தர்ஸ்டன் மற்றும் திரித்துவக் கல்லூரி அணிகள் முன்னிலையில்

268
U19 Schools Roundup - 27th of Oct

19 வயதிற்கு உட்பட்டோருக்கான ‘சிங்கர்‘ கிரிக்கெட் தொடரில் இன்று ஆரம்பமான போட்டிகளில் கம்பஹா பண்டாரநாயக்க கல்லூரியை எதிர்த்து தர்ஸ்டன் கல்லூரியும், வெஸ்லி கல்லூரியை எதிர்த்து திரித்துவக் கல்லூரியும் போட்டியிட்டன.

பண்டாரநாயக்க கல்லூரி எதிர் தர்ஸ்டன் கல்லூரி

குழு ‘D’ இற்கான இப்போட்டியில், நாணய சுழற்சியை வென்ற தர்ஸ்டன் கல்லூரி எதிரணியை முதலில் துடுப்பெடுத்தாடும்படி பணித்தது. அற்புதமாக பந்து வீசிய சந்துரு டயஸ் 11 ஓட்டங்களை மாத்திரம் வழங்கி 5 விக்கெட்டுகளை வீழ்த்த, பண்டாரநாயக்க கல்லூரி 82 ஓட்டங்களுக்கே சுருண்டது.

தொடர்ந்து, தமது முதல் இன்னிங்சிற்காகக் களமிறங்கிய தர்ஸ்டன் கல்லூரி இன்றைய ஆட்ட நேர முடிவின் போது 8 விக்கெட்டுகளை இழந்து 191 ஓட்டங்களை பெற்று தமது ஆட்த்தை நிறுத்திக்கொண்டது. சரண நாணயக்கார அதிகபட்சமாக 44 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். பந்து வீச்சில் ஜனிது ஜயவர்தன 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

நாளை போட்டியின் இரண்டாவது நாளாகும்.

போட்டியின் சுருக்கம்

பண்டாரநாயக்க கல்லூரி – 82 (33.2)சந்துரு டயஸ் 5/11, துஷான் மதுஷங்க 2/19

தர்ஸ்டன் கல்லூரி – 191/8d (48.5) சரண நாணயக்கார 44, யேஷான் விக்ரமாராச்சி 37, ஜனிது ஜயவர்தன 3/41, பசிந்து பண்டார 2/18, சாசிரி அதிகாரி 2/27


வெஸ்லி கல்லூரி எதிர் திரித்துவக் கல்லூரி

இப்போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற வெஸ்லி கல்லூரி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. சிறப்பாக துடுப்பெடுத்தாடிய மோவின் சுபசிங்க 86 ஓட்டங்களையும், ஷமோத் அதுலத்முதலி 55 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்ட போதிலும், ஏனைய வீரர்கள் பெரிதாக சோபிக்காத நிலையில் வெஸ்லி கல்லூரி 208 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

பந்து வீச்சில் அசத்திய 16 வயது வீரர் நரேந்திரநாத் அசோக்குமார் 4 விக்கெட்டுக்களையும், திசரு டில்ஷான் 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

நாளை போட்டியின் இரண்டாவது நாளாகும்.

போட்டியின் சுருக்கம்

வெஸ்லி கல்லூரி – 208 (85.4) மோவின் சுபசிங்க 86, ஷமோத் அதுலத்முதலி 55, நரேந்திரநாத் அசோக்குமார் 4/43, திசரு டில்ஷான் 3/32, சுசில் ட்ரெவர் 2/11