஸ்): 158 (57.5) – சசிரி அதிகாரி 58, சிசித மதநாயக்க 32, நிபுன் தனஞ்சய 5/45, ஷெஹார ரணதுங்க 2/49

புனித ஜோசப் வாஸ் கல்லூரி, வென்னபுவ (முதல் இன்னிங்ஸ்): 92 (40.1) – திலான் பிரதீப 33, கிரிஷான் அப்புஹாமி 18, அறோஷ மதுஷான் 6/26  

பண்டாரநாயக்க கல்லூரி, கம்பஹா (இரண்டாம் இன்னிங்ஸ்): 148 (55.4) – ஹிமத் ஜயவீர 58*, சசிரி அதிகாரி 24, சிசித மதநாயக்க 22, நிபுன் தனஞ்சய 6/72

புனித ஜோசப் வாஸ் கல்லூரி, வென்னபுவ (இரண்டாம் இன்னிங்க்ஸ்): 130 (42.4) – அஞ்சன ருக்மல் 66, இஷான் சந்தருவன் 25, ஹசித்த திமல் 6/29

போட்டி முடிவு: பண்டாரநாயக்க கல்லூரி 84 ஓட்டங்களால் வெற்றி


ஆனந்த கல்லூரி, கொழும்பு எதிர் தர்மராஜ கல்லூரி, கண்டி

இவ்விரு அணிகளுக்கிடையிலான போட்டி இன்றைய தினம் கொழும்பு ஆனந்த கல்லூரி மைதானத்தில் ஆரம்பித்தது. நாணய சுழற்ற்சியில் வெற்றி பெற்ற ஆனந்த கல்லூரி தமது சொந்த மண்ணில் களமிறங்கி முதல் இன்னிங்சுக்காக 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 335 ஓட்டங்களை பெற்று ஆட்டத்தை நிறுத்திக்கொண்டது.

சிறப்பாக துடுப்பாடிய கவிஷ்க அஞ்சுல 105 ஓட்டங்களை கூடிய ஓட்டங்களாக பதிவு செய்தார். அதேநேரம் பந்துவீச்சில் கிஹான் விதார 141 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் முதல் இன்னிங்சுக்காக களமிறங்கிய தர்மராஜ கல்லூரி இன்றைய நாள் ஆட்ட நேர நிறைவின் போது 83 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து நெருக்கடியில் இருக்கிறது.

போட்டியின் சுருக்கம்

ஆனந்த கல்லூரி, கொழும்பு (முதல் இன்னிங்ஸ்): 335/8d (63) – கவிஷ்க அஞ்சுல 105, அசெல் சிகர 93, சுபுன் வாரகோட 57*, சம்மு அஷான் 31, கிஹான் விதார 5/141, நவிது தில்ஷான் 2/35

தர்மராஜ கல்லூரி, கண்டி (முதல் இன்னிங்ஸ்): 83/7 (31.5) – தேஷான் குணசிங்க 40, சஹன் சுரவீர 2/15, சம்முu அஷான் 2/20