அசேல் சிகரவின் அபார பந்து வீச்சுடன் இன்னிங்ஸ் வெற்றியை தமதாக்கிய ஆனந்த கல்லூரி

301
U19 Schools Cricket

பாடசாலை கிரிக்கெட் அணிகள் பங்குபெறும் 19 வயதிற்கு உட்பட்ட சிங்கர் கிரிக்கெட் தொடரில் இன்று நிறைவுற்ற போட்டியொன்றில், சுழல் பந்து வீச்சாளர் அசேல் சிகர தனது முழுத் திறமையினையும் வெளிப்படுத்தி பல விக்கெட்டுக்கள் சாய்த்தமையின் காரணமாக ஆனந்த கல்லூரி, திரித்துவ கல்லூரி அணியினை இன்னிங்ஸ் மற்றும் 104 ஓட்டங்களினால் வீழ்த்தியுள்ளது.

அபார சதம் கடந்த சந்தருவன், சுரவீர: முதல் நாளில் வலுப்பெற்றுள்ள ஆனந்த மற்றும் நாலந்த கல்லூரிகள்

பாடசாலை அணிகளுக்கு இடையிலான சிங்கர் கிரிக்கெட் தொடரில் இன்று ஆரம்பமாகிய 4 போட்டிகளில்…

கண்டி திரித்துவ கல்லூரி எதிர் ஆனந்த கல்லூரி

பல்லேகல சர்வதேச மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியின் இரண்டாம் நாளான இன்று 61 ஓட்டங்களிற்கு 5 விக்கெட்டுக்களை இழந்தவாறு தமது ஆட்டத்தினை தொடர்ந்த திரித்துவ கல்லூரி அணி, மோசமான துடுப்பாட்டத்தினால் 102 ஓட்டங்களிற்கு சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து தமது முதல் இன்னிங்சினை முடித்துக்கொண்டது.

இதில், திரித்துவ கல்லூரியின் சார்பாக துடுப்பாட்டத்தில் சனோகீத் சண்முகநாதன் அதிகபட்சமாக 26 ஓட்டங்களினைப் பெற்றுக்கொண்டதுடன், பந்து வீச்சில் ஆனந்த கல்லூரியின் சமிக்க குணசேகர, அசேல் சிகர ஆகியோர் சிறப்பாக செயற்பட்டு 3 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றியிருந்தனர்.

பின்னர், ஆனந்த கல்லூரி முதல் இன்னிங்சில் பெற்றுக்கொண்ட (333) ஓட்டங்கள் காரணமாக, பலோவ் ஒன் முறையில் மீண்டும் தமது இரண்டாவது இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை ஆரம்பம் செய்த திரித்துவ கல்லூரி, இடது கை சுழல் பந்து வீச்சாளர் அசேல் சிகரவின் சுழலில் சிக்குண்டு 127 ஓட்டங்களினை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

இதனால், இப்போட்டியில் திரித்துவ கல்லூரி அணி இன்னிங்ஸ் மற்றும் 104 ஓட்டங்களினால் ஆனந்தவிடம் தோல்வியினை தழுவியது. இந்த இன்னிங்சில் திரித்துவ கல்லூரி சார்பாக அதிகபட்சமாக சணுக்க பண்டார 29 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.

பந்து வீச்சில் சிறப்பாக செயற்பட்டிருந்த சிகர வெறும் 39 ஓட்டங்களிற்கு 6 விக்கெட்டுக்களை மடக்கியிருந்தார்.

போட்டியின் சுருக்கம்

ஆனந்த கல்லூரி(முதல் இன்னிங்ஸ்): 333/6d (60) சஹான் சுரவீர 121, கவிஷ்க அஞ்சுல 78, துஷான் ஹெட்டிகே 44, திரவென் பெர்சிவேல் 4/83

திரித்துவ கல்லூரி (முதல் இன்னிங்ஸ்): 102 (47.4) சனோகீத் சண்முகநாதன் 26, திரவேன் பெர்சிவேல் 20, சமிக்க குணசேகர 3/10, அசேல் சிகர 3/24,திலிப ஜயலத் 2/1, சுப்புன் வரகொட 2/20

திரித்துவ கல்லூரி f/o (இரண்டாவது இன்னிங்ஸ்): 127 (49) சனுக்க பண்டார 29, சனோகீத் சண்முகநாதன் 27, அசேல் சிகர 6/39

போட்டி முடிவுஆனந்த கல்லூரி இன்னிங்ஸ் மற்றும் 104 ஓட்டங்களினால் வெற்றி


ஸாஹிரா கல்லூரி எதிர் டி.எஸ் சேனநாயக்க கல்லூரி

போட்டியின் இரண்டாவது நாளில், 106 ஓட்டங்களிற்கு 7 விக்கெட்டுக்களை இழந்தவாறு தமது ஆட்டத்தினை தொடர்ந்த டி.எஸ் சேனநாயக்க கல்லூரியானது தமது முதல் இன்னிங்சில், சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 125 ஓட்டங்களினை மாத்திரம் பெற்றுக்கொண்டது.

