சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையோடு நடைபெறும் 19 வயதுக்கு உட்பட்ட பாடசாலை அணிகளுக்கு இடையிலான சிங்கர் கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று மூன்று போட்டிகள் முடிவடைந்தது.
ஜனாதிபதி கல்லூரி, கோட்டே எதிர் மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி, நீர்கொழும்பு
நீர்கொழும்பு மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரியின் சொந்த மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் ஜனாதிபதி கல்லூரி மாரிஸ் ஸ்டெல்லாவிடம் இன்னிங்ஸ் மற்றும் 149 ஓட்டங்களால் படுதோல்வி அடைந்தது.
போட்டியின் முதல் இன்னிங்சில் நேற்று (29) ஜனாதிபதி கல்லூரியின் ஆட்டத்தை அடுத்து லசித் குரூஸ்புல்லே பெற்ற அபார சதத்துடன் மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி அணி பிரம்மிக்க வைக்கும் வகையில் 58 ஓவர்களில் 413 ஓட்டங்களை முதல் இன்னிங்சில் பெற்றது. 225 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாம் இன்னிங்சைத் தொடங்கிய ஜனாதிபதி கல்லூரி வீரர்கள் 70 ஓட்டங்களை மட்டுமே குவித்து படுதோல்வியடைந்தனர். ஜனாதிபதி கல்லூரிக்கு பந்துவீச்சில் மிரட்டிய பசிந்து உஸ்செட்டி 6 விக்கெட்டுக்களை சுருட்டி மாரிஸ் ஸ்டெல்லா வீரர்களுக்கு அபார வெற்றி ஒன்றினை சுவைக்க வைத்தார்.
போட்டியின் சுருக்கம்
ஜனாதிபதி கல்லூரி, கோட்டே (முதல் இன்னிங்ஸ் ) – 194 (52.3) – றிபாஸ் மெளரூஸ் 43*, ஹிரும சிகெரா 41, கெவின் பெரேரா 3/19, பசிந்து உஸ்செட்டி 3/34
மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி, நீர்கொழும்பு (முதல் இன்னிங்ஸ்) – 413 (58) – லசித் குரூஸ்புல்லே 104, ரவிந்து பெர்னாந்து 54, ரொஷேன் பெர்னாந்து 48, சத்துர அனுராத 46, கெவின் பெரேரா 33, விமுக்தி லங்கா 4/79
ஜனாதிபதி கல்லூரி, கோட்டே (இரண்டாம் இன்னிங்ஸ்) – 70 (16) – பசிந்து உஸ்செட்டி 6/34, அவிஷ கேஷன் 3/09
முடிவு – மாரிஸ் ஸ்டெல்லா இன்னிங்ஸ் மற்றும் 149 ஓட்டங்களால் வெற்றி
றோயல் கல்லூரி, கொழும்பு எதிர் தர்மராஜ கல்லூரி, கண்டி
கண்டி தர்மராஜ கல்லூரியின் சொந்த மைதானத்தில் வைத்து அந்தக் கல்லூரியை றோயல் வீரர்கள் இன்னிங்ஸ் மற்றும் 31 ஓட்டங்களால் தோற்கடித்தனர்.
றோயல் கல்லூரியின் அபார (301) முதல் இன்னிங்சை அடுத்து போட்டியின் இரண்டாம் நாளில் தர்மராஜ கல்லூரியினர் 98 ஓட்டங்களை முதல் இன்னிங்சிலும் பலோவ் ஒன் (follow on) முறையில் மீண்டும் துடுப்பாடி 172 ஓட்டங்களை இரண்டாம் இன்னிங்சிலும் பெற்று இன்னிங்ஸ் தோல்வியைத் தழுவினர்.
அமீனின் அபாரப் பந்து வீச்சோடு பேதுரு கல்லூரிக்கு வெற்றி
தர்மராஜ கல்லூரியைக் கட்டுப்படுத்துவதில் சிறப்பாக செயற்பட்ட றோயல் கல்லூரி பந்துவீச்சாளர்களான கமில் மிஷார மற்றும் மனுல பெரேரா ஆகியோர் தம்மிடையே மொத்தமாக 17 விக்கெட்டுக்களைப் பகிர்ந்திருந்தனர்.
