இன்னிங்ஸ் தோல்வியில் இருந்து தப்பித்துக்கொண்ட ஸாஹிரா கல்லூரி

358

19 வயதுக்குட்பட்ட பாடசாலை அணிகளுக்கு இடையிலான இரண்டு நாட்கள் கொண்ட சிங்கர் கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று ஐந்து போட்டிகள் முடிவடைந்தன.

ஸாஹிரா கல்லூரி எதிர் புனித சில்வஸ்டர் கல்லூரி, கண்டி

பல்லேகல சிறைச்சாலை மைதானத்தில் முடிவடைந்த இந்தப் போட்டி சமநிலை அடைந்தது.

நேற்று ஆரம்பமான போட்டியின் முதல் நாளில் புனித சில்வஸ்டர் கல்லூரி அணியின் அபாரமான முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை (301) அடுத்து தங்களுடைய முதல் இன்னிங்சில் ஸாஹிரா வீரர்களுக்கு 162 ஓட்டங்களை மாத்திரமே குவிக்க முடிந்தது. வலதுகை சுழல் வீரரான மனோகரன் பவித்ரன் 6 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார்.

மாலிங்கவை விடுவித்துள்ள மும்பை அணி

2018ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (IPL)…

ஸாஹிரா கல்லூரிக்கு அவர்களது முதல் இன்னிங்சில் சேர்த்த ஒட்டங்கள் போதாமை காரணமாக மீண்டும் இரண்டாம் இன்னிங்சினை ஆரம்பித்தனர். இன்னிங்ஸ் தோல்வியினை தவிர்க்க ஸாஹிராவுக்கு  139 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில், போராட்டமான முறையில் செயற்பட்ட வலதுகை துடுப்பாட்ட வீரர் மொஹமட் ஷமாசின் ஆட்டத்தினால் ஸாஹிரா இரண்டாம் இன்னிங்சில் 268 ஓட்டங்களினை குவித்தது. ஷமாஸ் இந்தப் பருவகாலத்தில் தனது முதலாவது சதத்தினை (113) ஸாஹிராவின் துடுப்பாட்டத்தில் பெற்றுத்தந்தார். மறுமுனையில் மீண்டும் மனோகரன் பவித்ரன் 4 விக்கெட்டுக்களை சில்வஸ்டர் கல்லூரிக்காக சாய்த்திருந்தார்.

ஸாஹிரா கல்லூரியின் இரண்டாம் இன்னிங்சினை அடுத்து 130 ஓட்டங்கள் போட்டியில் வெற்றி பெற புனித சில்வஸ்டர் கல்லூரிக்கு தேவைப்பட்டிருந்தது. இதனைப்பெற இரண்டாம் இன்னிங்சில் ஆடிய அவர்கள் போட்டியின் ஆட்ட நேரம் முடிவடையும் போது 69 ஓட்டங்களை விக்கெட் இழப்புக்கள் ஏதுமின்றி குவித்திருந்தனர்.

போட்டியின் சுருக்கம்

புனித சில்வஸ்டர் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 301/8d (75) நதீர பாலசூரிய 75, மஞ்சித் ராஜபக்ஷ 46, C. ஹிரோஷன் 41, லசித் நிர்மல் 3/63, ரித்மிக்க நிமேஷ் 3/70

ஸாஹிரா கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 162 (46.1) சத்துர தில்ருக்ஷன் 52, மொஹமட் சஹதுல்லா 32, மனோகரன் பவித்ரன் 6/46

ஸாஹிரா கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்) f/o – 268 (59.4) மொஹமட் ஷமாஸ் 113, தில்சார சமிந்த 43, மொஹமட் சஹதுல்லா 26, மனோகரன் பவித்ரன் 4/107

புனித சில்வஸ்டர் கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்) – 69/0 (4)


ரிச்மண்ட் கல்லூரி எதிர் புனித தோமியர் கல்லூரி, மாத்தறை

உயனவத்தை மைதானத்தில் முடிவடைந்த இந்தப் போட்டியில் காலி ரிச்மண்ட் கல்லூரி இன்னிங்ஸ்  மற்றும் 62 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

ரிச்மண்ட் கல்லூரியின் முதலாம் இன்னிங்சினை (199) அடுத்து தம்முடைய முதல் இன்னிங்சில் ஆடிய மாத்தறையின் இளம் வீரர்கள் 67 ஓட்டங்களினை மாத்திரமே பெற்றனர். இதனால் பலோவ் ஒன் நிர்ப்பந்தத்துக்கு ஆளாகிய தோமியர் கல்லூரி வீரர்களுக்கு இரண்டாம் இன்னிங்சிலும் சிறப்பாக செயற்பட முடியவில்லை. இம்முறை 70 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து அவர்கள் இன்னிங்ஸ் தோல்வியினை தழுவினர்.  

அகலங்க கனேகமவின் பந்துவீச்சால் தமிழ் யூனியனுக்கு நெருக்கடி

இலங்கை கிரிக்கெட் சபை நடத்தும் 2017/18 ஆம்…

ரிச்மண்ட் கல்லூரியின் இந்த வெற்றிக்கு வலதுகை சுழல் வீரர் சதுன் மெண்டிஸ் மொத்தமாக 10 விக்கெட்டுக்களை கைப்பற்றி உதவியிருந்ததோடு, அதித்யா சிறிவர்த்தன (57) மற்றும் ஆகாஷ் கவிந்த (55) ஆகியோரும் முதல் இன்னிங்சில் அரைச்சதங்களை கடந்து தங்களது பங்களிப்பினை தந்திருந்தனர்.