அவ்வணி சார்பாக செஹ்ஷாத் அமீன் அதிகபட்சமாக 38 ஓட்டங்களினைப் பெற்றுக்கொண்டதுடன், ஸாஹிராவின் மஹ்தி நமீஷ் , சஜீத் சமிர ஆகியோர் தலா நான்கு விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தனர்.

பின்னர், மைதானம் நோக்கி விரைந்த ஸாஹிரா அணியானது விஹான் குணசேகரவின் அதிரடி சுழலில் சிக்கி 114 ஓட்டங்களினை மாத்திரமே தமது இரண்டாவது இன்னிங்சுக்காக பெற்றுக்கொண்டது. துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக மொஹமட் சஹதுல்லா 29 ஓட்டங்களினை குவித்ததுடன், முன்னர் பந்து வீச்சில் சிறப்பாக செயற்பட்ட டி.எஸ் சேனநாயக்காவின் விஹான் குணசேகர மொத்தமாக 30 ஓட்டங்களிற்கு 7 விக்கெட்டுக்களை சாய்த்தார்.

பின்னர், வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 117  ஓட்டங்களினைப் பெறுவதற்கு களமிறங்கிய டி.எஸ் சேனநாயக்க கல்லூரியானது 4 விக்கெட்டுக்களை இழந்தவாறு வெற்றியிலக்கினை கடந்தது. இவ்வெற்றியலக்கினை கடக்க ஏற்கனவே பந்து வீச்சில் சிறப்பாக செயற்பட்ட.

விஹான் குணசேகர ஆட்டமிழக்காமல் 40   ஓட்டங்களினைப்பெற்றுஉதவினார்.

போட்டி சுருக்கம்

ஸாஹிரா கல்லூரி(முதல் இன்னிங்ஸ்): 127 (46.4) சஜீத் சமீர 24, தில்ஹான் ரமீஷ்  23, தத்சார பண்டார 3/15, கீதாஞ்ச  டேனியல்   2/15, விஹான் குணசேகர 2/19,  முதிதலக்ஷன் 2/33

டி.எஸ் சேனநாயக்க கல்லூரி(முதல் இன்னிங்ஸ்): 125 (54.1) செஹ்ஷாத் அமீன் 38,  விஹான் குணசேகர 30, மஹ்தி நமீஷ் 4/33, சஜித் சமீர 4/33

ஸாஹிரா கல்லூரி(இரண்டாவது இன்னிங்ஸ்): 114 (36.2) மொஹமட்  சஹதுல்லா  29, மொஹமட் ஹஷ்மி 25*, விஹான் குணசேகர 7/30

டி.எஸ் சேனநாயக்க கல்லூரி(இரண்டாவது இன்னிங்ஸ்): 117/4 (42.4)  விஹான்குணசேகர 40*, செஹ்ஷாத் அமீன் 27*, மொஹமட் ஹஸ்னி 2/24, சஜீத் சமிர 2/24

போட்டி முடிவு  டி.எஸ் சேனநாயக்க கல்லூரி 6 விக்கெட்டுக்களால் வெற்றி


கண்டி தர்மராஜ கல்லூரி எதிர் நாலந்த கல்லூரி

குழு A இற்கான இப்போட்டியின் இரண்டாம் நாளினை 3 விக்கெட்டுக்களை இழந்து 67 ஓட்டங்களினைப் பெற்றவாறு தொடர்ந்த தர்மராஜ கல்லூரி, நிவந்த ஹேரத்தின் அரைச்சதத்துடன் (59) 225 ஓட்டங்களினை தமது முதல் இன்னிங்சுக்காக குவித்துக்கொண்டது. பந்து வீச்சில் திறமையினை காட்டிய நாலந்த கல்லூரியின் அசேல குலத்துங்க 4 விக்கெட்டுக்களை தன்வசப்படுத்தினார்.

முதல் இன்னிங்சுக்காக பெற்ற ஓட்டங்கள் போதாது என்பதனால், மீண்டும் இரண்டாவது இன்னிங்சினை ஆரம்பித்த கண்டி தர்மராஜ கல்லூரி அணியானது 8 விக்கெட்டுக்களை பறிகொடுத்து 169 ஓட்டங்களினைப் பெற்றிருந்த போது, போட்டியின் ஆட்ட நேரம் நிறைவுற்றது.

இதனால் இப்போட்டி சமநிலை அடைய, புனித அந்தோனியர் கல்லூரியிடம் தமது இறுதிப் போட்டியில் தோல்வியடைந்திருந்த நாலந்த கல்லூரி அணி, இந்த ஆட்டத்தில் முதல்  இன்னிங்ஸ் வெற்றியினை சுவீகரித்துக்கொண்டது.