போட்டியின் சுருக்கம்
றோயல் கல்லூரி, கொழும்பு (முதல் இன்னிங்ஸ்) – 301 (66.3) – கவிந்து செனாரத்ன 115, பாக்ய திசாநாயக்க 68, கயான் திசநாயக்க 52, நவிந்து டில்ஷான் 3/57
தர்மராஜ கல்லூரி, கண்டி (முதல் இன்னிங்ஸ்) – 98 (44) – கசுன் குணவர்த்தன 32, கமில் மிஷார 6/20, மனுல பெரேரா 4/25
தர்மராஜ கல்லூரி, கண்டி (இரண்டாம் இன்னிங்ஸ்) f/o – 172 (42.4) – பவந்த உடுகமுவ 43, மனுல பெரேரா 4/69, காமில் மிஷார 3/46, லஹிரு மதுஷங்க 2/39
முடிவு – ரோயல் கல்லூரி இன்னிங்ஸ் மற்றும் 31 ஓட்டங்களால் வெற்றி
ஆனந்த கல்லூரி, கொழும்பு எதிர் தர்மபால கல்லூரி, பன்னிபிட்டிய
ஆனந்த கல்லூரியின் சொந்த மைதானத்தில் முடிவுற்ற இப்போட்டியில் தர்மபால கல்லூரியை 131 ஓட்ட வித்தியாசத்தில் ஆனந்த கல்லூரி வீழ்த்தியது.
போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தில் 106 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்தவாறு தமது இரண்டாம் இன்னிங்சை தொடர்ந்த ஆனந்த கல்லூரி 225 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்ட போது இரண்டாம் இன்னிங்சை முடித்துக் கொண்டது. ஆனந்த கல்லூரி சார்பான துடுப்பாட்டத்தில் துஷான் ஹெட்டிகே மற்றும் லஹிரு ஹிரன்ய ஆகியோர் அரைச்சதம் கடந்தனர்.
இதனையடுத்து, ஆனந்த கல்லூரியின் முதல் இன்னிங்ஸ் (136), தர்மபால கல்லூரியின் முதல் இன்னிங்ஸ் (42) என்பவற்றின் காரணமாக போட்டியின் வெற்றி இலக்காக 320 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது. இதனை அடைய இரண்டாம் இன்னிங்சில் ஆடிய தர்மபால கல்லூரியினர் 188 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியைத் தழுவினர். முதல் இன்னிங்சில் வெறும் 42 ஓட்டங்களுடன் சுருண்ட தர்மபால கல்லூரியை இம்முறை இருநூறு ஓட்டங்களுக்குள் மடக்க பிரதான பங்கு வகித்த ஆனந்த கல்லூரியின் அசெல் சிகெரா 47 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை சுருட்டினார்.
போட்டியின் சுருக்கம்
ஆனந்த கல்லூரி, கொழும்பு (முதல் இன்னிங்ஸ்) – 136 (48.4) – ஹசிந்து ஷாமிக 27*, டில்ஷான் டி சில்வா 4/34, சமிந்து சமரசிங்க 4/36
தர்மபால கல்லூரி, பன்னிபிட்டிய (முதல் இன்னிங்ஸ்) – 42 (16.2) ஷமல் ஹிருஷன் 6/10, துஷான் ஹெட்டிகே 3/07
ஆனந்த கல்லூரி, கொழும்பு (இரண்டாம் இன்னிங்ஸ்) – 225/5d (48) – துஷான் ஹெட்டிகே 59, லஹிரு ஹிரன்ய 50*, கனிஷ்க ரண்திலக்க 47
தர்மபால கல்லூரி, பன்னிபிட்டிய (இரண்டாம் இன்னிங்ஸ்) – 188 (51.4) – குஷங்க பீரிஸ் 68, அசெல் சிகெரா 5/47, தமிந்த ரேஷன் 3/13, கமிஷ் நிர்மல் 2/52
முடிவு – ஆனந்த கல்லூரி 131 ஓட்டங்களால் வெற்றி
புனித திரித்துவக் கல்லூரி, கண்டி எதிர் பண்டாரநாயக்க கல்லூரி, கம்பஹா
கண்டி அஸ்கிரிய மைதானத்தில் தொடங்கிய இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றியடைந்த கம்பஹா பண்டாரநாயக்க கல்லூரி முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தை திரித்துவக் கல்லூரிக்கு வழங்கியது.