போட்டியின் சுருக்கம்

ரிச்மண்ட் கல்லூரி (முதல் இன்னிங்ஸ் ) – 199 (61.2) அதித்யா சிரிவர்த்தன 57, ஆகாஷ் கவிந்த 55, கிசாந்திக ஜயவீர 3/34

புனித தோமியர் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 67 (47.1) வோஷித அமரசிங்க 20, சதுன் மெண்டிஸ் 6/13, திலும் சுதீர 3/18

புனித தோமியர் கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்) f/o – 70 (38.4) தருஷ கவிந்த 26, சதுன் மெண்டிஸ் 4/21, கவிஷ அபிஷேக் 4/26


தர்மபால கல்லூரி எதிர் குருகுல கல்லூரி

கொழும்பின் இரண்டு பாடசாலைகள் பங்குபற்றிய குழு C இற்கான இந்தப் போட்டியில் தர்மபால கல்லூரி 4 விக்கெட்டுக்களால் குருகுல கல்லூரியினை தோற்கடித்தது.

நேற்று பண்டாரகம மைதானத்தில் தொடங்கிய இந்தப் போட்டியில் முதல் நாளிலேயே குருகுல கல்லூரியும் (139), தர்மபால கல்லூரியும் (94) தங்களுடைய முதல் இன்னிங்சுகளை முடித்திருந்தன. முதல் நாள் நிறைவில் தமது இரண்டாம் இன்னிங்சில் ஆடிய குருகுல வீரர்கள் வெறும் 19 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்தனர்.  

இதனையடுத்து போட்டியின் இன்றைய நாளில் தமது இரண்டாம் இன்னிங்சை தொடர்ந்த குருகுல வீரர்களுக்கு 90 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது. குருகுல கல்லூரியின் இரண்டாம் இன்னிங்சினை அடுத்து தர்மபால கல்லூரிக்கு வெற்றி இலக்காக இரண்டாம் இன்னிங்சில் 136 ஓட்டங்கள் பதிலுக்கு தேவைப்பட்டிருந்தது. இந்த இலக்கினை 6 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்த நிலையில் அவர்கள் அடைந்தனர்.

தர்மபால கல்லூரியின் வெற்றிக்கு மொத்தமாக 7 விக்கெட்டுக்களை வீழ்த்தி டில்சான் டி சில்வா உதவியிருந்தார்.

போட்டியின் சுருக்கம்

குருகுல கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 139 (43.4) ப்ருத்துவி ருசார 62, டில்சான் டி சில்வா 3/19, துலாஜ் எகோடொகே 3/29, சமிந்து சமரசிங்க 3/51

தர்மபால கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 94 (33.3) குசங்க பீரிஸ் 25, யுஷான் மலித் 3/25

குருகுல கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்) – 90 (32) இமந்த ஷேஹன் 27, டில்சான் டி சில்வா 4/20, துலாஜ் எகோடகே 3/20, சமிந்து சமரசிங்க 3/48

தர்மபால கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்) – 138/6 (29) அவிஷ்க ஹசரிந்து 40, மலித் சந்தகலும் 38, நுவான் சானக்க 2/24


லும்பினி கல்லூரி எதிர் டி மெசனோட் கல்லூரி

லும்பினி கல்லூரி மற்றும் கந்தானை டி மெசனோட் கல்லூரி அணிகளுக்கு இடையிலான இந்தப் போட்டி சமநிலை அடைந்தது.

மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரிக்கு இன்னிங்ஸ் வெற்றி

சிங்கர் நிறுவன அனுசரணையில்…

மெசனோட் கல்லூரியின் சொந்த மைதானத்தில் நேற்று தொடங்கிய இந்தப் போட்டியில் லும்பினி கல்லூரியின் மலைபோன்ற முதல் இன்னிங்சை (314) அடுத்து துடுப்பாடிய டி மெசனோட் கல்லூரி 193 ஓட்டங்களை தங்களது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தில் பெற்றுக்கொண்டது. மெசனோட் கல்லூரியின் சார்பாக மிதில கீத் மற்றும் செமில் குணவர்தன ஆகியோர் அரைச்சதம் விளாச மறுமுனையில் லும்பினி கல்லூரி சார்பாக விமுக்தி குலதுங்க 6 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார்.

டி மெசனோட் கல்லூரி அணி முதல் இன்னிங்சில் பெற்ற ஓட்டங்கள் போதாது என்பதனால் மீண்டும் துடுப்பாட எதிரணியினால் நிர்ப்பந்திக்கப்பட்டது. அந்தவகையில் இரண்டாம் இன்னிங்சில் ஆடிய அவர்கள் சாலிய ஜூட் பெற்றுக்கொண்ட அபார சதத்துடன் (111) 67 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 317 ஓட்டங்களினை பெற்று வலுவாக காணப்பட்டிருந்த போது போட்டியின் ஆட்ட நேரம் முடிவடைந்தது. இதனால் ஆட்டம் சமநிலை அடைந்தது.

போட்டியின் சுருக்கம்

லும்பினி கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 314 (66.3) ரன்மல் பெர்னாந்து 96, லகிந்து உபேந்திர 53, ரோமல் பெர்னாந்து 6/91

டி மசனோட் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 193 (54.2) மிதில கீத் 77, செமில் குணவர்த்தன 47, விமுக்தி குலதுங்க 6/57

டி மசனோட் கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்) f/o – 317/9 (67) சாலிய ஜூட் 111, மிதில கீத் 78, பிரவீன் பொன்சேக்கா 56, விமுக்தி குலத்துங்க 3/78