இந்த இன்னிங்சில், தர்மராஜாவின் துடுப்பாட்டத்தில் ஏனையோரை விட அதிகமாக கசுன் குணவர்தன 39 ஓட்டங்களினைப் பெற்றார். பந்து வீச்சில் அசத்தியிருந்த உமேக்ஷ தில்ஷான் 5 விக்கெட்டுக்களை நாலந்தாவிற்காக கைப்பற்றியிருந்தார்

போட்டியின் சுருக்கம்

நாலந்த கல்லூரி(முதல் இன்னிங்ஸ்): 387/9d (74.4) கசுன் சந்தருவன் 127, லக்ஷித ரன்ஜன 88, கலான பத்தியராச்சி 52, சுஹங்க விஜயவர்த்தன 40, கிஹான் விதாரன 4/117, சத்துரங்க அலுதெனிய 2/43

தர்மராஜ கல்லூரி(முதல் இன்னிங்ஸ்): 225 (61.4)  நிவந்த ஹேரத் 59, பவந்த உடன்கம 41, அசேல குலத்துங்க 4/48

தர்மராஜ கல்லூரி f/o (இரண்டாவது இன்னிங்ஸ்): 169/8 (63) கசுன் குணவர்த்தன 39, உமேக்ஷ தில்ஷான் 5/49, அசேல் குலத்துங்க 2/49

போட்டி முடிவுபோட்டி சமநிலையில் நிறைவுற்றது. நாலந்த கல்லூரிக்கு முதல் இன்னிங்ஸ் வெற்றி  


குருகுல கல்லூரி எதிர் பண்டாரநாயக்க கல்லூரி

இப்போட்டியின் இறுதி நாளான இன்று, 175 ஓட்டங்களிற்கு 4 விக்கெட்டுக்களை இழந்தவாறு ஆட்டத்தினைத் தொடர்ந்த குருகுல கல்லூரி, உதார ரவிந்து (84) மற்றும் அசிந்த மல்ஷான் (68) ஆகியோரின் அரைச் சதங்களின் உதவியுடன் 9 விக்கெட்டுக்களை இழந்து 277 ஓட்டங்களினை குவித்திருந்த போது தமது முதல் இன்னிங்சினை இடைநிறுத்திக்கொண்டது.

பந்து வீச்சில் சிறப்பாக செயற்பட்டிருந்த கம்பஹா பண்டாரநாயக்க கல்லூரியின் இளம் வீரரான அரோஷ மதுஷன் நான்கு விக்கெட்டுக்களை சாய்த்திருந்தார்.

பின்னர், தமது இரண்டாவது இன்னிங்சினை ஆரம்பித்த பண்டாரநாயக்க கல்லூரி சிறப்பாக ஆடி சசிரி அதிகாரி பெற்றுக்கொண்ட 88 ஓட்டங்களின் துணையுடன் 9 விக்கெட்டுக்களை இழந்து 235 ஓட்டங்களினைப்பெற்றிருந்த போது தமது ஆட்டத்தினை இடைநிறுத்திக்கொண்டது.

இந்த இன்னிங்சில் ஏற்கனவே துடுப்பாட்டத்தில் சிறப்பாக செயற்பட்ட குருகுல கல்லூரியின் உதார ரவிந்து ஆறு விக்கெட்டுக்களை சாய்த்தார்.

பின்னர், வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 155 ஓட்டங்களினைப் பெறுவதற்கு களமிறங்கிய குருகுல கல்லூரி, 3 விக்கெட்டுக்களை இழந்து 62 ஓட்டங்களினைப் பெற்றிருந்த போது, போட்டியின் ஆட்ட நேரம் நிறைவுற்றது. இதனால் இப்போட்டி சமநிலையில் நிறைவுற தமது இறுதிப் போட்டியில், புனித சில்வெஸ்டர் கல்லூரிக்கு அதிர்ச்சயளித்த குருகுல கல்லூரி, முதல் இன்னிங்ஸ் வெற்றியினைப் பெற்றுக்கொண்டது.

போட்டி சுருக்கம்

பண்டாரநாயக்க கல்லூரி(முதல் இன்னிங்ஸ்): 196 (57.3) மதவ்வ சத்சார 56, ஹச்சித திமல் 39, அரோஷ் மதுஷன் 33, ப்ருதுவி ருசார 3/50, பத்தும் மகேஷ் 2/16, பிரவீன் நிமேஷ் 2/22, உதார ரவிந்து 2/39

குருகுல கல்லூரி(முதல் இன்னிங்ஸ்): 277/9d (59.5) உதார ரவிந்து 84, அசிந்த மல்ஷன் 68, அரோஷ மதுஷன் 4/39, சசிரி அதிகாரி 2/33

பண்டாரநாயக்க கல்லூரி(இரண்டாவது இன்னிங்ஸ்): 235/9d (61) சசிரி அதிகாரி 88, பசிந்து பண்டார 38, உதார ரவிந்து 6/62

குருகுல கல்லூரி(இரண்டாவது இன்னிங்ஸ்): 62/3 (11)

போட்டி முடிவுபோட்டி சமநிலை அடைந்தது. குருகுல கல்லூரியிற்கு முதல் இன்னிங்ஸ் வெற்றி