முதலில் துடுப்பாடிய திரித்துவக் கல்லூரியினர் முதல் இன்னிங்சில் 178 ஓட்டங்களைக் குவித்தனர். கடந்த போட்டியில் திரித்துவக் கல்லூரிக்காக சதம் கடந்த அபிஷேக் ஆனந்தகுமார் இந்தப் போட்டியில் அரைச் சதம் (53) பெற்றார். பண்டாரநாயக்க கல்லூரி சார்பாக சஹிரு ரோஷன் 4 விக்கெட்டுக்களை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
பங்களாதேஷ் தொடருக்கான உத்தேச இலங்கை குழாம் அறிவிப்பு
பதிலுக்கு தமது முதல் இன்னிங்சை ஆரம்பித்த பண்டாரநாயக்க வீரர்கள் முதல் நாள் ஆட்ட நிறைவில் 131 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் காணப்படுகின்றனர். அரோஷ மதுஷான் பண்டாரநாயக்க கல்லூரிக்காக 61 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் நிற்கின்றார்.
போட்டியின் சுருக்கம்
திரித்துவக் கல்லூரி, கண்டி (முதல் இன்னிங்ஸ்) – 178 (57.4) – அபிஷேக் ஆனந்தகுமார் 53, சஹிரு ரோஷன் 4/12, ஜனிது ஜயவர்தன 3/47
பண்டாரநாயக்க கல்லூரி, கம்கஹா (முதல் இன்னிங்ஸ்) – 131/8 (46.5) – அரோஷ மதுஷான் 61*
போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நாளை தொடரும்.
டி. எஸ் சேனநாயக்க கல்லூரி, கொழும்பு எதிர் தர்ஸ்டன் கல்லூரி, கொழும்பு
தர்ஸ்டன் கல்லூரியின் சொந்த மைதானத்தில் தொடங்கிய இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றியடைந்த தர்ஸ்டன் கல்லூரி முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தை டி.எஸ் சேனநாயக்க கல்லூரிக்கு வழங்கியது.
முதலில் துடுப்பாடிய டி.எஸ் சேனநாயக்க கல்லூரி போதுமான ஓட்டங்களை முதல் இன்னிங்சில் பெறவில்லை. 163 ஓட்டங்களுடன் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தனர். அணியின் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக செனால் சந்த்ர 49 ஓட்டங்களை குவித்தார். மறுமுனையில் பந்துவீச்சில் சந்தரு டயஸ் 4 விக்கெட்டுக்களை தர்ஸ்டன் கல்லூரிக்காக கைப்பற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து சொந்த மைதானத்தில் தமது துடுப்பாட்டத்தை தொடங்கிய தர்ஸ்டன் கல்லூரி அணி போட்டியின் முதல் நாள் ஆட்ட முடிவில் 132 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து காணப்படுகின்றது. களத்தில் நிமேஷ் பெரேரா அரைச் சதம் (67*) ஒன்றுடன் ஆட்டமிழக்காமல் நிற்கின்றார்.
போட்டியின் சுருக்கம்
டி.எஸ். சேனநாயக்க கல்லூரி, கொழும்பு (முதல் இன்னிங்ஸ்) – 163 (45.5) – செனால் சந்த்ர 49, சந்தரு டயஸ் 4/42, அயெஷ் ஹர்ஷன 3/11
தர்ஸ்டன் கல்லூரி, கொழும்பு (முதல் இன்னிங்ஸ்) – 132/3 (36) – நிமேஷ் பெரேரா 67*, பசிந்து தேஷான் 30*
போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நாளை தொடரும்.